என் மலர்
நீங்கள் தேடியது "பிரிக்ஸ் மாநாடு"
- இன்று முதல் 24-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம்
- 40 வருடத்திற்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்திய பிரதமர்
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று புறப்பட்டு செல்கிறார். இன்று முதல் 24-ந்தேதி வரை இந்த சுற்றுப் பயணம் மூன்று நாட்கள் கொண்டது. தென்ஆப்பிரிக்கா அதிபர் அழைப்பின் பேரின் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஜோகன்னஸ்பர்க்கில பல நாட்டின் பிரதமர்கள் மற்றும் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்து, அங்கிருந்து கிரீஸ் செல்கிறார். கிரீஸ் பிரதமர் அழைப்பின்பேரின் வருகிற 25-ந்தேதி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் சென்றடைகிறார்.
மிகவும் தொன்மையான நிலத்திற்கு முதல் முறையாக செல்ல இருக்கிறார். மேலும், 40 வருடத்திற்குப் பிறகு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- பிரிக்ஸ் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
- உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.
ஜோகனஸ்பர்க்:
தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடக்கிறது.
அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தார்.
ஜோகனஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும்.
இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
யு.பி.ஐ. தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது.
சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.
- பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ்.
- 16-வது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ரஷியாவில் நடைபெற உள்ளது
பிரேசிலியா:
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
ரஷியாவின் காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியானது. அங்கு உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
காயம் காரணமாக பிரேசில் அதிபர் பங்கேற்க மாட்டார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநாட்டில் பங்கேற்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷியா சென்றார்.
- ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாஸ்கோ:
பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் கருப்பொருள் 'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' ஆகும்.
இந்த மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஜி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சனைகள் குறித்து தலைவா்கள் கலந்துரையாட உள்ளனா்.
இதற்கிடையே, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ரஷியாவின் கசானுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், ரஷிய அதிபருடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி பேசியதாவது:
உக்ரைன்-ரஷியா மோதல் விவகாரத்திற்கு அமைதியான முறையில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும். மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளித்தே நமது அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 3 மாதங்களில் தனது 2-வது ரஷிய பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஆழமான நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது என தெரிவித்தார்.
- இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முறையான சந்திப்பை நடத்துகிறோம்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக இரு நாட்டு எல்லை பிரச்சினையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சீன அதிபரை சந்தித்த போது, இருநாடுகளின் எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதும், இருதரப்பு நம்பிக்கை தொடர்வதும் மிக முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், "ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முறையான சந்திப்பை நடத்துகிறோம். இந்தியா-சீனா உறவு நமது மக்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்."
"எல்லையில் கடந்த நான்கு ஆண்டுகளில் எழுந்துள்ள பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதை வரவேற்கிறோம். எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணுவது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர புரிதல் நம் உறவுகளின் அடிப்படையாக இருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
- மாநாடு முடிந்ததும் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
புதுடெல்லி:
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரில் நடைபெற்றது.
'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஜி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் தலைவர்கள் கலந்துரையாடினர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க தனி விமானத்தில் ரஷியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரஷிய அதிபர் புதினைச் சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகை தந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இது 5 ஆண்டுக்கு பிறகு இரு தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற முறையான இருதரப்பு பேச்சுவார்த்தை என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
- இந்தாண்டு சீனா தலைமையில் 14-வது பிரிக்ஸ் மாநாடு நாளை பீஜிங்கில் தொடங்குகிறது.
- சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
புதுடெல்லி:
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
இந்தாண்டு சீனா தலைமையில் 14-வது பிரிக்ஸ் மாநாடு நாளை பீஜிங்கில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும்படி சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீன அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை பிரிக்ஸ் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்து கொள்ள உள்ளார். அவருடன் ரஷிய அதிபர் புதின், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
மாநாட்டையொட்டி இன்று நடக்கும் வர்த்தக கூட்டத்தில் பிரதமர் மோடியின் அறிக்கை வாசிக்கப்படும்.
நாளை மறுநாள் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக உறுப்பு நாடுகளின் உயர்மட்டக் கூட்டம் நடக்க உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.