search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா வளர்மதி"

    • சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
    • பா.வளர்மதியின் தரப்பு வாதங்களை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

    புதுடெல்லி:

    2001-2006-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு, 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

    இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் டிசம்பர் 4-ந்தேதி வாதங்களை தொடங்க வேண்டுமென அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி தரப்பிற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த நவம்பர் 6-ந்தேதி உத்தரவிட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு கடந்த டிசம்பர் 1-ந் தேதி விசாரித்தது. பா.வளர்மதியின் தரப்பு வாதங்களை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

    இருப்பினும் விசாரணைக்கு பட்டியலிடவில்லை. இதையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் தனது விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சார்பில் முன்வைக்கப்பட்ட முறையீட்டை ஏற்ற சுப்ரீ்ம் கோர்ட்டு, ஜனவரி இறுதி வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளது.

    • ஆட்சி, அரசு நடைமுறைகளை பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    • கொள்ளையடித்த பணம் துபாயில் வெள்ளையாகி கொண்டிருக்கிறது.

    முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறுகையில், கண் தெரியாதவனுக்கு கமலக்கண்ணன், நாக்கு தடுமாறுகிறவனுக்கு நாவுக்கரசன் என்று பெயர் வைப்பது போல் ஆட்சி, அரசு நடைமுறைகளை பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தெரிந்த ஒரே நிர்வாகம் எங்கு பணம் எடுப்பது, அதை யாரிடம் எப்படி கொடுப்பது போன்ற தரகு வேலை பார்ப்பது மட்டும் தான். கொள்ளையடித்த பணம் துபாயில் வெள்ளையாகி கொண்டிருக்கிறது. இது தான். விஞ்ஞான ஊழல் என்பார்கள். குங்கும பொட்டோடும், கும்பிட்ட கையோடும் உறவாட வந்து பகையாடிய துரோகிகளை தோலுரித்து தொங்கவிட்டவர் எடப்பாடி பழனிசாமி.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிசாமி. கசாப்புக்கடைக்காரன் காந்தியம் பேசுவது போல, இந்த அதர்மவாதிகள் எல்லாம் தர்மயுத்தம் பற்றி பேசி வருகிறார்கள். அரிசி கேட்டு எம்.ஜி.ஆரும், காவிரி நதிநீர் கேட்டு ஜெயலலிதாவும் கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக யார் வந்தார்கள்? இப்போது மத்திய அரசிடம் நிதி வாங்க நம்ம தி.மு.க.வில் உள்ள கத்துக்குட்டிகள் எடப்படி பழனிசாமியை கூப்பிடுகிறார்கள் என்றார்.

    • லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக உள்ளது.
    • தனிப்பட்ட காரணங்களுக்காக நான் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை.

    சென்னை:

    அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:-

    லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

    முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணை அதிகாரி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில் விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்து வைக்க வேண்டும். ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

    கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை பொறுத்தவரை விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவும் ஐகோர்ட்டினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு கோர்ட்டு அவரை விடுவித்து இருக்கிறது.

    கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை எல்லாம் பார்க்கும்போது உண்மையில் நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். விடுதலையான, விடுவிக்கப்பட்ட இதுபோன்ற அரசியல்வாதிகளின் வழக்குகளை எல்லாம் மறு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளும் என்னை சிலர் வில்லனாக பார்க்கின்றனர். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக நான் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐகோர்ட்டு நீதிபதியின் இந்த கருத்து நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஐ.பெரியசாமி, கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தார்.
    • அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தார்.

    அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

    அதேபோல, 2001-2006-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு, கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவையும் மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த இரு வழக்குகளும் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

    இதே நீதிபதி, ஏற்கனவே அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் ஜனநாயக முறையில் பொதுக்குழுவை அமைதியாக நடந்து முடிந்து இருக்கிறது.
    • பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதியான முறையில் நடத்திக் காட்டுவார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி இன்று எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பா.வளர்மதி கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் அராஜகம் ஏதும் நடைபெறவில்லை. அராஜகம் என்றால் என்ன அர்த்தம் என்று புரிய வில்லை. தொண்டர்கள் அவர்களாகவே தலைவர்களின் வீடுகளுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அராஜகம் என்றால் என்னது. அர்த்தம் என்று புரியவில்லை. தொண்டர்கள் அவர்களாகவே தலைவர்களின் வீடுகளுக்கு வருகிறார்கள். அவர்களது ஆதரவை தெரிவித்து விட்டு செல்கிறார்கள்.

    ஒற்றை தலைமை வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. எனவே, பொதுக்குழுவை கூட்ட வேண்டும். சிறப்பான முறையில்பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்று தங்களின் ஆர்வத்தை தொண்டர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இது எப்படி அராஜகம் ஆகும் என்று எனக்கு தெரியவில்லை.

    அடாவடித்தனம் அராஜகம் என்பது வேறு, அமைதியான முறையில் ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு. 1972-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய போது இது போன்ற மிகப்பெரிய எழுச்சியை என்னை போன்றவர்கள் பார்த்து இருக்கிறோம். அதே போல் இப்போதும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், உத்வேகமாக கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் ஜனநாயக முறையில் பொதுக்குழுவை அமைதியாக நடந்து முடிந்து இருக்கிறது. அதேபோல் இப்போதும் பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதியான முறையில் நடத்திக் காட்டுவார்கள்.

    அ.தி.மு.க.வில் அராஜகம் நடைபெறவும் இல்லை. அ.தி.மு.க.வில் நாங்கள் யாரையும் ஓரம் கட்டவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×