search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்தியூர்"

    • வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.
    • விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் காட்டுப் பாளையம் கிராமத்தில் வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. சென்றவாரம் ஊர் கவுண்டரின் 2 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சென்று ஆய்வு செய்தார்.

    இந்நிலையில் இன்று விடியற்காலையில் மலைக்காரி ஆயா அலமேலு என்பவரின் 5 ஆடுகளை பல நாய்கள் சேர்ந்து கடித்து கொன்றுள்ளது. எனவே காட்டுப்பாளையம் பிரம்மதேசம் புதூர் பகுதியில் வெறிநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுவதால் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாலம் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.
    • கனரக வாகனம் நீண்ட வரிசையில் நின்றுள்ளன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பொழிந்தது. நள்ளிரவு 2 மணி வரை பொழிந்த இந்த மழையால் செலம்பூர் அம்மன் கோவிலில் இருந்து எண்ணமங்கலம் செல்லும் பாதையில் பேச்சுப்பாறை பாலம் காற்றாற்று ஓடை நீரால் ஏற்கனவே உடைந்திருந்த நிலையில் இருசக்கர வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு இருந்த பாலம் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

    எண்ணமங்கலம் கிராமத்தில் 2 வீடுகளில் தண்ணீர் புகுந்திருந்தது. விடிய ற்காலை 4 மணி அளவில் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் செட்டி நொடி பள்ளம் என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனம் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வாகனம் என சாலையின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் கனரக வாகனம் நீண்ட வரிசையில் நின்றுள்ளன.

    மேலும் சம்பவ இடத்திற்கு பவானி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் பாபு, சரவணன், நெடுஞ்சாலை ஆர்.ஐ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஜே.சி.பி. உதவியுடன் சாலையில் உள்ளமண் சரிவுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வருகி ன்றார்கள். நெடுஞ்சாலை துறையுடன் பர்கூர் காவல் துறையினரும் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். 

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பச்சாம் பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை மகன்கள் ராஜேந்திரன், சிவகுமார். 2 பேரும் அண்ணன், தம்பிகள். இருவரும் அருகருகே வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கூலி வேலைபார்த்து வருகின்றனர். நேற்று அண்ணன், தம்பி இருவரும் பருவாச்சியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் சென்று விட்டனர்.

    இந்நிலையில் நேற்று இரவு அந்தியூர் மட்டும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் மற்றும் சிவகுமார் வீட்டில் இடி தாக்கியது. இதைத்தொடர்ந்து 2 பேர் வீடும் சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எறிய தொடங்கியது.

    வீடுகளிலும் தீ எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் இதுகுறித்து உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணம், 5 பவுன் நகை, தொலைக் காட்சி பெட்டிகள், கட்டில், பீரோ, பாத்திரங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து கருகிவிட்டன. நல்ல வாய்ப்பாக இடி தாக்கிய போது 2 பேர் வீட்டிலும் ஆட்கள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் ராஜேந்திரன், சிவகுமார் வீட்டை பார்த்து கதறி அழுதனர். அந்தியூர் தாசில்தார் கவியரசு, நில வருவாய் ஆய்வாளர் சுதாகர், பச்சாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.

    • திருவிழா நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ. அறிவுரை வழங்கினார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா வரும் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்க உள்ளது.

    அதைத்தொடர்ந்து 26-ந் தேதி கொடியேற்றுதலும், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி முதல் வன பூஜையும், மறுபூஜையும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை புகழ்பெற்ற கால்நடை சந்தை, குதிரை சந்தையும், 16-ந் தேதி பால்பூஜையும் நடைபெற உள்ளது.

    இந்த திருவிழாவில் லட்சக ணக்கான பேர் கலந்து கொள்வார்கள் என்பதால் திருவிழா நடத்துவது தொட ர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோ சனைகூட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவல கத்தில் ஆர்.டி.ஓ. திவ்யபி ரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ்வரன், அந்தியூர் தாசில்தார் பெரியசாமி, கோவில் செயல் அலுவலர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், பொதுசுகாதாரத் துறையினர், கால்நடை பராமரிப்பு த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவிழாவில் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி அறிவுரை வழங்கினார்.

    • புதிய தாசில்தாராக பெரியசாமி இன்று பொறுப்பேற்று கொண்டார்.

    அந்தியூர்:

    அந்தியூர் தாசில்தாராக பணியாற்றி வந்த தாமோதரன் தற்போது ஈரோடு கேபிள் டி.வி. தாசில்தாராக பணி மாறுதலாகி சென்றார்.

    இதனையடுத்து புதிய தாசில்தாராக பெரியசாமி இன்று பொறுப்பேற்று கொண்டார்.

    இவர் இதற்கு முன் நம்பியூரில் தாசில்தாராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அந்தியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    அந்தியூர்:

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் அந்தியூர், தவிட்டுப்பாளையம், புதுப்பாளையம் மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன் பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம்,

    வெள்ளையம்பா ளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம்,

    கோவிலூர், வெள்ளித்திருப்பூர் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    இதேபோல் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவானி நகர் முழுவதும் மற்றும்

    மெயின் ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்க ன்பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ. காலனி,

    கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசி பட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன் பாளையம், மொண்டி பாளையம், கண்ணடிபாளையம், மயிலம்பாடி,

    ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்ட காட்டுப்புதூர், மூலகவுண்டன்புதூர், செலம்பக வுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

    இந்த தகவல்களை பவானி செயற்பொறியாளர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் இன்று திறக்கப்பட்டது.
    • விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பெரிய ஏரியில் இருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. இன்றிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மொத்தம் 120 நாட்களுக்கு 32 மில்லியன் கன அடி நீர் பாசனத்திற்கு திறந்து விடபடுகிறது.

    இதன் காரணமாக பெரிய ஏரியின் ஆயக்கட்டு பகுதிகளான பச்சாம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

    இதில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகள், உதவி பொறியாளர் தமிழ் பாரத், பச்சாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசந்திரன் பானுமதி, துணைத்தலைவர் பூபதி, விவசாய சங்கத்தலைவர் கண்ணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர்.

    திறந்த விடப்பட்ட தண்ணீர் மதகுகள் வழியே சீறிப்பாய்ந்து வெளியேறியது. அப்போது ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    இந்த திறக்கப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெறுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதில் தகவல் தொழில் நுட்ப அணி ஈரோடு வடக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், திருமாவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • சோதனைச்சாவடி பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று வருகிறது.

    அந்தியூர்:

    கர்நாடகா சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அங்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனைசாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதே போல் தமிழக- கர்நாடகா மாநில எல்லை பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கிறார்கள்.

    இதே போல் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, பண்ணாரி மற்றும் அந்தியூர் அடுத்த பர்கூர் வழியாக கர்நாடகா மாநில எல்லை பகுதியில் சோதனைச் சாவடிகள் உள்ளது. இந்த வழியாக வாகனங்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் லாரி, பஸ், வேன், சரக்கு வாகனங்கள், 2 சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலையொட்டி அந்தியூர் அருகே தாமரைக்கரை, பர்கூர், கர்கேகண்டி வழியாக தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான நால்ரோடை அடுத்து கூடலூர், மாட்டலி, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் வாகனங்கள் எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனைக்கு பிறகே கர்நாடகாவிற்குள் செல்ல அனுமதிக்கபட்டு வருகின்றது. இதனால் கர்நாடகா சோதனைச்சாவடி பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    • ராஜா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் போலீஸ் நிலை யத்தில் ராஜா (40). என்பவர் போலீஸ் ஏட்டாக பணி புரிந்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உளளனர். இவர் பவானி காவலர் குடி யிருப்பில் குடும்பத்துடன் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    பவானி காவலர் குடியிருப்பில் குடி இருந்து வரும் ராஜா கடந்த 3 மாத ங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இதையடுத்து கடந்த 3 மாதங்களாக பணி விடுப்பில் அவர் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ராஜா பவானி காவலர் குடி இருப்பில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை கண்ட அந்த பகுதியில் உள்ள மற்ற போலீசார் அவரது உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்கள் காலிக்குடங்களுடன் இன்று காலை அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டுக்கு 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் தங்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க கோரி வார்டு கவுன்சிலர் சரஸ்வதி விசுவநாதன் தலைமையில் பெண்கள் காலிக்குடங்க ளுடன் இன்று காலை அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டனர்.

    இது குறித்து தகவலறித்த அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மற்றும் அந்தியூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் முற்றுகை யிட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனையடுத்து 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தட்டுப்பாடுயின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறா திருக்கோவிலில் பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.
    • பக்தர்கள் உண்டியலில் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 714 தொகையாகவும், 380 கிராம் தங்கமும், 414 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறா திருக்கோவிலில் பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.

    பக்தர்கள் உண்டியலில் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 714 தொகையாகவும், 380 கிராம் தங்கமும், 414 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    இதில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன், ஆய்வாளர் ஸ்ரீ மாணிக்கம் மற்றும் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், பணியாளர்கள், தனியார் கல்லூரி மாணவிகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

    • அந்தியூர் வார ச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கால்நடைச் சந்தைகளும், திங்கட்கிழமை காய்கறி, மளிகை சந்தைகளும் நடைபெறுவது வழக்கம்.
    • நள்ளிரவு பெய்த மழையினால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்து வருகிறது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு பொழிந்த மழையினால் அந்தியூர் வாரச்சந்தை பகுதியில் தண்ணீர் தேங்கியது. அந்தியூர் வார ச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கால்நடைச் சந்தைகளும், திங்கட்கிழமை காய்கறி, மளிகை சந்தைகளும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காய்கறி, மளிகை சந்தை நடைபெறுகிறது. வாரச்சந்தை வளாகத்தில் கடைகள் அமைப்பதற்காக ஒரு பகுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவ தால் மற்றொரு பகுதியான கால்நடை சந்தை நடந்து வந்த பகுதியில் காய்கறி, மளிகை பொருட்கள் சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்த சூழ்நிலையில் நள்ளிரவு பெய்த மழையினால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×