என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நித்திரவிளை"
- போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
- அடிக்கடி வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அதனை விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். இதற்காக அடிக்கடி வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
நித்திரவிளை போலீஸ் நிலைய சப்-இன்ஸ் பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் அங்குள்ள பாலாமடம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அதனை ஓட்டி வந்த 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களது வாகனங்களை சோதனை செய்தனர். இதில் 3 கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கொல்லங்கோட்டை சேர்ந்த ரோஜர் ஸ்டெயின் (வயது 24), நித்திரவிளை ஆற்றுப்புரம் லிபின் (21) என தெரியவந்தது. அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினர்.
எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தனர். சப்ளை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன.
- இதனை தடுத்து நிறுத்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுத்து நிறுத்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அஞ்சு கிராமம் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரை சாலை வழியாக காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், தேங்காப்பட்ட ணம் பகுதியில் சந்தேகத்தி ற்கிடமாக கார் வந்தது. அந்தக் காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டி னர். ஆனால் அந்தக் கார் நிற்காமல் சென்றது.
இதுகுறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரிவிளை சந்திப்பில், அந்தக் காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்கவில்லை. இதனை தொடர்ந்து போலீசார், மோட்டார் சைக்கிளில் காரை விரட்டிச் சென்றனர்.
நடைக்காவு சந்திப்பில் அவர்கள் காரை மடக்கினர். அப்போது காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து காரை போலீசார் சோதனை செய்த போது, 50 கிலோ எடை உள்ள 40 மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதனை காருடன் போலீசார் கைப்பற்றினர்.
- நகை பறிப்பில் ஈடுபட்டது கேரள கொள்ளையர்கள்?
- 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
நாகர்கோவில்:
நித்திரவிளை முக்காட்டு விளை பகுதியைச் சேர்ந்த வர் ஆஸ்டின். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி பிரமிளா (வயது 30).
இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வரு கிறார். நேற்று மாலை கிராத்தூர் பெருமாவிளை பகுதியிலுள்ள தனது தாயார் வீட்டிற்கு பிரமிளா மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கிராத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் பிரமிளா கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் நகையை பறித்தனர்.
இதில் பிரமிளா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.பின்னர் அந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து நித்திரவிளை போலீசில் பிரமிளா புகார் செய்தார். புகாரின் பேரில் நித்திர விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பிரமிளாவிடம் கொள் ளையர்கள் குறித்து அடை யாளங்களை கேட்டறிந்த போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சி களை ஆய்வு செய்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் மற்றும் முககவசம் அணிந்திருந்த நபர்கள் பிரமிளாவிடம் நகை பறிப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட் எதுவும் இல்லை. கொள்ளையர்கள் கேரளா நோக்கி தப்பி சென்றுள்ளனர். எனவே அந்த கொள்ளை கும்பல் கேரளாவை சேர்ந்தவர் களாக இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள்.கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
- தமிழக- கேரள எல்லை பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்கள் தீவிர கண்காணிப்பு
- மீனவ கிராமங்களில் இருந்து ரேசன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக லாபத்திற்கு விற்பனை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு சிலர் ரேசன் அரிசியை கடத்தி சென்று அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை தடுக்க தமிழக- கேரள எல்லை பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன.மேலும் தனிப்படைகள் அமைத்தும் இரவு பகலாக சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலைநித்திரவிளை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் மற்றும் போலீஸ்காரர் சவுந்தர் ஆகியோர் கோனசேரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கார் வேகமாக சென்றது.
போலீசார்சந்தேகம் அடைந்து வாகனத்தை திரும்பி பார்த்த போது அந்த வாகனத்தின் பின்பகுதி சாலையில் உரசியபடி சென்றுள்ளது.இதனையடுத்து போலீசார் அந்த வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கினர்.
தொடர்ந்து காருக்குள் சோதனை செய்த போது அதில் சிறு சிறு சாக்கு மூடைகளில் சுமார் 700 கிலோ ரேசன் அரிசி கறுப்பு துணி கொண்டு மூடி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் காருடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அரிசி யை கடத்தியது கேரள மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்த வினு என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து ரேசன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து காருடன் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் கைது செய்யப்பட்ட வினுவை வட்டவழங்கல் துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்