search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12-ம் வகுப்பு"

    • 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 33 மாணவர்களுக்கு ரூ. 1 லட்சத்து 3ஆயிரம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
    • 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்புகளை பெற்ற மாணவர்களுக்கு 27வது ஆண்டாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதி, அமர்ஜோதி கார்டனில் உள்ள திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்புகளை பெற்ற மாணவர்களுக்கு 27வது ஆண்டாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் அறக்கட்டளை செயலாளர் துரைசாமி வரவேற்று பேசினார். தலைவர் நிக்கான்ஸ் வேலுசாமி தலைமை தாங்கி பேசினார்.

    திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி மற்றும் திருப்பூர் மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் திருப்பூர் பகுதி பள்ளிகளில் கடந்த 2021-22 ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 33 மாணவர்களுக்கு ரூ. ஒரு லட்சத்து 3ஆயிரம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    திருப்பூர் பகுதி அளவில் முதலிடம் பெற்ற கொங்கு வேளாளர் பள்ளியின் சுதர்ஷிகா, இரண்டாமிடம் பெற்ற ஏ.வி.பி. ட்ரஸ்ட் பள்ளியின் ஹரிஷ் மற்றும் லிட்டில் பிளவர் பள்ளியின் தியா எம்.ராஜ் உள்ளிட்ட 33 மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினர் கையால் கல்வி ஊக்கத்தொகை பெற்றுச்சென்றனர். டிசெட்டின் பொருளாளர் தேவராஜன் நன்றி கூறினார். ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் பழனிச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி, டிசெட்டின் நிறுவன உறுப்பினர்கள், நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர்கள், பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பிறகு அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

    • அஜய்குமார் 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.
    • மாணவி சுபாஷினி 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார்.

    தென்காசி:

    தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 101 மாணவ-மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

    பள்ளியின் மாணவர் அஜய்குமார் 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.

    இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-

    தமிழ்-98, ஆங்கிலம்-95, இயற்பியல்-98, வேதியியல்-100, கணினி அறிவியல்-100, கணிதம்-100.

    மாணவி சுபாஷினி 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-95, ஆங்கிலம்-96, இயற்பியல்-98, வேதியியல்-100, கணினி அறிவியல்-99, கணிதம்-100.

    மாணவி லத்திபா இஹ்ஸானா 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாமிடம் பெற்றார். இப்பள்ளியில் வேதியியலில் 4 பேரும், கணினி அறிவியலில் 3 பேரும், கணிதத்தில் 2 பேரும், கணக்கியலில் 4 பேரும், வணிகவியலில் 3 பேரும், பொருளியலில் ஒருவரும், வணிக கணிதத்தில் 3 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    சாதனைபடைத்த மற்றம் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சட்டக்கல்லூரி பேராசிரியர் முகமது, பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் மிராக்ளின் பால் சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர். 

    ×