என் மலர்
நீங்கள் தேடியது "போலீசார் ஒப்படைப்பு"
- சாலையில் கிடந்த பையில் ரூ.3,200, ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கி புத்தகம் இருந்தது.
- அந்த பெண்ணிடம் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ் கிருஷ்ணன், தலைமை காவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தவறவிட்ட பை, பணம், ஆவணங்களை ஒப்படைத்தனர்.
அரவேணு:
கோத்தகிரி மார்க்கெட் பகுதியில், போலீஸ் ஏட்டு பாலசுப்பிரமணியம் என்பவர் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையின் கீழே ஒரு பை கிடந்ததை பார்த்தார்.
பின்னர் அதை எடுத்து பார்த்த போது, உள்ளே ரூ.3,200, ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கி புத்தகம் இருந்தது. புத்தகத்தை திருப்பி பார்த்தபோது, அதில் கோத்தகிரி ஓரசோலை காமராஜர் நகரை சேர்ந்த சரஸ்வதி என பெயர் இருந்தது.
தொடர்ந்து அந்த பையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து காவலர் ஆதார் அட்டையில் உள்ள முகவரி மூலம் சம்பந்தப்பட்ட பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
பின்னர் அந்த பெண்ணிடம் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ் கிருஷ்ணன், தலைமை காவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தவறவிட்ட பை, பணம், ஆவணங்களை ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட அந்த பெண் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.