என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயல்"

    • வேட்டங்குடி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் வந்து குழாய் பதிப்பதற்காக முந்திரி மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர்.

    சீர்காழி, ஜூன்.22-

    மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் இயங்கிவருகிறது. இங்கிருந்து செம்பனா ர்கோயில் பகுதியில் உள்ள மேமாத்தூர் என்ற இடத்துக்கு குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேட்டங்குடி கிராமத்தில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் வந்து குழாய் பதிப்பதற்காக முந்திரி மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர்.

    இதுகுறித்து மயிலாடு துறை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாய சங்கத் தலைவர் வில்வநாதன் கூறுகையில், வேட்டங்குடி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இது விவசாயிகளுக்கு ஓரளவுக்கு பயன் அளித்துக் கொண்டிருக்கிறது. இதனை நம்பி விவசாயிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் குழாய் பதிப்பதற்காக திடீரென வேட்டங்குடி கிராமத்தில் முந்திரி தோட்டத்துக்குள் சில ஊழியர்கள் புகுந்து முந்திரி மரக் கிளைகளை வெட்டி அகற்றியுளளனர்.இது வன்மையாக கண்டி க்க த்தக்கது.இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்

    எனவே, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அத்துமீறி இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ×