என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பதிவுத்துறை"
- 1 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
- அடையாள விபரங்கள் சரி பார்க்கப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மையக் கணினியிலிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கோபிச்செட்டிப் பாளையம், சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், 3 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இதில் ஈரோடு மாநில வரிக் கோட்டத்திற்குட்பட்ட இணை ஆணையர் வரி விதிப்பு மற்றும் நுண்ணறிவு கோட்ட அலுவலகம், சேவை மற்றும் சரக்கு வரி மேல் முறையீட்டு அலுவலகம், உதவி ஆணையர், திண்டல், பெருந்துறை மற்றும் சென்னிமலை வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 6 அலுவலகங் களுக்கு ஈரோட்டில் அலுவலகக் கட்டிடம், சத்தியமங்கலம், கோபிச் செட்டிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், துறையூர், புதுக்கோட்டையில் வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், துணை ஆணையர், தூத்துக்குடி சரக அலுவலகம், உதவி ஆணையர், தூத்துக்குடி-1, 2 மற்றும் 3 ஆகிய வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 4 அலுவலகங்களுக்கு தூத்துக்குடியில் 4 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வரித்துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அரகண்டநல்லூரில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவிலும், பழனி பதிவு மாவட்டத்தில், சத்திரப்பட்டி யில், 1 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகலை இணைய வழியாக பெறும் சேவையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பதிவுத்துறை தொடங்கப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்கள் தற்போது ஒளிவருடல் செய்யப்பட்டு மையக் கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன. சொத்து தொடர்பான (உயில், டிரஸ்ட், இதர ஆவணங்களை தவிர்த்து) எந்த ஆவணத்திற்கும் இணைய வழியில் விண்ணப்பிக்கவும், தேவையான கட்டணங்களை இணையவழியிலேயே செலுத்தி பொதுமக்கள் பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒளிவருடல் செய்யப் பட்ட ஆவணங்களை சேமிப்பதற்கும், அதிவிரைவாக மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் ஏதுவாக, அதிவிரைவு சேமிப்பு கலன்கள் 31 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு ஆவண நகல்கள் சேமிக்கப்பட்டுள்ளன.
மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்கள் https://tnreginet.gov.in என்ற இணையவழியாக பெறும் சேவையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உயில், டிரஸ்ட் ஆவணங்களின் நகல்கள் சரியான நபருக்கு அவரின் அடையாள விபரங்கள் சரி பார்க்கப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மையக் கணினியிலிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், பொதுமக்கள் சொத்து தொடர்பான எந்த ஒரு சான்றிட்ட நகலுக்காகவும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. 1865-ம் ஆண்டு முதல் பதிவுசெய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் நகல்கள் உலகின் எந்த மூலையில் உள்ள பொது மக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பதிவுத்துறையின் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தற்போதுள்ள மூன்று இணையநெறிமுறை புகைப்படக்கருவிகளுடன், 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சார்பதிவகங்களில் உள்ள பதிவறைகளில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள இரண்டு இணைய நெறி முறை புகைப்படக் கருவிகளின் பயன்பாட்டினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிக வரி ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன், பதிவுத் துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தொடர்ந்து வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
- அதிக பட்சமாக ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
பத்திரப் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுவாக ஆண்டு தோறும் தைப்பொங்கலுக்கு பிந்தைய நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். இதையடுத்து, வருகிற 31-ந் தேதி வரை பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்கும்படி சார்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில், போதிய அளவில் தினசரி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு, பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 22-ந் தேதி, ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 21,004 பத்திரப் பதிவுகள் நடைபெற்று ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் (24-ந்தேதி) பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 26 ஆயிரம் பத்திரப்பதிவுகள் நடைபெற்றதுடன், அதிக பட்சமாக ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- புதிய நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தகவல்.
- கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு.
பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் இணைக்க வேண்டும்.
இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
- 1975 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்திற்குரிய பதிவேடு ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
- 1950 முதல் 1974 வரையிலான பதிவேடுகளை கணினியில் மேலேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பதிவுத்துறையில் முன்னோடி திட்டமாக 06.02.2000 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஸ்டார்' திட்டம் 2018 முதல் புதிய பரிணாமத்தில் 'ஸ்டார் 2.0' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பதிவுத்துறையில் அனைத்து சேவைகளும் இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.
1975 ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்திற்குரிய அட்டவணை-II பதிவேடு கணினிமயமாக்கப்பட்டு வில்லங்க சான்றுகளை இணையவழியில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் 2021-2022-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இந்த வசதி, 01.01.1950 முதல் பதியப்பட்ட அனைத்து ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க 01.01.1950 முதல் 31.12.1974 வரையிலான காலத்திற்குரிய வில்லங்கச் சான்றுகளை இணைய வழியில் பொதுமக்கள் பார்வையிடவும் மற்றும் பதிவிறக்கம் செய்ய ஏதுவாகவும் மேற்கண்ட காலத்திற்கான அட்டவணை-II பதிவேட்டினை ரூ.36.58 கோடி மதிப்பீட்டில் கணினியில் மேலேற்றம் செய்வதற்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணி முடிவடைந்தவுடன் 1950 முதல் இன்றைய நாள் வரையிலான வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் இணையதள வாயிலாக பார்வையிடவும், அதன் பிரதிகளை கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும்.
இவ்வாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
- மயிலாடுதுறை மாவட்ட பதிவாளர் ஆர்.எஸ்.முத்துக்குமார், தென்சென்னை மாவட்ட பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்.
- உறையூர் சார்பதிவாளர் ஏ.உமாதேவி செங்கல்பட்டு மாவட்ட பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை:
பதிவுத்துறையில் மாவட்ட பதிவாளர்கள் நிலையில் ஒரே இடத்தில் அதிக நாட்களாக பணியாற்றிய 36 பேர் நேற்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, நெல்லை மண்டலங்களில் பணியாற்றியவர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதற்கான உத்தரவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி பிறப்பித்துள்ளார்.
பதிவுத்துறையில் நிர்வாக காரணங்களின் அடிப்படையில் மாவட்ட பதிவாளர்கள் நிலையில் பணியிட மாறுதல்கள் செய்யப்பட்டுள்ள அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தியாகராயநகர் சார்பதிவாளர் கே.செந்தில்நாதன் மாவட்ட பதிவாளராக தஞ்சாவூருக்கும், செய்யார் மாவட்ட பதிவாளர் ஜி.அறிவழகன் செங்கல்பட்டு மாவட்ட பதிவாளராகவும், வடசென்னை இணை சார்பதிவாளர் ஏ.கலைச்செல்வி செய்யார் மாவட்ட பதிவாளராகவும், தென்சென்னை மாவட்ட பதிவாளர் ஆர்.வெங்கடேசன் கன்னியாகுமரி மாவட்ட பதிவாளராகவும், மயிலாடுதுறை மாவட்ட பதிவாளர் ஆர்.எஸ்.முத்துக்குமார், தென்சென்னை மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருவல்லிக்கேணி சார்பதிவாளர் ஜோ.இ.அனு ஸ்வாதிகா தென்காசி மாவட்ட பதிவாளராகவும், அம்பத்தூர் சார்பதிவாளர் ஏ.சிவக்குமார் நாமக்கல் மாவட்ட பதிவாளராகவும், அடையார் சார்பதிவாளர் ஆர்.பாண்டியராஜன் புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடமான காரைக்குடி மாவட்ட பதிவாளராகவும், மத்திய சென்னை இணை சார்பதிவாளர் டி.ராஜேந்திரன் திண்டிவனம் மாவட்ட பதிவாளராகவும், திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் பி.கல்பனா புதிதாக உருவாக்கப்பட்ட சேலம் கிழக்கு மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்படுகின்றனர்.
பழனி மாவட்ட பதிவாளர் எம்.பாவேந்தன் திருவள்ளூர் மாவட்ட பதிவாளராகவும், மயிலாப்பூர் சார்பதிவாளர் ஏ.முகம்மது சாதிக் சிதம்பரம் மாவட்ட பதிவாளராகவும், கோடம்பாக்கம் சார்பதிவாளர் எம்.தேவகி, திருநெல்வேலி மாவட்ட பதிவாளராகவும், மத்திய சென்னை மாவட்ட பதிவாளர் வி.புவனேஸ்வரி விழுப்புரம் மாவட்ட பதிவாளராகவும், திருச்சி இணை சார்பதிவாளர் கே.சுசீலா மத்திய சென்னை மாவட்ட பதிவாளராகவும், சென்னை அண்ணாநகர் சார்பதிவாளர் ஆர்.அகிலா சென்னை பதிவுத்துறை பயிற்சி நிலையத்தின் விரிவுரையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் எம்.ராமச்சந்திரன் புதிதாக உருவாக்கப்பட்ட கோபிசெட்டிப்பாளையம் மாவட்ட பதிவாளராகவும், திருச்சி இணை சார்பதிவாளர் சி.முரளி காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளராகவும், காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் ஆ.செந்தூர்பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட பதிவாளராகவும், சேலம் கிழக்கு இணை சார்பதிவாளர் ஜி.அமுதா காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளராகவும், உறையூர் சார்பதிவாளர் ஏ.உமாதேவி செங்கல்பட்டு மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க நிதியுதவி கோரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விருதுநகர்
தமிழ்நாட்டில் சொந்தக்கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கீழ்கண்ட தகுதிகள் உடைய, கிறித்துவ தேவாலயங்களிடமிருந்து புனரமைப்பிற்கான நிதி உதவி கோரி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படிகிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும்.
தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.
விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணை யதள முகவரியில்www.bcmbcmw@tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் பிற்சேர்க்கை -IIமற்றும் III ஐ பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து முன்மொழிவுடன் சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு நிதி உதவி வேண்டி மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னனு பரிவர்தனை மூலம் செலுத்தப்படும்.மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்