search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிண்டர்"

    • ரூ.4.88 லட்சம் மதிப்பில் டெஸ்க், கம்யூட்டர்ஸ் பிரிண்டர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
    • ரூ.4.25 மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மேஜை பென்ஞ்ச், பீரோ போன்றவை வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    கொரடாச்சேரி ஒன்றியம், எருக்காட்டூர் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.4.53 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.2.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையையும் கொரடாச்சேரி ஒன்றிய துணை தலைவர் பாலசந்தர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ராஜா, ஆசிரியர் மன்ற மாநில தலைவர் ரவி, ஓ.என்.ஜி.சி பொது மேலாளர் சரவணன், துணை பொது மேலாளர் வேணுகோபால், சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி சந்திரசேகரன், தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியை புவணா, சமூக பொறுப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், எருக்காட்டூர் ஊராட்சி துணை தலைவர் கீதா சங்கர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், கே.ஆர்.டி.எஸ். நிறுவன பொறுப்பாளர் கோவிந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருவாரூர் ஒன்றியம், அடியக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.4.88 லட்சம் மதிப்பில் டெஸ்க், கம்யூட்டர்ஸ் பிரிண்டர், பீரோ தொலைக்காட்சி போன்ற பொருட்கள் அர்ப்பணா என்.ஜி.ஓ. மூலம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சத்திய நாராயணன், தலைமை ஆசிரியரும், பள்ளி மேலான்மைக்குழு தலைவருமான ஆயிஷத்துல் ஜாமியா மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புலிவலம் தொடக்கப்ப ள்ளிக்கு ரூ.4.25 மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மேஜை பென்ஞ்ச், டி.வி நாற்காலி, மின்விசிறி, பீரோ போன்றவை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் கார்த்தி, ஊராட்சி செயலாளர் தங்கதுரை, தலைமை ஆசிரியர் வடுகநாதன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து நிகழ்ச்சியிலும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • ரூ.15,000 மதிப்புள்ள பிரிண்டரை மங்கலம் ஊராட்சி மன்றத்தினர் தலைமையாசிரியரிடம் வழங்கினர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சியில் அரசு பெண்கள்உயர்நிலைப்பள்ளி உள்ளது.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மங்கலம்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மங்கலம் அரசு பெண்கள்உயர்நிலைப்பள்ளிக்கு பிரிண்டர் வழங்கப்பட்டது. பள்ளிக்கு தேவையான ரூ.15,000 மதிப்புள்ள உபகரணத்தை (பிரிண்டர்) மங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாஹா நசீர் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரபிதீன் ஆகியோர் மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லிஸியம்மாளிடம் வழங்கினர்.

    அப்போது பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர் .

    ×