என் மலர்
நீங்கள் தேடியது "ஒகினவா"
- ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது.
- 2017 ஆம் ஆண்டு ஒகினவா தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் முன்னணி இடத்தில் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஒகினவா உற்பத்தி ஆலையில் இருந்து 2.5 லட்சமாவது வாகனம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஒகினவா நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் 2.5 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறது.
2015 ஆம் ஆண்டு இந்தியாவில் பணிகளை துவங்கிய ஒகினவா 2017 ஆண்டு சந்தையில் களமிறங்கி தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்த நிறுவனத்தின் ஒகினவா ரிட்ஜ் மாடல் 2017 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன்பின் ஒகினவா பிரைஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மாணியம் பெற்ற முதல் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக ஒகினவா ஆட்டோடெக் உள்ளது. ஒகினவா நிறுவனம் தற்போது ஐபிரைஸ் பிளஸ், ஐபிரைஸ் ப்ரோ, லைட் மற்றும் ஆர்30 போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 2020 வாக்கில் ஒகினவா நிறுவனம் இந்தியவின் முதல் கஸ்டமைசேஷன் வசசதி கொண்ட B2B எலெக்ட்ரிக் இருசக்கர வானத்தை 2020 வாக்கில் அறிமக செய்தது.
2021 ஆண்டு இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்த ஒகினவா, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒகினவா கேலக்ஸி ஸ்டோர்களை திறந்தது. இந்திய சந்தையில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் நிறுவனம், விற்பனையில் இத்தனை இலக்கை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஒகினவா பெற்று இருக்கிறது.
- ஒகினவா நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் புது உற்பத்தி ஆலையை துவங்க இருக்கிறது.
- இதற்காக ரூ. 500 கோடி முதலீடு செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக ஒகினவா ஆட்டோடெக் அறியப்படுகிறது. இந்த நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றாவது உற்பத்தி ஆலையை துவங்க இருக்கிறது. இந்த ஆலை ராஜஸ்தான் மாநிலத்தின் கரோலி பகுதியில் அமைந்து இருக்கிறது.
ஒகினவா நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை 30 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது. இந்த ஆலையில் மொத்தம் 5 ஆயிரம் பேர் பணியாற்ற முடியும். இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்ட உற்பத்தி ஆலைகளில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட பெரிய எலெக்ட்ரிக் இரு சக்கர உற்பத்தி ஆலையாக இது இருக்கும். இந்த ஆலையை உருவாக்க ரூ. 500 கோடி முதலீடு செய்யப்படுகிறது.
ஒகினவா புது உற்பத்தி ஆலை 2023 அக்டோபர் மாத வாக்கில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் மஇலக்கு நிர்ணயம் செய்ய இருக்கிறது.
நாட்டில் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தேவையை பூர்த்தி செய்வதில் புது உற்பத்தி ஆலை மிக முக்கிய பங்கு வகிக்கும். உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்கான களமாகவும் இந்த ஆலை செயல்ப்ட உள்ளது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்ய ஒகினவா நிறுவனம் டகிடாவுடன் கூட்டணி அமைக்கிறது.