search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகத்தினர்"

    • கூத்தம்பூண்டி ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • தெருக்களில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை போட வேண்டாம் எனவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி ஊராட்சி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் பயன்படுத்தி வரும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து குப்பைகளை போடுவதற்காக சிவப்பு மற்றும் பச்சை நிற சிறிய குப்பைத் தொட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

    காய்கறி கழிவுகள், தேங்காய் நாறு, சிரட்டை ஓடுகள் இவையெல்லாம் மக்கும் குப்பைகள் எனவும், இதனை ஒரு குப்பைத்தொட்டியிலும், பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், கேரிபேக்ஸ் போன்றவைகளை மக்காத குப்பைகள் எனவும் அந்த குப்பைகளை மற்றொரு குப்பைத் தொட்டியில் போட வேண்டும் எனவும், தெருக்களில் அந்த குப்பைகளை போட வேண்டாம் எனவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கூத்தம்பூண்டி ஊராட்சி தலைவர் பாவாயம்மாள் ராமசாமி, ஊராட்சி செயலாளர் சந்திரன் மற்றும் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×