என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » 14 பேர் விடுதலை
நீங்கள் தேடியது "14 பேர் விடுதலை"
- சேலம் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
- இதில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் உள்பட 14 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
சேலம்:
கடந்த 2008-ம் ஆண்டு சேலம் பழைய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை இடித்து புதிய கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து பழைய கட்டிடத்தை இடிக்காமல், தொல்லியல் துறை மூலம் புதுப்பித்துப் பராமரிக்க வலியுறுத்தி கோர்ட்டு மூலம் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் பழைய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை இடிப்பதை தடுக்க முயன்ற ஹரிபாபு, தமயந்தி,அருள் எம்.எல்.ஏ, பூமொழி,செந்தில், ஜாகீர் அஹமது, கோபால்,தங்கவேல், சரவணன், ஜெகன் மோகன், சுலைமான், சுதாகர் ஆகியோர் மீது டவுன் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஜெ.எம்1-ல் 14 வருடங்களாக நடைபெற்றது. அவர்களுக்கு ஆதரவாக வக்கீல் விஜயராசா வாதாடினார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் 14 பேரையும் விடுதலை செய்யப்படுவதாகது நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார்.
×
X