என் மலர்
நீங்கள் தேடியது "சேதுபாவாசத்திரம்"
- பேராவூரணி பெரியார் சிலை அருகில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- சேதுபாவாசத்திரம் ஒன்றிய விவசாயிகள் சங்க தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார்.
பேராவூரணி:
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள் சங்கங்கள் இணைந்து பேராவூரணி பெரியார் சிலை அருகில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி ஆணையத்தின் தலைவர் சட்டத்திற்கு விரோதமாக மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக விவாதிப்போம் என கூறியதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சேதுபாவாசத்திரம் ஒன்றிய விவசாயிகள் சங்க தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார்.
இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பாலசுந்தரம், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த முனைவர் ஜீவானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராவூரணி ஒன்றிய செயலாளர் இந்துமதி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வீரப்பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் பேராவூரணி ஒன்றிய செயலாளர் கருப்பையா, முன்னாள் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், சிதம்பரம், ரவி, வேலுச்சாமி, கருணாமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.