என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிலாளி மாயம்"
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான பாபுவுக்கு திருமணமாகவில்லை.
களியக்காவிளை :
களியக்காவிளை அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான பாபுவுக்கு திருமணமாகவில்லை. தனது தம்பி வீட்டில் வசித்து வந்த அவர், சம்பவத்தன்று உறவினர் வீட்டுக்கு திருமணத்துக்கு சென்றுள்ளார்.
அதன் பிறகு வீடு திரும்பாததால் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் அவரை காணவில்லை. இதுகுறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அன்சாரியை தேடி வருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி, அப்துல் அஜீஸ் தெருவை சேர்ந்தவர் அன்சாரி (48). இவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
கடந்த 1-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி யாஸ்மின் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அன்சாரியை தேடி வருகிறார்கள்.
- கடந்த 10-ந்தேதி வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை
- வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன நவநீத கிருஷ்ணனை தேடி வருகின்றனர்
கன்னியாகுமரி :
இரணியல் அருகே உள்ள செட்டியார்மடம் ஆதிதிராவி டர் காலனியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 43). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10-ந்தேதி வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது மனைவி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன நவநீத கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
- கடந்த 3-ந் தேதி வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
- பொன்னேரி போலீஸ் நிலையத்தில் இவரது மனைவி ரேவதி புகார் கொடுத்தார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (45) முடி திருத்தும் தொழிலாளி. இவர் திருவொற்றியூரில் முடி திருத்தும் கடையில் வேலை செய்து வந்தார்.
கடந்த 3-ந் தேதி வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் இவரது மனைவி ரேவதி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 77 பவுன் தங்க நகையுடன் தொழிலாளி மாயமானார்.
- செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
கோவை, ஜன.29-
கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் ரோட்டை சேர்ந்தவர் பியூஸ் ஜெயின் (வயது 35). இவர் ஸ்ரீனிவாச ராகவ ரோட்டில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது நகை பட்டறையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பியூஸ் ஜெயின் அவரது நகை பட்டறையில் உள்ள நகைகளை லேசர் சாலிடரிங் செய்வதற்கு அருகில் உள்ள நகை கடையில் கொடுப்பது வழக்கம்.
அதனை சதாம் உசேன் கொண்டு சென்று வருவார்.சம்பவத்தன்று வழக்கம் போல சதாம் உசேனிடம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 621.660 கிராம் எடையுடைய பிரேஸ்லெட், கம்மல் உள்ளிட்ட நகைகளை சதாம் உசேனிடம் கொடுத்து லேசர் சாலிடரிங் செய்து வருமாறு அனுப்பினார்.
ஆனால் நகையுடன் சென்ற சதாம் உசேன் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பியூஸ் ஜெயின் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
பின்னர் அக்கம் பக்கத்தில் அவரை தேடி பார்த்தார். ஆனால் சதாம் உசேன் எங்கும் கிடைக்கவில்லை. அவர் ரூ.25 லட்சம் தங்க நகைகளுடன் மாயமாகி விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பியூஸ் ஜெயின் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையுடன் மாயமான சதாம் உசேனை தேடி வருகின்றனர்.
77 பவுன் தங்க நகையுடன் வடமாநில தொழிலாளி மாயமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெரம்பலூர் அருகே மனைவியிடம் கோபித்து சென்ற கட்டிட தொழிலாளி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்
- வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்
பெரம்பலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அரங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், சதீஷ்குமார் (23), விக்னேஷ்வர் (20) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் செந்தில்குமார் தமது மாமனார் வீட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் சண்டை போட்டுவிட்டு வெளியேறியவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 2 நாட்களாகியும் அவர் திரும்பாததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில் குன்னம் தாலுகா வெள்ளாற்றில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வெள்ளாற்றுக்கு விரைந்து சென்ற மங்களமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மிதந்தவரை மீட்டனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மாயமான செந்தில்குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து மங்களமேடு போலீசார் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆற்றில் மீன்பிடிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவுடன் தனித்தனி படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
- காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே எய்யலூர் கிராமத்திற்கு உட்பட்ட மேல் பாதி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன் (வயது 47). மீன்பிடி தொழிலாளி. சங்கரனின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் 18 வயதில் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவுடன் தனித்தனி படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து மீன் பிடித்து விட்டு ஆறு பேர் வந்துவிட்டனர். இதில் சங்கரன் கரை திரும்பவில்லை. இதனை அறிந்த சங்கரனின் குழந்தைகள் பதறிப் போய் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன்பிடிக்க சென்று நீரில் மாயமான சங்கரனை தேடுபணியில் ஈடுபட்டு வந்தனர். 3-வது நாளான இன்றும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் வருவாய் துறையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 23-ந் தேதி கடைக்கு சென்ற மணிகண்டன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
- இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி ஜோதி ராமலிங்க தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (45). தொழிலாளி. சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
கடந்த 23-ந் தேதி கடைக்கு சென்ற மணிகண்டன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கை, கால் செயலிழந்த தொழிலாளி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி கைலாசநாதர் கோவில் அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 46). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக பக்கவாதம் ஏற்பட்டு இடது கால் மற்றும் கை செயல் இழந்து காணப்பட்டது.
சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது மனைவி சுப்புலெட்சுமி தென்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்