என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சஞ்சய் மஞ்சரேக்கர்"
- இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- கான்பூர் மைதானம் சுழற்பந்து வீச்சு சாதகமாக இருக்கும்.
வங்கதேச அணி இந்தியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் தொடங்கிய டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியில் 3-வது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் ஆகாஷ் தீப்பை விளையாட வைத்தது சரியான முடிவு தான். இவ்வேளையில் 2-வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் சுழற்பந்து வீசும் குல்தீப் யாதவை கொண்டுவர வேண்டும்.
ஏனெனில் பிளாட்டான மைதானத்தில் கூட பந்தை திருப்பி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உடைய அவரை இந்த போட்டியில் விளையாட வைத்தால் இந்திய அணிக்கு அது கூடுதல் சாதகத்தை தரும். எனவே என்னை பொறுத்தவரை இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை தக்கவைத்து மூன்றாவதாக ஒரு சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை இந்த போட்டியில் விளையாட வைக்க வேண்டும்.
என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறினார்.
- தீபக் ஹூடாவை போன்ற நடு வரிசையில் விளையாடக் கூடிய ஒருவர் இந்திய அணிக்கு தேவை.
- தீபக் ஹூடா தனது ஆப்-ஸ்பின் மூலமும் அணிக்கு நன்றாக செயல்பட முடியும்.
மும்பை:
20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற அக்டோபர் மாதம் 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இப்போட்டி தொடருக்கான இந்திய அணியில் யார்-யார் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா அயர்லாந்து தொடரில் ஒரு கவன ஈர்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். தீபக் ஹூடாவை போன்ற நடு வரிசையில் விளையாடக் கூடிய ஒருவர் இந்திய அணிக்கு தேவை. இது மிகவும் கடினமான பணி. அதை ஐ.பி.எல்.லின் தீபக் ஹூடா அற்புதமாக செய்தார். அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
வறண்ட ஆடு களத்தில் முக்கியமான சூழ்நிலைகளில் தீபக் ஹூடா தனது ஆப்-ஸ்பின் மூலமும் அணிக்கு நன்றாக செயல்பட முடியும். அவரை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்