search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்சுமி நரசிம்மர்"

    • தாமிரபரணி கரையில் முத்தாலங்குறிச்சி தவிர வேறு எங்கேயும் லட்சமி நரசிம்மர் தனிச்சன்னத்தியில் இல்லை.
    • லட்சுமி தேவி கூட நரசிம்மரின் கோபத்தினை தணிக்க முடியவில்லை.

    தாமிரபரணி கரையில் முத்தாலங்குறிச்சி தவிர வேறு எங்கேயும் லட்சமி நரசிம்மர் தனிச்சன்னத்தியில் இல்லை.

    நரசிம்ம அவதாரத்தின் போது பெருமான் மிகுந்த கோபத்துடன் இரணியனை வதம் செய்தார்.

    வதம் முடிந்த பிறகும் கூட அவரின் கோபம் தணிந்தபாடில்லை.

    லட்சுமி தேவி கூட நரசிம்மரின் கோபத்தினை தணிக்க முடியவில்லை.

    அந்த சமயம் சிறுவனான பிரகாலாதன் தைரியமாக பகவானை நோக்கி சென்றான்.

    பின் பகவானின் மடியில் போய் தைரியமாக ஏறி அமர்ந்துக்கொண்டான்.

    அவரின் முகத்தினை நோக்கி தனது கையை கொண்டு போய் வருடி விட்டான்.

    வெப்பம் கக்கும் கோபத்தில் இருந்த பகவானின் நாக்கு ஏதோ நீண்ட நெடுங்கை போல் நீட்டிக் கொண்டு பாலன் பிரகலாதன் முதுகில் தேய்த்து தனது சூட்டைத் தணித்தார்.

    கொஞ்சம் கொஞ்சமாக கோபம் தணிந்தது. பகவான் தன் பழைய நிலைக்கு வந்தார்.

    பகவானின் கோபம் தணிந்தபிறகே தேவர்கள், முனிவர்கள் ஏன் லட்சமிதேவியே அருகில் செல்ல முடிந்தது.

    முத்தாலங்குறிச்சி சிவன் கோவில் அருகே உள்ள சன்னதியில் லட்சுமி நரசிம்மர் உள்ளார்.

    இதில் நரசிம்மரின் தொடையில் லட்சுமி அமர்ந்துள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் லட்சுமி நரசிம்மர் கேட்ட வரம் தரும் தெய்வமாக இங்கே அமர்ந்து உள்ளார்.

    இந்த கோவிலை எப்போது வேண்டும்மென்றாலும் திறந்து பக்தர்களுக்கு காட்ட உள்ளூரில் குணவதியம்மன் கோவில் பூசாரி வீட்டில் சாவி உள்ளது.

    ஆகவே இந்த ஊருக்கு சென்றால் உடனே சுவாமி தரிசனம் செய்து விடலாம்.

    இந்த கோவிலுக்கு செல்ல நெல்லை சந்திப்பில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு.

    நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 16 வது கிலோ மீட்டரில் உள்ள செய்துங்கநல்லூரில் இறங்கினால்

    அங்கிருந்து ஆட்டோ மூலம் 6 கிலோ மீட்டரில் உள்ள முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தினை அடையலாம்.

    • பெரியமலையில் உள்ளே நுழையும்போது எழில்மிகு கோபுரத்தைக் காணலாம்.
    • முதலில் தயார் சன்னதியைக் காணலாம் இவரை அம்ருதவல்லித் தயார் என்று கூறுவர்.

    பெரியமலையில் உள்ளே நுழையும்போது எழில்மிகு கோபுரத்தைக் காணலாம்.

    உள்ளே பெரிய பலிபீடமும் கொடிமரமும் காட்சி தருகின்றன.

    இங்கே கொடிமரம் இருப்பதால் ஊர் நடுவில் உள நரசிம்மர் கோவிலில் கொடிமரம் இல்லை.

    மலைக்கோவிலில்தான் முதன்மையான பூஜை செய்யப்படுகிறது.

    முதலில் தயார் சன்னதியைக் காணலாம் இவரை அம்ருதவல்லித் தயார் என்று கூறுவர்.

    கிழக்கு முகமாக இவர் அருள் பாலிக்கிறார்.

    வடக்கு முகமாக நடந்தால் துவாரபாலகர்களைக் காணலாம்.

    தெற்கு வாசலில் நுழைந்தால் கோவிலின் முன்மண்டபம் காணலாம்.

    மண்டப விதானத்தில் நவீன ஓவியங்களைக் காணலாம். பெருமாளின் முன்பாகக் கருடாழ்வார் காட்சி தருகிறார்.

    இவருக்குப் பின்புறமுள்ள சுவரில் சாளரமுண்டு.

    இங்கிருந்து பார்த்தால் சிறியமலை யோக ஆஞ்சநேயர் தெரிவார்.

    கருவறையைச் சுற்றி வரலாம். கருறையில் கருங்கல்லில் சிலாவடிவில் ஸ்ரீயோக நரசிங்கப்பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

    கீழே அமைந்த பலகையில் சிறிய ஐம்பொன்சிலை உள்ளது.

    இது ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமான் சிலையாகும். அடுத்து ஆதிசேடன், சக்கரத்தாழ்வார், கண்ணன், கருடாழ்வார் ஆகியோர் உள்ளனர்.

    புக்கான், மிக்கான் என வழங்கப்படும் அடியார்களையும் காணலாம்.

    மலைமீதுள்ள பெருமானை ஆழ்வார் அக்காரக்கனி என்பர்.

    இவரது ஐம்பொன்சிலை பாதுகாப்புக்கருதி ஊரில் உள்ள கோவிலில் வைத்துள்ளனர்.

    அம்மன் பெயருக்கு அம்ருதவல்லி என்ற பெயருடன் சுதாவல்லி என்ற பெயருமுண்டு.

    கற்றிருமேனியும் செப்புத் திருமேனியும் இவருக்கும் உண்டு.

    சின்னமலையில் உள்ள அனுமார் பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரைக் கண்டவாறே அவரை நினைந்து தவமிருப்பதால் இவரும் யோக ஆஞ்சனேயர் என அழைக்கப்படுகிறார்.

    சதுர்புஜங்களில் சங்கு, சக்கரம் பின்புறக் கைகளில் ஏந்த முன்புறக் கைகளில் ஜப மாலை பற்றி உள்ளார்.

    வீற்றிருந்த கோலம். ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு உண்டு.

    கார்த்திகை மாத உற்சவமும் குறிப்பிடத்தக்கது. அனுமான் சன்னதியடுத்து ஒரு குளமும் உண்டு.

    அனுமான் தீர்த்தம் அல்லது சக்கரத்தீர்த்தம் என்று இது அழைக்கப்படுகிறது.

    ராமர் சன்னதியும் உண்டு. அரங்க நாதரும் காட்சி தருகிறார்.

    • சோளிங்கர் என அழைக்கப்படும் சோழசிங்கபுரம் நரசிம்மர் பெயரால் அமைந்ததாகும்.
    • இவர் நான்கு கரஙக்ளுடன் சதுர்புஜ ஆஞ்சநேயராகக் காட்சியளிக்கின்றார்.

    யோக நரசிம்ம சுவாமி வீற்றிருக்கும் திருப்பதிகளில் சோளிங்கர் உயர்ந்ததாக கருதப்படுகிறது.

    சோளிங்கர் என அழைக்கப்படும் சோழசிங்கபுரம் நரசிம்மர் பெயரால் அமைந்ததாகும்.

    இங்கு இரண்டு மலைகள் உள்ளன. பெரிய மலை மீத நரசிம்ம சுவாமி யோக நரசிம்மராக விளங்குகிறார்.

    பின்கரங்களில் சங்க சக்கரம் விளங்க, முன் கரங்களில் சிம்மகர்ண முத்திரைகளைக் கொண்டுள்ளார்.

    இவருக்கு நேர் எதிரிலுள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் உள்ளார்.

    இவர் நான்கு கரஙக்ளுடன் சதுர்புஜ ஆஞ்சநேயராகக் காட்சியளிக்கின்றார்.

    இது சிறந்த பிரார்த்தனைப் பதியாகும். இது முன்னாளில் 'கடிகை' என்று அழைக்கப்பட்டது.

    திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

    கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகளை செலுத்துகின்றனர்.

    • தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.
    • சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    1. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் தச அவதாரங்களில் மிக முக்கியமானது, தீமைகளை அழித்து நன்மையை வாழவைத்த ஸ்ரீ நரசிம்ம அவதாரமாகும்.

    இந்த நரசிம்ம அவதாரமே, இத்திருக் கோயிலின் மூல மூர்த்தியாக அமையப்பெற்றுள்ளது.

    2. பதினாறு திருக்கரங்களுடன் அமையப்பெற்ற ஸ்ரீ நரசிம்மர் தமிழ்நாட்டில் இத்தலம் தவிர வேறெங்கும் இல்லை என்பது மிகசிறப்பான ஒன்றாகும்.

    3. இரணியனின் மகன் பிரகலாதனுக்காக இரணியனின் கொடுமைகளை அழிக்க தூணிலிருந்து தோன்றிய அவதாரம் நரசிம்ம அவதாரமாகும்.

    இது சிங்கிரிகுடி நரசிம்மர் வரலாறு குறித்து மார்கண்டேய புராணத்துள் நரசிம்ம வன மாயுத்மியம் என்ற பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

    4. இத்திருக்கோயிலில் அமையப்பெற்ற அனைத்து கல்வெட்டுகளுமே முற்றுபெறாத நிலையில் காணப்படுகிறது.

    இராஜ கோபுரவாயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடைய ஒரு கல்வெட்டு செய்யுள் வடிவில் அமைந்துள்ளது.

    மகா மண்டபத்தின் தெற்கு சுவரில் கி.பி. 12 ம் நூற்றாண்டின் எழுத்தமைதியுடைய கல்வெட்டு ஒன்று உள்ளது.

    5. நீண்ட சதுரமான மாடவீதிகளை கொண்ட சிங்கிரிகுடி எனும் ஊரில் நடுநாயகமாக அமையப் பெற்றுள்ளது இத்திருக்கோயில்.

    6. இத்திருக்கோயில் மேற்குதிசை நோக்கி அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாகும்.

    7. ஐந்து நிலைகளை கொண்ட கம்பீரமான இராஜ கோபுரமும் வைணவ சிந்தாத்தப்படியான 24 தூண்களை கொண்ட வசந்த மண்டபமும் அமைந்துள்ளது.

    8. வைணவத் திருக்கோயிலான இத்திருக்கோயில் இராஜ கோபுரத்தை அடுத்து பிள்ளையார் திருகோயிலும் அமையப்பெற்றது. வேறெங்கும் காண இயலாத தனிச்சிறப்பாகும்.

    9. இத்திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்மர், திருவகீந்திரபுரத்து தேவ நாதனே என திருமங்கை ஆழ்வாரது பாசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

    10. இத்தலத்தில் 1. ஸ்ரீ நரசிம்மர் சன்னதி, 2. ஸ்ரீ கனகவல்லி தாயார் சன்னதி, 3. ஸ்ரீ ஆண்டாள் சன்னதி, 4. ஸ்ரீ ராமர் சன்னதி, 5. ஆழ்வார்கள் சன்னதி, 6. ஸ்ரீ விநாயகர், 7. ஸ்ரீ துர்க்கா சன்னதி ஆகியவை முக்கிய சன்னதிகளாகும்.

    11, சன்னதி திறந்திருக்கும் நேரங்கள்:

    காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை

    மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரை

    12. பூஜை காலங்கள்:

    காலை 9.00 மணி காலைசந்தி

    பகல் 12.00 மணி உச்சிக்காலம்

    மாலை 6.00 மணி நித்தியாணு

    மாலை 6.30 மணி சாயரட்சை

    இரவு 8.30 மணி அர்த்தசாமம்

    13. இத்தலத்து தாயார் பெயர் ஸ்ரீ கனகவல்லித் தாயார்

    14. விமானத்தின் பெயர் ஸ்ரீ பாவன விமானம்

    15. ஜமத்க்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் சிங்கிரிகுடியில் உள்ளன.

    16. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    17. தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.

    18. சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    19. புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்தும் திருப்பாதிரிப்புலியுர் ரயில் நிலையத்திலிருந்து சமதொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

    20. இத்தலம் கடலூர், புதுச்சேரியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.
    • இந்த திருக்கோவிலில் பஞ்சராதிர ஆகமப்படி இரண்டு காலபூஜைகள் நடக்கின்றன.

    முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் பூவரசன்குப்பம் தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார்.

    அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.

    உடனே நரசிம்மர், "நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்" என்றார்.

    அதற்கு லட்சுமி, "கோபமாக உள்ள நீங்கள் உங்களது வெப்பத்தை, தரிசிக்க வரும் பக்தர்களிடம் காட்டக்கூடாது. எனவேதான் நான் உங்களையே பார்த்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

    அதன் பின் நரசிம்மரின் கட்டளைக்கிணங்க லட்சுமி ஒரு கண்ணால் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள்பாலித்து வருகிறாள்.

    பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகசன்னதியும் இருக்கிறது.

    இந்த லட்சுமி நரசிம்மபெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும்.

    பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.

    இந்த திருக்கோவிலில் பஞ்சராதிர ஆகமப்படி இரண்டு காலபூஜைகள் நடக்கின்றன.

    இதில் மற்றுமொரு சிறப்பு சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ரகலச திருமஞ்சனம் எனும் இந்த விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாளை வேண்டினால் கடன் தொல்லை தீரும், பொருள்கள் குவியும், இங்கே உற்சவர் வரதராஜ பெருமாள் இவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் காட்சி தருகிறார்.

    தினமும் இங்கே அன்னதானம் நடைபெறுகிறது.

    சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் மற்றும் பூஜைகள் உண்டு.

    • ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.
    • வேண்டுதல் நிறைவேற நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

    கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் நரசிம்மர் உக்கிரமாக அருள் பாலிக்கிறார்.

    ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.

    "நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை' என்னும் வாக்கிற்கு ஏற்ப, சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் நரசிம்மர்.

    ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது.

    வைகானஸ ஆகமப்படி இத்தலத்தில் பூஜை நடக்கிறது.

    மன நிலை பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

    வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க் கிழமைகளில் நெய்விளக்கு ஏற்றி, துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

    பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங்களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள் பாலிக்கிறார்.

    இரணியனை மேற்கு பார்த்து நின்று நரசிம்மர் வதம் செய்ததைக் குறிக்கும் வகையில், மேற்கு பார்த்த நிலையில் உள்ளார்.

    ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது.

    இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள்.

    மற்ற நரசிம்மர் தலங்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தலம் இது.

    உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் பாவன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

    • அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.
    • இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    தன் பக்தன் பிரகலாதன், அவனது தந்தை இரணியனால் கொடுமைப்படுத்த படுவதை அறிந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார்.

    அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

    அவரது கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர்.

    வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர்.

    இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    உற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    நரசிம்மர் கைகளில் பிரயோக சக்கரம், குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.

    மற்ற கைகள் இரணியனை வதம் செய்த நிலையில் உள்ளது.

    • உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது.
    • நடு நாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் தலம் தனித்துவம் கொண்டது.

    1. நடு நாட்டு வைணவத் தலங்களில் பரிக்கல் தலம் தனித்துவம் கொண்டது.

    2. பரிக்கல் ஆலய கருவறைக்குள் ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார்.

    3. உலகிலேயே இரட்டைஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது.

    4. இத்தலத்து லட்சுமி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார்.

    5. பரிக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.

    6. சென்னை&திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.

    7. விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் 21 கி.மீ. தொலைவுக்கு இத்தலம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    8. விழுப்புரத்தில் இருந்து இந்த ஆலயத்துக்கு வர காலை 2 தடவை, மதியம் 1 தடவை, மாலை 1 தடவை ஆகிய 4 தடவை மட்டுமே பஸ் வசதி உள்ளது.

    9. கெடிலம் பகுதியில் இருந்து இத்தலத்துக்கு வர மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கிறது.

    10. 1800 ஆண்டுகள் பழமையான இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும்.

    11. பரிக்கல் தலத்தில் இருந்து பூவரசன் குப்பம் தலம் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

    12. இத்தலம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் திறந்து இருக்கும்.

    13. காலை 8 மணி முதல் 9 மணி வரை காலசாந்தி பூஜை, 11 மணி முதல் 12 மணி வரை உச்சிகால பூஜை, இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை ராக்கால பூஜை நடைபெறும்.

    14. இத்தலத்தில் ரூ.10 கட்டணம் செலுத்தி சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்யலாம்.

    15. இத்தலத்தில் வருடத்தில் 12 மாதங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி நடத்தப்படுகிறது.

    16. ஆந்திராவைச் சேர்ந்த பலர் இத்தல நரசிம்மரை குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

    எனவே தெலுங்கு வருடப் பிறப்பு இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    17. முதல் அமைச்சரின் அன்னதானத்திட்டம் இத்தலத்தில் செயல்படுத்தப்படுகிறது.

    தினமும் 50 பேருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    18. இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.

    19. திருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட உடனடி பலன் கிடைக்கிறது.

    20. நரசிம்மரிடம் வேண்டிக் கொண்டவர்கள் இத்தலத்தில் எண்ணை, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம்.

    21. இத்தலத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

    22. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இத்தலத்துக்கு வந்து வழிபாடுகள் செய்வது குறிப்பிடத்தக்கது.

    23. வரதராஜபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார். ஸ்ரீரங்கத்திலும் வரதராஜ பெருமாள் இதே அமைப்புடன்தான் உள்ளார்.

    24. இத்தலத்தின் புராண கால பெயர் ''பரகலா'' என்பதாகும்.

    25. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

    • அந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்பட்டன.
    • சுவாதி உள்பட நரசிம்மருக்கு உகந்த நாட்களில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் எத்தனையோ பழமை சிறப்புகள் கொண்டது.

    அந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    அவற்றில் பல வழிபாடுகள் கால ஓட்டத்தில் மறைந்து விட்டன.

    அந்த வழிபாடுகளில் சில தற்போது மீண்டும் நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளன.

    அதில் ஈரத்துணியுடன் 48 தடவை பரிக்கல் ஆலய முதல் பிரகாரத்தை சுற்றி பிரதட்சணம் செய்யும் வழிபாடு புத்துயிர் பெற்றுள்ளது.

    யார் ஒருவர் "ஓம் நமோ நாராயணா" என்று உச்சரித்தப்படி பரிக்கல் லட்சுமி நரசிம்மரை நினைத்து மனம் உருகி ஈர உடையுடன் 48 தடவை பிரதட்சணம் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும்.

    அவர்கள் என்ன வேண்டுதல் வைக்கிறார்களோ அதை லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி வைப்பார்.

    இந்த வழிபாட்டுக்கு உதவும் வகையில் பரிக்கல் ஆலயம் அருகில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் உள்ளன.

    இரவில் அங்கு தங்கி விட்டு அதிகாலை எழுந்து குளித்து விட்டு ஈரத்துணியுடன் 48 தடவை ஆலய பிரதட்சணம் செய்யலாம்.

    சுவாதி உள்பட நரசிம்மருக்கு உகந்த நாட்களில் இந்த வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டு தோறும் பல திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

    தைத்திங்கள் 5ம் நாள் பரிக்கல் நரசிம்மர் புறப்பாட்டில் ஊர்வலமாக பெண்ணையாறு சென்று அங்கு ஒரு நாள் இரவு தங்குவார்.

    இது ஒரு பிரார்த்தனை திருத்தலம்.

    இங்கு பக்தர்களுடைய விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால், அதற்கு இங்கு பொதுமக்களால் அர்ச்சகரை கொண்டு ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    பொதுவாக மனிதர்களுக்கு மூன்று விதமான துன்பங்கள் நேரிடும்.

    1. கடன் தொல்லை.

    2. பக்கத்திலுள்ளவர்களாலோ அல்லது உறவினர்களால் ஏற்படும் பகை.

    3. வியாதியினால், மருந்துகளாலோ குணப்படுத்த முடியாத படி மிகப் பெரிய தொல்லை.

    இப்படிப்பட்ட தொல்லைகளிலிருந்து விடுபட ஒரு சிறப்பு பூஜை இக்கோவிலில் நடத்தப்படுகிறது.

    • சரித்திர புகழ் பெற்ற கல்வெட்டுக்கள் பரிக்கல் கோவிலின் வெளிச்சுவர்களில் உள்ளன.
    • மீன் வடிவக் குறியீடுகள் உள்ள கல்வெட்டுக்கள் இங்கே காணப்படுகின்றன.

    சரித்திர புகழ் பெற்ற கல்வெட்டுக்கள் பரிக்கல் கோவிலின் வெளிச்சுவர்களில் உள்ளன.

    பல்லாயிரக்கணக்கான புகழ் பெற்ற மீன் வடிவக் குறியீடுகள் உள்ள கல்வெட்டுக்கள், (பாண்டிய அரசர்களின் சின்னம் மீன் சின்னம்) இங்கே காணப்படுகின்றன.

    13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோப்பெருஞ்சிங்கம் என்ற பாண்டிய அரசனுடைய பெரும் பங்களிப்பை இது குறிக்கிறது.

    14ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருபுவனம் சக்கரவர்த்தி கோனிர்மாய் கொண்டானுடைய பங்களிப்பைப் பற்றியும் நாம் அறிகிறோம்.

    மற்றொரு கல்வெட்டின் மூலம் அருகிலுள்ள கிராமங்களான திருவெண்ணை நல்லூர், அனத்தூர், சித்தனூர் முதலிய கிராம மக்களுக்கு வரி தள்ளுபடியை வழங்கியதாகவும், அக்கிராம மக்கள் அந்த தொகையை இத்திருக்கோவிலைப் பராமரிக்கவும், விளக்கு ஏற்றவும் மற்றும் கோவில் திருப்பணிக்காகவும் பயன்படுத்தியதாகச் சாசனம் இங்கே உள்ளது.

    முதலாம் ராஜராஜ சோழன் பரிக்கல் கோவிலின் திருக்குளத்தை வெட்டி இத்தலத்தில் திருப்பணி செய்துள்ளான்.

    இத்திருக்கோவிலின் குடமுழுக்கை பல்லவ அரசர்கள் நாயக்க மன்னர்கள் நிறைவேற்றியதாகவும் கல்வெட்டில் குறிப்புகள் உள்ளன.

    • விஷ்ணுவின் அவதாரங்களில் 4வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும்.
    • அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதாரமாகும்.

    விஷ்ணுவின் அவதாரங்களில் 4வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும்.

    இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார்.

    மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல.

    அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதாரமாகும்.

    இதன் காரணமாக மற்ற அவதாரங்களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு.

    நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும்.

    எனவேதான் "நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை" என்பார்கள்.

    எத்தனையோ தெய்வங்களிடம் வேண்டுதல் வைத்து முறையிட்டு, எதுவும் நடக்காமல் சலிப்படைந்தவர்கள், நரசிம்மரிடம் சரண் அடைந்து நினைத்தது நிறைவேற காண்பார்கள்.

    எனவே நரசிம்மர் தனது பக்தர்களைத் தக்க சமயத்தில் காத்து அருளும் கடவுளாக கருதப்படுகிறார்.

    ×