search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் சஸ்பெண்டு"

    • பள்ளி வகுப்பறையின் மேற்கூறையில் நீர்க்கசிவு.
    • கல்வி அதிகாரி உள்பட 2 பேர் சஸ்பெண்டு.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் நென்னல் மண்டலத்தில் உள்ள குஷ்னேபள்ளி கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள வகுப்பறையின் மேற்கூறையில் நீர்க்கசிவு ஏற்பட்டது.

    தொடர் மழை காரணமாக பள்ளி வகுப்பறையில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்யும் போது பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் குடை பிடித்து அமர்ந்தபடி பாடம் கவனிக்கும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வெளியானது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாவட்ட கலெக்டர் குமார் தீபக் மற்றும் கல்வி அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்தனர்.

    அப்போது பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மேற்கூறையில் கசிவு இருப்பதை கண்டனர். மேலும் அந்த பள்ளியில் பாடம் நடத்துவதற்கு வகுப்பறைகள் இருந்தாலும் கூரையில் கசிவு உள்ள வகுப்பறையில் மாணவர்களை வேண்டுமென்றே அமர வைத்து குடைபிடித்து வீடியோ எடுத்ததாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நென்னல் மண்டல கல்வி அலுவலர் மற்றும் பள்ளி உதவியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். 

    • பச்சா பாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி கோப்புகளை ஆய்வு செய்தார்.
    • சுஜித்குமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பால் பொருட்களை விற்பனை செய்து அதற்கான தொகையை செலுத்தாமல் இருந்தது அமைச்சரின் ஆய்வுக்கு பின் தெரியவந்துள்ளது.

    கோவை:

    பால்வளத்துறை அமைச்சர் நாசர் கடந்த வாரம் கோவை மலுமிச்சம்பட்டி, மதுக்கரையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பச்சா பாளையத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி கோப்புகளை ஆய்வு செய்தார்.

    அப்போது பால் விற்பனை பிரிவு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து கோவை ஆர்.எஸ்.புரம் பால் விற்பனை அதிகாரியான சுப்பிரமணியம் மற்றும் சுஜித்குமார் ஆகிய 2 பேரை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். சுப்பிரமணியம் ஆவின் அண்ணா தொழிற்சங்கத்தில் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

    இவர் திருப்பூர் ஆவின் பார்லர் பொறுப்பாளராக இருந்தபோது ரூ.20 லட்சமும், கோவை ஆர்.எஸ்.புரத்தில் பால் விற்பனை அலுவலராக பணியாற்றியபோது ரூ.70 லட்சமும் என மொத்தம் ரூ.90 லட்சம் பால் பொருட்களை விற்றும் அதில் வந்த பணத்தை ஆவினுக்கு செலுத்தாமல் இருந்து வந்தது அமைச்சரின் ஆய்வில் தெரியவந்தது.

    சுஜித்குமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பால் பொருட்களை விற்பனை செய்து அதற்கான தொகையை செலுத்தாமல் இருந்ததும் அமைச்சரின் ஆய்வுக்கு பின் தெரியவந்துள்ளது.

    அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட சில தினங்களிலேயே 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊழல் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், தவறுகள் யார் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இதனால் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

    ×