search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டலங்கள்"

    • கட்டிட அளவீடு பணிகளுக்கு கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும்
    • மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி கூட்டம் இன்று கூட்டரங்கில் நடந்தது. மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், நகர் நல அதிகாரி டாக்டர் விஜய் சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மண்டல தலைவர்கள் செல்வக்குமார், அகஸ்டினா கோகிலவாணி, முத்துராமன், ஜவகர் கவுன்சிலர்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, டி.ஆர். செல்வம், உதயகுமார், சேகர், அக் ஷயா கண்ணன், ரமேஷ், நவீன் குமார், அய்யப்பன், அனுஷா பிரைட், பால் அகியா கோபால் சுப்பிரமணியன், அனிலா சுகுமாறன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறிய தாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சிக்கு ட்பட்ட பகுதிகளில் பிளாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வீடுகளுக்கு வரி நிர்ணயம் செய்ய வீடுகளை தனித்தனியாக அளவீடு செய்து வரு கிறார்கள். வீடுகளை அளவீடு செய்யாமல் தற்போது உள்ளது போல் வரிகளை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த 4 மாதங்களாக எந்த வேலையும் நடைபெறவில்லை. 4 மாதங்கள் ஆகியும் வார்டுக்கு ஒரு ரூபாய் வரை வேலை செய்யவில்லையே என்று பொதுமக்கள் எங்களை ஏளனமாக பார்க்கிறார்கள். உடனடியாக பணிகளை செய்வதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் ஏற்கனவே மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரி வழங்கி வருகிறார்கள். உடனடியாக மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் கடை களுக்கு லைசன்ஸ் வழங்கு வதில் தற்காலிக ஊழியர்கள் பண வசூல் செய்கிறார்கள் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோட்டார், வடசேரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அடை யாள அட்டை வழங்க வேண்டும். மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதிலளித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    நாகர்கோவில் பகுதியில் ரியல் எஸ்டேட்டுக்கு மாநகராட்சி மூலமாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெற்ற பிறகே மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். பிளாட்டுகள் அமைப்பதற்கு அனுமதி கொடுப்பதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாகர்கோவில் மாநகர பகுதியில் தற்போது நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

    2008-ம்ஆண்டு அதாவது கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பகுதி எந்த மண்டலமாக இருந்ததோ அதே மண்டலமாக தான் தற்போது செயல்படும். மண்டலங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் தான் வரி விதிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 600 சதுரஅடி உள்ள வீடுகளுக்கு 25சதவீதமும் 601 முதல் 1200 சதுர அடி உள்ள வீடுகளுக்கு 50 சதவீதமும் 1201 முதல் 1800 சதுரடி உள்ள வீடுகளுக்கு 75 சதவீதமும் 1801-க்கு மேல் உள்ளவர்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    ஆளூர் பேரூராட்சி தற்போது டி மண்டலத்தில் தான் உள்ளது. பொதுமக்கள் மீது வரியை திணிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்பொழுது மாநகர பகுதியில் அரசின் விதி முறைக்கு உட்பட்டு தான் கட்டிடங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் ஏற்கனவே அனுமதி பெற்ற அளவை விட கூடுதலாக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகளில் ஆஸ்பத்திரிகளில் பள்ளி கள் கல்லூரிகளில் கூடு தலாக கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. எனவேதான் அளவீடு செய்து அதற்கு வரி விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இதன் மூலமாக மாநக ராட்சிக்கு வருமானமும் அதிகரிக்கும். வீடுகள் மற்றும் கட்டடங்களை அளவீடு செய்வதற்கு கவுன்சிலர் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். பாரபட்சமின்றி இதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரில் தெரு விளக்குகளை சரி செய்யப்படவில்லை என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டிய அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை மேற்கொண்டு தற்போது புதிதாக ஒப்பந்தகாரர் மூலமாக தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டு வரு கிறது. இதுவரை 90 சதவீத தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள தெருவிளக்குகள் விரைவில் சீரமைக்கப்படும்.

    மாநகராட்சி கவுன்சிலர் களின் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்காக நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி யில் பிறந்த குழந்தைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மீது உரிய ஆவணங்களுடன் புகார் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர் அனை வருக்கும் ஒரு வார காலத்திற்குள் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதிகாரிகள் மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபடும் போது கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.ஏற்கனவே கடந்த கூட்டத்தில் கவுன்சிலர் விஜிலா ஜஸ்டிஸ் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள பழுதடைந்த குடிநீர் தொட்டியை மாற்ற வேண்டும் என்று தெரி வித்திருந்தார்.

    ஆனால் இதுவரை மாற்றவில்லை என்று இன்றும் புகார் கூறியுள்ளார். குடிநீர் தொட்டியை மாற்ற நட வடிக்கை எடுக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே பணிகள் முடிக்கப்பட்ட காண்ட்ராக்ட்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்று என்னிடமே புகார் கொடுத்துள்ளனர்.

    ரூ.10 கோடி கொடுக்க வேண்டியுள்ளது. முன்னு ரிமை அடிப்படையில் பணம் வந்தவுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டார் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 2 இடங்களில் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் அந்த பணி கிடப்பில் உள்ளது.மேலும் ரெயில்வே ரோட்டில் செல்லும் சாலையின் ஒரு பகுதி ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது மற்றொரு பகுதி மாநகராட்சிக்கு சொந்தமானது ஆகும்.

    ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான ரோட்டை மாநகராட்சிக்கு இடம் பெறுவதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சவேரியார் ஆலயத்தில் இருந்து ஈத்தாமொழி சந்திப்பு வரை உள்ள சாலைரூ. 20லட்சத்து 60ஆயிரம் செலவில் சீரமைக்க டெண்டர் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×