என் மலர்
நீங்கள் தேடியது "வேன் மோதி"
- வேன் எதிர்பாராத விதமாக வேலுசாமி வந்த மொபட் மீது மோதியது.
- கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த வர் வேலுசாமி (வயது 56). இவர் திருமண புரோக்கராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் வேலு சாமி கோபிசெட்டிபாளை யம்- சத்தியமங்கலம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். தொடர்ந்து அவர் லக்கம் பட்டி பிரிவு அருகே சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக வேலுசாமி வந்த மொபட் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலுசாமி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- வேன் முருகன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 62) சப்போட்டா பழ வியாபாரி.
இவர் நேற்று இரவு அந்தியூரில் வேலையை முடித்துக் கொண்டு ஆப்பக்கூடல் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரில் ஒரு வேன் வந்தது. அந்த வேன் எதிர்பாராதவிதமாக முருகன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர் செல்போன் மூலம் அவரது மகன் பிரகாஷ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் உடலை பார்த்து கதறி அழுதார். இதை தொடர்ந்து அவரது உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து அந்தியூர் சப் -இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- பிக்கப் வேன் மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சீவி மீது மோதியது.
- இதில் தலை மற்றும் காலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சி வரப்பள்ளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி (40). கூலி தொழிலாளி.
இந்நிலையில் சஞ்சீவி தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மீண்டும் அத்தாணியில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே சத்தியமங்கலம் சாலையில் இருந்து அத்தாணி சாலை நோக்கி மேட்டுப்பாளையம் காட்டூரை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் பிக்கப் வேனை ஓட்டி வந்தார்.
வரப்பள்ளம் சிதம்பரம் தோட்டம் அருகே முன்னே சென்ற வாகன ஓட்டி ஒருவரை பிக்கப் வேனை ஓட்டி வந்த சதாம் உசேன் வேகமாக முந்தி செல்ல முயன்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சீவி மீது மோதியது.
இதில் தலை மற்றும் காலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சஞ்சீவி மனைவி சாந்தா ரத்த காயங்களுடன் கீழே கிடந்த சஞ்சீவியை அருகில் இருந்தோர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சஞ்சீவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வேனை ஓட்டி வந்த சதாம் உசேன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு-சக்தி மெயின் ரோட்டை கடக்க முயன்று உள்ளார்.
- அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக ராசான் மீது மோதியது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே முத்து காளிமடை பகுதியை சேர்ந்தவர் ராசான் (55). இன்று காலை குள்ளம்பாளையம் பிரிவு ஈரோடு-சக்தி மெயின் ரோட்டை கடக்க முயன்று உள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக ராசான் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராசான் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரக்கு வாகனம் அவர் பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது.
- தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி அருகே உள்ள வைர மங்கலம் அடுத்த வெங்க மேடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி தவசியம்மாள் (வயது 64).
இவர் இன்றி காலை கவுந்தப்பாடி- பெருந்தலை யூர் ரோட்டில் மாதவன் தோட்டம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனம் (வேன்) அவர் பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் அவர் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்ட ர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் வேனை ஓட்டி வந்த சண்முக வேலன் என்பவரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சரக்கு வேன் சரஸ்வதி மீது மோதியது.
- டாக்டர் வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சென்னிமலை:
சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோடு டி.எம்.எம்.புரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணி அளவில் ஈங்கூர் ரோட்டில் உள்ள மாரியப்பா நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெருந்துறை சிப்காட்டில் இருந்து கால்நடை தீவனங்களை ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வேன் சரஸ்வதி மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இருசக்கர வாகனம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியது.
- பூங்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
டி.என்.பாளையம்:
கோபி அருகே உள்ள கூகலூர் கிரீன் நகரை சேர்ந்தவர் மணி (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (50).
இன்று காலை மணி தனது மனைவியுடன் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூருக்கு வேலைக்காக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். பூங்கொடி இரு சக்கர வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து வந்தார்.
இதை தொடர்ந்து அவர்கள் டி.என்.பாளையம் கொன்னகொடிக்கால் என்ற பகுதியில் சென்றனர். அப்போது அங்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் பின்னால் சென்றது.
அந்த வேனை கூகலூர் அருகே உள்ள தாழைக்கொம்புதூர் கொன்னமடையை சேர்ந்த இளையகுமார் (30) ஓட்டினார். திடீரென மணி மற்றும் அவரது மனைவி பூங்கொடி சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மணியின் மனைவி பூங்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் தூக்கி வீசப்பட்ட மணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயம் அடைந்த மணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
டி.என்.பாளையம் அருகே இன்று காலை கணவர் கண் முன்னே மனைவி விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- வேன் ஒன்று ராமசாமி ஓட்டி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.
- அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறச்சலூர்:
அறச்சலூர் அருகே உள்ள பச்சாகுட்டையை சேர்ந்தவர் ராமசாமி (55). விவசாயி.
இவர் தனது ஊரான பச்சாக்குட்டையில் இருந்து பள்ளியூத்து செல்லும் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு மண்கரட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று ராமசாமி ஓட்டி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் ராமசாமிக்கு பலத்த அடிபட்டது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி இறந்தார். இச்சம்பவம் குறித்து அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது விவசாயி மீது கார் எதிர்பாராத விதமாக பலமாக மோதியது.
- இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 59). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் தங்கமுத்து தனது வீட்டில் இருந்து விஜயமங்கலம் வருவதற்காக மொபட்டில் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது அந்த வழியாக சேலம் மார்க்கம் நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராத விதமாக இவர் மீது பலமாக மோதியது.
இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்ட பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- நிலை தடுமாறி கோபால கிருஷ்ணன் ஓட்டி வந்த வேன் ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
- இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 43). இவர் பொலவகாளி பாளையம் பகுதியில் இருந்து வேனில் துணி லோடு ஏற்றி கொண்டு சென்றார். அவருடன் அண்ணா மலை என்பவர் உடன் சென்றார்.
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே வேன் வந்து கொண்டு இருந்தது. அந்த வழியாக மற்றொரு வேன் வந்தது.
அப்போது அந்த வேனை கோபாலகிருஷ்ணன் முந்த முயன்றார். அப்போது நிலை தடுமாறி கோபால கிருஷ்ணன் ஓட்டி வந்த வேன் ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அண்ணா மலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அவர்களை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழி யிலேயே கோபால கிருஷ்ணன் பரிதாபமாக இற ந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலை கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாழை இலைகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வேன் ஒன்று பின் நோக்கி வந்தபோது எதிர்பாராத விதமாக முத்தையாள் மீது மோதியது.
- பங்களாப்புதூர் போலீசார் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் சந்திரசேகர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகேயுள்ள வாணிப்புத்தூர் கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன் (80), இவரது மனைவி முத்தையாள் (80).
முத்தாயாள் நேற்று இரவு தனது உறவினரை பார்க்க கள்ளியங்காடு சேர்மேன் தோட்டம் வண்டிப்பாதை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தோட்டத்திற்குள் இருந்து வாழை இலைகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வேன் ஒன்று பின் நோக்கி வந்தபோது எதிர்பாராத விதமாக முத்தையாள் மீது மோதியது.
இதில் இடது முழங்காலில் அடிபட்டு படுகாயமடைந்த முத்தையாளை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முத்தையம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து உடல் கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.
பங்களாப்புதூர் போலீசார் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் சந்திரசேகர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோபிசெட்டிபாளையம் அருகே சரக்கு வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலியானார்.
- இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (34). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இவர் கோபிசெட்டிபாளையம் அடுத்த கெட்டிசெவியூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் நம்பியூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வேன் அருகே இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில் குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் சரக்கு வேனில் பாலகுமார் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ஆகியோர் வந்தனர். இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.