search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயில் கருகி பலி"

    • குப்பைகளை எரித்த போது பரிதாபம்
    • அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியா ங்குப்பத்தை சேர்ந்தவர் மார்கன் (வயது 80). இவரது வீட்டின் அருகே ஏராளமான குப்பைகள் இருந்தது.

    அந்த குப்பைகள் காற்றில் பறந்தது. நேற்று மாலை சேகரித்து குவியலாக வைத்தார். பின்னர் தீ மூட்டி குப்பைகளை எரித்தார். அப்போது மார்கன் அணிந்திருந்த வேட்டியின் மீது திடீரென தீப்பொறி வேகமாக எரிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மார்கன் மீது எரிய தொடங்கிய தீயை அணைக்க முயன்றனர். இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார்.

    படுகாயம் அடைந்த அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக மார்கன் இறந்தார்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மார்கன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருநாவலூர் அருகே சமையல் செய்த பெண் தீயில் கருகி பலியானார்.
    • என்னை காப்பாற்றுங்கள் என்னை காப்பாற்றுங்கள் என வீட்டின் வெளியே வந்து அலறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே இரும்பை பகுதியை சேர்ந்த பெரியநாயகம்.அவரது மகள் யட்சிதா (வயது 28). இவர் கடந்த 5-ந்தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டுஇருந்தார். அப்போதுஅவரது துப்பட்டாவில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது. இந்த தீ சற்று நேரத்தில் மலமல என பற்றி எரியத் தொடங்கியது. துப்பட்டாவில் தீ பற்றி எரிவதை அறிந்த யட்சிதா அதிர்ந்து போய் செய்வ தறியாது திகைத்தார். என்னை காப்பாற்றுங்கள் என்னை காப்பாற்றுங்கள் என வீட்டின் வெளியே வந்து அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து இவர் மீது பற்றி தீயை போராடி அணைத்தனர். 

    இந்த தீ விபத்தில் யட்சிதாவிற்க்கு 80 சதவீதம் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்தவர்கள் யட்சிதாவை விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சைக்கு சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி யட்சிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து யட்சிதாவின் தந்தை பெரியநாயகம் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இட த்திற்கு விரைந்து சென்று யட்சிதாவின் உடலை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டீ வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்தது.
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஆர்.என்.புதூர் அடுத்த பெருமாள்மலை, ராஜீவ் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. அவரது மனைவி நாகராணி (45). மூர்த்தி டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று மாலை நாகராணி டீ வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்தது. இதனால் வேதனையில் அவர் அலறினார்.

    அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் நாகராணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நாகராணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×