search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை அகதிகள்"

    • அகதிகள் முகாமில் இருந்தபோது அடிப்படை வசதிகள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.
    • எங்களுக்கு எல்லாம் புதிய வீடு என்பது கனவு இல்லம்போல்தான் இருந்து வந்தது.

    புதிய வீடு கிடைத்த அகதிகள் முகாமை சேர்ந்த சிவமலர் (வயது 35) என்பவர் தெரிவிக்கையில், நான் ஒரு வயதில் எனது பெற்றோருடன் தமிழகத்துக்கு வந்தேன். தற்போது எனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் முகாமில் பழுதடைந்த வீட்டில் வசித்து வந்தேன். மழைக்காலங்களில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீட்டிற்குள் வழிந்தோடும் நிலை இருந்தது. நமக்கும் புது வீடு கிடைக்கும் என்று கனவில்கூட நினைத்து பார்த்ததில்லை. எத்தனையோ முதல்வர்கள் ஆட்சியில் இருந்து வந்தாலும் எங்கள் நிலை குறித்து அறிந்து புதிய வீடு வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

    அகதிகள் வாழ்க்கையிலும் ஒளியேற்றி வைத்து எங்கள் குழந்தைகளை தலைநிமிரச் செய்து சமூகத்தில் ஒரு அங்கமாக உணர்த்திய முதல்-அமைச்சருக்கு காலம் முழுவதும் நன்றி கடன் செலுத்துவோம் என்றார்.

    பயனாளி ஜோதிமலர் (30) என்பவர் தெரிவிக்கையில், எனது பெற்றோர் கடந்த 1990ம் ஆண்டு இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்தனர். நான்பிறந்ததே தமிழகத்தில்தான். தற்போது எனக்கு திருமணம் ஆகி கணவர் தேவதாஸ் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். அகதிகள் முகாமில் இருந்தபோது அடிப்படை வசதிகள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். நாங்கள் கேட்டாலும் அது பல சமயங்களில் கிடைக்காது. அப்போதுதான் நாங்கள் அகதிகள் என்ற உணர்வே ஏற்படும். எங்களுக்கு எல்லாம் புதிய வீடு என்பது கனவு இல்லம்போல்தான் இருந்து வந்தது. தற்போது எங்களுக்கும் வீடு வழங்கி சமுதாயத்தில் தலைநிமிர செய்த முதல்-அமைச்சருக்கு நன்றி.

    என்னைப்போலவே இலங்கையில் இருந்து வந்த பெரும்பாலானோர் தற்போது புதிய வீட்டில் குடியேறி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும்போது அகதிகள் என்ற உணர்வே இல்லாமல் மறைந்து விட்டது என்றார்.

    • இலங்கையில் இருந்து வெளியேறி அகதிகளாக தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
    • தனுஷ்கோடி 5-வது மணல் திட்டு பகுதியில் சிலர் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை-எளிய குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    இந்த விலைவாசி உயர்வால் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அவர்களில் பலர் வாழ வழியின்றி இலங்கையில் இருந்து வெளியேறி அகதிகளாக தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பலர் குடும்பம் குடும்பமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக படகுகளில் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு வருகின்றனர். அவர்களை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடற்படை வீரர்கள் இன்று அதிகாலை ஹோவர்கிராப்ட் கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனுஷ்கோடி 5-வது மணல் திட்டு பகுதியில் சிலர் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர்.

    இதையடுத்து கடற்படை வீரர்கள் அங்கு சென்று விசாரித்த போது அவர்கள் இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார்(வயது49), அவரது மனைவி ரோஜா (38), மகள் விதுஷா(12), மகன்கள் தனுஷன்(10), கிருஷ்ணா(7) மற்றும் நியூட்டன் நிமாலராஜன்(47) என்பது தெரியவந்தது.

    இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கு வாழ வழியில்லாமல் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் படகு மூலம் இலங்கையில் இருந்து வந்துள்ளனர். அவர்களை அங்கிருந்து நேற்று இரவு படகில் அழைத்து வந்தவர்கள், இன்று அதிகாலை தனுஷ்கோடி பகுதியில் இறக்கி விட்டு சென்றிருக்கின்றனர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் கடற்படை வீரர்கள் ஹோவர்கிராப்ட் கப்பலில் கரைக்கு அழைத்து வந்தனர். பின்பு அவர்களை தனுஷ்கோடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சிறுவர்களை தவிர மற்ற 3 பேரிடமும் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 125-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி சிறப்பு முகாமில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
    • விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இலங்கை அகதிகள் தொடர் உண்ணாவிரதம்

    திருச்சி:

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் இலங்கை, வங்காளதேசம், சூடான், நைஜீரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    இந்த நிலையில் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 21 பேர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் 30 பேர் மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். 30 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திருச்சி அகதிகள் முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×