என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆதித்ய தாக்கரே"
- ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக தாக்கி பேசினார்.
- ஆதித்ய தாக்கரே தலைமையில் பிரமாண்ட பேரணி நடந்தது.
தானே :
உத்தவ்தாக்கரே கட்சியின் மகளிரணியை சேர்ந்த ரோஷிணி ஷிண்டே, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மனைவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதுபற்றி அறிந்த ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் அவரை பிடித்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரோஷிணி ஷிண்டே தானேயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று முன்தினம் உத்தவ்தாக்கரே நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். அப்போது துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை தகுதியற்ற உள்துறை மந்திரி என்று கடுமையாக விமர்சித்தார். தானே போலீஸ் கமிஷனரையும் விமர்சித்தார்.
இந்தநிலையில் தானேயில் நேற்று முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே தலைமையில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டனர். குறிப்பாக முன்னாள் மந்திரிகள் ஜிதேந்திரா அவாத், அனில் பரப் பங்கேற்றனர்.
தானேயில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை நோக்கி சென்றது. பேரணி நிறைவில் தொண்டர்கள் மத்தியில் ஆதித்ய தாக்கரே பேசினார். அப்போது முதல்-மந்திரி ஷிண்டேக்கு செல்வாக்கு உள்ள தானேயில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்றும், அந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றும் ஆதித்ய தாக்கரே தெரிவித்தார். மேலும் ஏக்நாத் ஷிண்டேயை கடுமையாக தாக்கி பேசினார்.
இதனை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் தானே போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆதித்ய தாக்கரே உள்ளிட்டவர்கள் சென்றனர். அங்கு போலீஸ் கமிஷனர் ஜெய்தீப் சிங்கை நேரில் சந்தித்தனர்.
அப்போது, ரோஷிணி ஷிண்டேயை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரிடம் மனு அளித்தனர்.
- ஏக்நாத் ஷிண்டேவால் கட்சியின் பெயர், சின்னத்தை தான் திருடமுடியும்
- அலிபாபாவும், 40 திருடர்களும் நடத்தும் அரசாங்கம் இது
மும்பை :
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த வாரம் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரேவின் ஒர்லி தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தினார். பொதுக்கூட்டத்தில் குறைந்த அளவில் மட்டுமே தொண்டர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தொண்டர்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஒர்லியில் ஆதித்ய தாக்கரேவின் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தொண்டாகள் திரளாக கலந்து கொண்டனர். உத்தவ் தாக்கரே அணியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் சாவந்த் எம்.பி., பாஸ்கர் ஜாதவ் எம்.எல்.ஏ., சுஷ்மா அந்தாரே, சச்சின் ஆஹிர் எம்.எல்.சி., சுனில் ஷிண்டே உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆதித்ய தாக்கரே பேசியதாவது:-
ஏக்நாத் ஷிண்டேவால் சிவசேனாவின் பெயர், சின்னத்தை மட்டுமே திருட முடியும். ஆனால் மராட்டிய மற்றும் மும்பை மக்கள் எங்கள் (தாக்கரே) மீதும், சிவசேனாவின் மீதும் வைத்து உள்ள அன்பை திருடமுடியாது. இது சிவசேனாவுக்கான போராட்டம் அல்ல. ஜனநாயகம், அரசியல் அமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம். ஒற்றுமையுடன் இருந்து அவர்களுக்கு எதிராக போராடுவோம். நமக்கு வெற்றி கிடைக்கும்.
ஷிண்டே-பா.ஜனதா அரசு மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் முன்பே கவிழும். இதுபற்றி தொழில் அதிபர்களுக்கு கூட தெரிந்து இருக்கிறது. அதனால் தான் மராட்டியத்தில் முதலீடு செய்ய யாரும் முன்வரவில்லை.
அலிபாபாவும், 40 திருடர்களும் நடத்தும் அரசாங்கம் இது. ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் செய்யும் முறைகேடுகள் பற்றி அவர்களின் புதிய நண்பர்கள் (பா.ஜனதா) தான் எங்களுக்கு தகவல் கொடுக்கிறார்கள். இந்த அரசு கவிழ்ந்த பிறகு துரோகிகள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்வார்கள். அரசு கவிழ்ந்த பிறகு அவர்களின் தேவை பா.ஜனதாவுக்கு முடிந்துவிடும்.
சிவசேனாவின் சின்னம், பெயரை பறிக்க தான் துரோக எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தேவைப்பட்டனர். தற்போது ஆட்டம் முடிந்துவிட்டது. கட்சி பெயர், சின்னம் கிடைத்த பிறகு ஏக்நாத் ஷிண்டே, "தாக்கரே" பெயரும் வேண்டும் என டெல்லியிடம் கேட்டாலும் கேட்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிவசேனாவில் தற்போது தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது.
- ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெண்ணை கூட மந்திரி சபையில் சேர்க்கவில்லை.
தானே :
தானேயில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மண்ணின் மைந்தர்களின் உரிமைக்காக போராட்டங்களை நடத்தி வந்த சிவசேனாவில் தற்போது தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது மண்ணின் மைந்தர்களின் குறிப்பாக இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேலைவாய்ப்பு கண்காட்சிகளை நடத்துகிறோம். இளைஞர்கள் இதன் ஒரு பகுதியாக மாறி உள்ளனர். இதனால் புதிய மற்றும் வலுவான சிவசேனா தற்போது உருவாகி வருகிறது.
பா.ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாலாசாகேப் பஞ்சி சிவசேனாவின் கூட்டணி அரசு மக்களை பிளவுபடுத்துவதை தவிர மராட்டியத்திற்கு வேறு எதுவும் செய்யவில்லை.
இந்த துரோகிகளின் அரசாங்கம் அடுத்த 2 மாதங்களில் கவிழ்ந்துவிடும். நம்மை விட்டு பிரிந்தவர்கள் துரோகிகள், எங்களுடன் கைகோர்த்து நிற்பவர்கள் உண்மையான சிவசேனா தொண்டர்கள்.
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழில் திட்டங்களை பற்றி சிந்திக்காமல், எப்படி அரசியல் செய்யலாம் என்று யோசிப்பதிலேயே ஆளும்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இதுவரை ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெண்ணை கூட மந்திரி சபையில் சேர்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியை சேர்ந்த ராஜன் விச்சாரே, 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
- சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது.
- தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.
மும்பை :
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை வலுப்படுத்தும் நோக்கில் அந்த கட்சியின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
நேற்று அவர் அகோலாவில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
துரோகிகளை கொண்ட மராட்டிய அரசு வரும் மாதங்களில் கவிழும். இதனால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஷிண்டே தலைமையிலான அரசு 4 மிகப்பெரிய தொழில் திட்டங்களை இழந்து உள்ளது. அந்த திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதன் மூலம் மராட்டியம் 2 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இழந்து உள்ளது.
ஷிண்டேக்கு நெருக்கமாக இருக்கும் தொழில் துறை மந்திரி உதய் சாமந்தின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளது. அவரால் மராட்டியம் தொழில் முதலீடு வாய்ப்புகளை தொடர்ந்து இழந்து வருகிறது.
மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டேயா அல்லது தேவேந்திர பட்னாவிசா என்ற குழப்பம் அனைவரிடமும் உள்ளது. சட்டவிரோதமாக அமைந்த இந்த அரசு விவசாயிகளின் நலனை காக்க தவறிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆதித்ய தாக்கரே 3 நாளாக தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
- உத்தவ் தாக்கரே ஆட்சி செய்த போது அரசியல் செய்யவில்லை.
மும்பை :
சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத்ஷிண்டே அணி என 2 ஆக உடைந்து உள்ளது. பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே அணியில் உள்ளனர். இந்தநிலையில் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே 'சிவ் சாம்வத் யாத்திரை' என்ற பெயரில் கடந்த 3 நாளாக தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
இதில் அவர் நேற்று அவுரங்காபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து பேசினார். இதில் பைதான் பகுதியில் அவர் பேசியதாவது:-
எனது வார்த்தையை குறித்து வைத்து கொள்ளுங்கள். இந்த அரசு விரைவில் கவிழ்ந்துவிடும். மகாராஷ்டிரா இடைத்தேர்தலை சந்திக்கும்.
இந்த தொகுதி எம்.எல்.ஏ. சந்திபான் பும்ரே சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு போதிய நிதி வழங்கப்படவில்லை என கூறியது தவறு. மரத்வாடா தண்ணீர் திட்டத்தின் கீழ் முதலில் பைதான் பகுதிக்கு தான் நிதி ஒதுக்கப்பட்டது. பும்ரேவுக்கு 5 முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தோம்.
இவர்களுக்கு செய்ததை எல்லாம் நினைத்து பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது. ஆனால் இது அழுவதற்கான நேரமல்ல. இது போராட வேண்டிய நேரம். மாநிலத்தில் கடந்த 2 வாரமாக பலத்த மழை பெய்கிறது. பலர் பலியானார்கள். ஆனால் 2 பேரால் இந்த அரசாங்கம் நடத்தப்பட்டு வருகிறது. எனது தந்தை உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது, சிவசேனாவில் பிளவை ஏற்படுத்திய 40 எம்.எல்.ஏ.க்களும் துரோகிகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல அகமத்நகர் மாவட்டத்தில் உத்தவ் தாக்கரே ஆதரவு கிராந்திகாரி சேட்காரி கட்சியின் எம்.எல்.ஏ.வான சங்கர்ராவ் கடக் தொகுதியான நேவசாவில் கொட்டும் மழையில் ஆதித்ய தாக்கரே பேசினார்.
அப்போது அவர், " உங்களுக்கு நண்பர்கள் இருந்தால், அவர்கள் சங்கர்ராவ் கடக் போல இருக்க வேண்டும். நமது சொந்த ஆட்களே துரோகம் செய்து துரோகிகளாக மாறினர். ஆனாலும் சங்கர்ராவ் கடக் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக இருப்பதில் உறுதியாக நின்றார். அரசு கவிழ்ந்த பின்னரும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.
உத்தவ் தாக்கரே ஆட்சி செய்த போது அரசியல் செய்யவில்லை. அவர் தனது எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வேவு பார்க்கவில்லை. நாங்கள் தொடர்ந்து இந்த தவறை செய்வோம். சிவசேனா தொண்டர்களை நம்பவில்லை என்றால், நாங்கள் வேறுயாரை நம்ப முடியும். கட்டாயப்படுத்தி அதிருப்தி அணிக்கு இழுக்கப்பட்டவர்கள் விரும்பினால் கட்சிக்கு திரும்பலாம்" என்றார்.
இதற்கிடையே சிவ் சாம்வத் யாத்திரையின் போது ஆதித்ய தாக்கரேவின் பேச்சை கேட்டு, தொண்டர் ஒருவர் கண்ணீர் சிந்தும் காட்சி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
- அதிருப்தி அணியினர் தற்போது அவர்களின் பலத்தை காட்டுகின்றனர்.
- சிவசேனா ஒருநாளும் அரசியல் எதிரிகளை அழிக்க நினைத்தது இல்லை.
மும்பை:
சிவசேனா கட்சி 2 ஆக உடைந்து உள்ள நிலையில், இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே நேற்று 3 நாள் 'சிவ் சன்வாத்' யாத்திரையை தொடங்கினார். இதில் முதல் நாள் அவர் தானே மாவட்டத்தில் தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
2-வது நாளான இன்று அவர் நாசிக் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் சிவசேனாவினரை சந்தித்தார். இதில் அவர் மன்மாடு பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-
அதிருப்தி அணியினர் சிவசேனா, உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் செய்யவில்லை. மனிதநேயத்துக்கு செய்து உள்ளனர். அவர்களுக்கு மராட்டியத்தில் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட துணிச்சல் இல்லை. எனவே அவர் சூரத், கவுகாத்தி, கோவா சென்றனர். அசாம் வெள்ளத்தில் தத்தளித்த போது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அங்கு தங்களை மகிழ்ச்சிப்படுத்தி கொண்டு இருந்தனர்.
எனது தந்தை உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்ததால் கட்சி தலைவர்கள், தொண்டர்களை சந்திக்கவில்லை. ஆனால் அவர் முதல்-மந்திரியாக அவரது பணியை நிறுத்தவில்லை. அவர் தொடர்ந்து உழைத்து கொண்டு இருந்தார். தனது எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை எனில் அவர்கள் சென்றுவிடுவார்கள் என அவர் ஒருபோதும் நினைக்கவில்லை.
அரசியல் செய்யாதது மட்டும் தான் நாங்கள் செய்த தவறு. அதிருப்தி அணியினர் தற்போது அவர்களின் பலத்தை காட்டுகின்றனர். ஆனால் கடந்த 2½ ஆண்டுகளாக அவர்கள் அதிகாரத்தில் இருந்த போதும் அமைதியாக இருந்தனர். உத்தவ் தாக்கரே அறுவை சிகிச்சைக்கு சென்ற போது அவர்கள் பிளவை ஏற்படுத்த திட்டம் போட்டனர். துரோகிகளுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டியதில்லை.
ஆனால் நாசிக் மாவட்டத்துக்கு மகாவிகாஸ் அகாடி அரசு என்ன செய்தது என்பதை மக்களுக்கு கண்டிப்பாக சொல்வோம். விலகி செல்ல விரும்பியவர்கள் சென்றுவிட்டார்கள், ஆனாலும் காவி கொடி இங்கு பறந்து கொண்டு இருக்கிறது. சிவசேனா ஒருநாளும் அரசியல் எதிரிகளை அழிக்க நினைத்தது இல்லை. ஆனால் அவர்களுடன் (பா.ஜனதா) சேர்ந்து நமது ஆட்களே நமது கட்சியை அழிக்க முயற்சி செய்கின்றனர்.
இதற்கிடையே ஆதித்ய தாக்கரே சுற்றுப்பயணம் குறித்து அதிருப்தி அணி எம்.எல்.ஏ. குலாப்ராவ் பாட்டீல் கூறுகையில், " ஆதித்ய தாக்கரே முன்பே இதுபோன்ற பயணத்தை மேற்கொண்டு இருந்தால் கட்சி உடைந்து இருக்காது. கட்சி இழந்த பெருமையை மீட்கவே கலகத்தில் ஈடுபட்டோம் " என்றார்.
- எங்களை விட்டு சென்றவர்கள் சிவசேனாக்காரர்கள் அல்ல. அவர்கள் துரோகிகள்.
- அரசியல் நாடகமும், சர்க்கசும் மாநிலத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.
மும்பை:
சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி 2 ஆக உடைந்த நிலையில், இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே 'சிவ் சாம்வத் யாத்ரா ' என 3 நாள் பயணத்தை தொடங்கி உள்ளார். இதில் அவர் தானே மாவட்டம் பிவண்டியின் கட்சியினரை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களின் ஆசியை பெற நான் இந்த யாத்திரையை தொடங்கி இங்கு வந்து உள்ளேன். நான் புதிய சிவசேனா, மகாராஷ்டிராவை கட்டமைக்க புறப்பட்டுள்ளேன். மகாவிகாஸ் அகாடி அரசு மாநிலத்தில் மேம்பாட்டு பணிகளை செய்தது. ஆனால் தற்போதைய அரசில் 2 பேர் மட்டுமே மந்திரிசபையில் உள்ளனர்.
மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது, அதிருப்தி அணியினர் எங்களை மிரட்ட முயற்சி செய்கிறார்கள். அந்த யுக்திகளுக்கு எல்லாம் நாங்கள் செவி கொடுக்கபோவதில்லை. இந்த அரசு கவிழப்போவது நிச்சயம். இது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது. எனது தந்தை உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது ஏக்நாத்ஷிண்டே வெளியேறினார்.
அதிருப்தி அணியினருக்கு மந்திரி சபையில் இடம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் எங்களுக்கு துரோகம் செய்தனர். விட்டு சென்றனர். எங்களை விட்டு சென்றவர்கள் சிவசேனாக்காரர்கள் அல்ல. அவர்கள் துரோகிகள். மறைத்து வைக்கப்பட்டு வாக்களிக்க பஸ்சில் அழைத்து வரப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.களின் நிலையை பொறுத்து இருந்து பாருங்கள்.
அரசியல் செய்தாதது மட்டும்தான் நாங்கள் செய்த தவறு. எனவே தான் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு உள்ளோம். எங்களுக்கு எதிரானவர்களை நாங்கள் துன்புறுத்தவில்லை. மனம் திருந்தி வரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மாதோஸ்ரீயின் கதவுகள் திறந்தே இருக்கும்.
அரசியல் நாடகமும், சர்கசும் மாநிலத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. நல்லவர்களுக்கு அரசியலில் இடமில்லை. நாங்கள் நல்ல மனிதர்கள். நல்ல அரசியலை செய்வோம். உத்தவ் தாக்கரேவும், ஆதித்ய தாக்கரேவும் சட்டசபைக்கு வந்தது தான் அதிருப்தியாளர்களின் பிரச்சினை. அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- தாக்கரே குடும்பத்தின் மீது மரியாதை வைத்திருப்பதாக சிவசேனா அதிருப்தியாளர்கள் சொல்வது பொய்.
- தற்போது அசல் சிவசேனா தொண்டர்கள் இன்னும் கட்சியில் உள்ளனர்.
மும்பை
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் மகாராஷ்டிராவில் ஆட்சியை இழந்த சிவசேனா தற்போது பாராளுமன்றத்திலும் தனது பலத்தை பறிகொடுத்துள்ளது. சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள் 12 பேர் மக்களவையில் தனியாக செயல்பட முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் உத்தவ் தாக்கரே மீது சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவரது மகன் ஆதித்ய தாக்கரே கூறியதாவது:-
சிவசேனாவின் அதிருப்தியாளர்கள் வெளியேற்றம் எங்கள் மீதான வெறுப்பையும், பொறாமையையும், கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளது. இவர்கள் உண்மை முகம் வெளிவந்துள்ளது. தாக்கரே குடும்பத்தினர் மீது மரியாதை வைத்திருப்பதாக அவர்கள்(அதிருப்தியாளர்கள்) பொய் செல்கிறார்கள். துரோகிகள் எங்களை விட்டு சென்றுவிட்டனர். ஆனால் தற்போது அசல் சிவசேனா தொண்டர்கள் இன்னும் கட்சியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முன்னால் வைக்கப்பட்ட மைக்கை துணை முதல்-மந்திரி பறித்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து ஆதித்ய தாக்கரே கூறுகையில், "எங்கள் துணை முதல்-மந்திரி அப்போதைய முதல்-மந்திரியான உத்தவ் தாக்கரேவிடம் இருந்து ஒருபோதும் மைக்கை பறிக்கவில்லை என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது" என்றார்.
இந்த நிலையில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தானே, நாசிக் மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் அங்கு சில பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
- சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்துவரப்பட்டனர்.
- மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மும்பை :
மகாராஷ்டிராவில் கடந்த 2½ ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிவசேனா தலைமையிலான ஆட்சி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். இ்ந்தநிலையில் காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது.
இதற்காக கோவாவில் முகாமிட்டு இருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்துவரப்பட்டனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வருகையையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் அவர்கள் வருவதற்காக தனிவழிபாதைகள் அமைக்கப்பட்டன. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
சபாநாயகர் தேர்தலில் வாக்குப்பதிவு நடத்துவதற்காக விதான் பவன் அருகில் உள்ள சொகுசு ஓட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள், தங்கியிருந்த ஓட்டலுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதீத பாதுகாப்பை சிவசேனா முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மும்பையில் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை இதற்கு முன்பு பார்த்ததில்லை. அஜ்மல் கசாப்புக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு போடப்படவில்லை. நீங்கள் ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? அங்கிருந்து யாராவது தப்பி ஓடிவிட போகிறார்களா? ஏன் இவ்வளவு பயம்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதியான அஜ்மல் கசாப் மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் போது உயிருடன் பிடிபட்டவர் ஆவார்.
- கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
- எங்கள் கட்சியினரே எங்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள்.
மும்பை :
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியில் எதிர்ப்பு அணி உருவாகி உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தி ஓட்டலில் முகாமிட்டு, பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க வேண்டும் என்று சிவசேனாவை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
இந்த சர்ச்சையால் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து சிவசேனா தொண்டர்கள் மத்தியில் சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-
காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் எங்களுக்கு துரோகம் செய்வார்கள் என்று பலர் எங்களிடம் கூறினார்கள், ஆனால் எங்கள் கட்சியினரே எங்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர். மே 20 அன்று, ஏக்நாத் ஷிண்டேவிற்கு முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே வழங்கினார்.
ஆனால் அவர் தற்போது நாடகம் நடத்தி சென்றுவிட்டார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்திக்கு சென்றுள்ளனர், அங்கு வெள்ளம் ஏற்பட்டு பலர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு ஆனந்தமாக இருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்களின் ஒரு நாள் சாப்பாட்டுக்கான செலவு ரூ. 9 லட்சம், இது பெரும் அவமானத்திற்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கேபினட் மந்திரிகளான அனில் பரப், சுபாஷ் தேசாய் ஆகியோர் எம்.எல்.சி.க்கள் ஆவர்.
- சுபாஷ் தேசாயின் எம்.எல்.சி. பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது.
மும்பை :
சிவசேனாவை சேர்ந்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக கடந்த 20-ந்தேதி நள்ளிரவு ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார். பின்னர் அங்கு இருந்து அவர், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தி சென்று அங்குள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் ஏக்நாத் ஷிண்டே முகாமில் 12 முதல் 15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களே இருந்ததாக கூறப்பட்டது. பின்னர் படிப்படியாக சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தனர். இதில் நேற்று மாநில உயர் கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த், ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தார்.
இவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்த 9-வது சிவசேனா கேபினட் மந்திரி ஆவார். தற்போது சிவசேனா சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான கேபினட் மந்திரிகளில், ஆதித்ய தாக்கரே மட்டுமே உத்தவ் தாக்கரேவுடன் உள்ளார். மற்ற கேபினட் மந்திரிகளான அனில் பரப், சுபாஷ் தேசாய் ஆகியோர் எம்.எல்.சி.க்கள் ஆவர்.
இதில் அனில் பரப் அமலாக்கத்துறை பிடியில் உள்ளார். சுபாஷ் தேசாயின் எம்.எல்.சி. பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது.
- பதவிக்காக அரசியலில் துரோகம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
- கடந்த 2½ ஆண்டாக உத்தவ்தாக்கரே கடும் உழைப்பை வழங்கி உள்ளார்.
மும்பை :
மகாராஷ்டிரா மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்யா தாக்கரே கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பேஸ்புக்கில் முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே பேசியதில் தனக்கு கண்ணீர் வந்தது. பதவிக்காக அரசியலில் துரோகம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. பதவி இன்றைக்கு போகும், நாளை வரும். நண்பர்கள் துரோகம் செய்தால் தாங்கி கொள்ளலாம். ஆனால் ஏக்நாத் ஷிண்டேவிற்கு மந்திரி பதவி கொடுத்து குடும்ப உறுப்பினராக நன்றாக பழகி இறுதியில் துரோகம் செய்து விட்டார்.
25 ஆண்டாக எதிரியாக இருந்த எதிர்கட்சியினரான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் தற்போது நண்பர்களாக இணைந்து மாநில அரசை வழிநடத்தி வருகிறோம். கடந்த 2½ ஆண்டாக மாநில முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே கடும் உழைப்பை வழங்கி உள்ளார். கொரோனா காலத்திலும், கட்சியை பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் உதவிகளை செய்ததை யாரும் மறுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்