search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுகட்டமைப்பு"

    • பள்ளி தலைமை ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
    • அரசுப் பள்ளியின் பெருமைகளை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

    ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கமால்தீன் , பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் முத்துலட்சுமி, முன்னாள் ஆசிரியர் நாராயணன், வார்டு உறுப்பினர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பேரூராட்சி மன்றத் தலைவர் ஊரின் அனைத்து பகுதிகளும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம் என்பதையும் எடுத்துக் கூறினார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம் மற்றும் செயல் பாடுகள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்க வேண்டும் என்பதை விளக்கிக் கூறினார். அரசுப் பள்ளியின் பெருமைகளை விளக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • ஜூலை 9-ந்தேதி மறுகட்டமைப்புக்கான கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • பராமரிப்பு நிதியை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதை இக்குழு தீர்மானிக்கும்.

    உடுமலை :

    உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய எஸ்.எம்.சி., குழுக்கள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஏற்படுத்தப்பட்டன.அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஜூலை 9-ந்தேதி மறுகட்டமைப்புக்கான கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு ஒரு வாரம் முன்பே தகவல் தெரிவிக்கப்படும். இது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஏற்கனவே நடத்தப்பட்டன.

    இது குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 86 உயர்நிலை மற்றும் 76 மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், துணைத்தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், 12 பெற்றோர் பிரதிநிதிகள், ஒரு ஆசிரியர், தலைமையாசிரியர், கல்வியாளர் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர் என 20 பேர் கொண்ட குழு உருவாக்கப்படுகிறது.

    பராமரிப்பு நிதியை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதை இக்குழு தீர்மானிக்கும். பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதி, வகுப்பறை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை, சுற்றுச்சுவர் இல்லை, இரவு பாதுகாவலர் இல்லை, பெண் குழந்தைகளுக்கு இன்சினரேட்டர், சானிட்டரி நாப்கின் வசதியின்மை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    ×