என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணிகளுக்கு"

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு நே யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு யோகா பயிற்றுனர் அருள் பயிற்சி அளித்தார்.

     வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு நே யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு யோகா பயிற்றுனர் அருள் பயிற்சி அளித்தார்.

    வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் பங்கேற்று டாக்டர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புறநோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். வாழப்பாடி அரிமா சங்கம் சார்பில், யோகா பயிற்சி கையேடுகள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    • கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்
    • ரூ.50 லட்சத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்

    கரூர்:

    கரூர் கஸ்தூரிபாய் தாய்சேய் நல மையத்தில் கர்ப்பிணிகளுக்கு பொக்கிஷம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கர்ப்பிணிகளுக்கு பொக்கிஷம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

    கரூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக எடை குறைவான குழந்தைகள் பிறப்பு, மகப்பேறு மரணம் நிகழ்வதை குறைக்கும் நோக்கோடு வருங்காலங்களில் 4 மாதங்கள் நிறைவுற்ற கர்ப்பிணிகளுக்கு ஆண்டுக்கு 5,000 கர்ப்பிணிகளுக்கு பொக்கிஷம் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட உள்ளது.

    முதல் முறை கருவுற்ற தாய்மார்கள், சிக்கலான பிரசவம் உள்ளவர்கள், அரசு மருத்து வமனையில் பிரசவத்திற்கு ஒப்புதல் தெரிவித்தவர்கள், முதல் பிரசவம் அரசு மருத்துவமனையில் நடைபெற்று 2வது முறை கருவுற்றவர்கள் என வாரத்திற்கு 100 கர்ப்பிணிகள் வீதம் ஆண்டுக்கு 5,000 கர்ப்பிணிகளுக்கு பொக்கிஷம் சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.

    5,000 கர்ப்பிணிகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.50 லட்சத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதில் பாசிப்பருப்பு, சிவப்பரிசி, கருப்பு உளுந்து, கம்பு லட்டுகள், முருங்கை பொடி, கடலை மிட்டாய், ராகி முறுக்கு, பாதாம் மிக்ஸ், நெய், பேரிச்சை அடங்கி உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினரை கொண்டு ஊட்டச்சத்து பெட்டகம் தயாரிக்கப்படுகிறது என்றார்.

    ×