search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜே.சி.பி. எந்திரம்"

    • பஸ் நிறுத்தம் அடையாளம் தெரியாத நபரால் ஜே.சி.பி எந்திரம் மூலம் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • சந்தேகம் படும்படியாக ஜே.சி.பி எந்திரத்துடன் நின்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் அரசு விளையாட்டு அரங்கம் அருகே பஸ் நிறுத்தம் இருந்தது. கடந்த 7ந் தேதி நள்ளிரவு இந்த பஸ் நிறுத்தம் அடையாளம் தெரியாத நபரால் ஜே.சி.பி எந்திரம் மூலம் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அன்று நள்ளிரவு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் நகர போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி மர்ம நபர்களை கண்டுபிடித்து உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில், காரைக்கால் நகராட்சி பில் கலெக்டர் ஜோசப் என்பவர் நேற்று காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், கடந்த 7ந் தேதி இரவு விழுப்புரம் வானூர் பகுதியைச்சேர்ந்த செந்தில்குமார் (வயது 44) பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம் படும்படியாக ஜே.சி.பி எந்திரத்துடன் நின்றார். அவர்தான் நகராட்சிக்கு சொந்தமான ரூ.2 லட்சம் மதிப்பிலான பஸ் நிறுத்தை இடித்திருக்கவேண்டும். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதன்படி போலீசார் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசாரை கண்டதும் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே அனுமதி இல்லாமல் செம்மண் எடுத்து கடத்த ப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் களியக்கா விளை போலீசார் இன்று அதிகாலை மலையடி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர்.

    போலீசாரை கண்டதும் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், டெம்போவை சோதனை செய்தபோது அதில் செம்மண் இருந்தது கண்டு பிடிக்கபட்டது. அதனை அனுமதி இல்லாமல் கடத்துவதும் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து செம்மண்ணுடன் டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியில் இருந்து செம்மண் அள்ளுவதற்க்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தையும் கைப்பற்றி னர்.

    தப்பி ஓடிய டெம்போ டிரைவர் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தின் உரிமையாளர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகர்கோவில் பீச் ரோட்டில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.
    • இன்னும் 2 நாட்களுக்குள் தீ முழுமையாக அணைக்கப்படும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.

    காற்றின் வேகம் அதிகமாக இருந்ததையடுத்து தீ மளமளவென பரவியது. இதையடுத்து குப்பை கிடங்கு முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் தீயை கட்டுப்ப டுத்த முடியவில்லை. இதையடுத்து கன்னியாகுமரி, திங்கள்நகர் தீயணைப்பு நிலைய த்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 50-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினார்கள்.

    நேற்று இரண்டாவது நாளாகவும் தீயை அணைக்கும் பணி நடந்தது. குப்பை கிடங்கில் எரிந்த தீ கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலங்கள் வந்துகொண்டே இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் குப்பைகளை கிளறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இன்று 3-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் கன்னியாகுமரி, திங்கள்நகர், நாகர்கோவில் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து புைக மண்டலங்கள் வந்து கொண்டே இருப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில், குப்பை கிடங்கில் எரிந்த தீ கட்டுப்படுத்தப்பட்டுள் ளது. இன்று காலையில் மழையும் பெய்துள்ளது. இருப்பினும் குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஜே.சி.பி. மூலம் குப்பைகள் கிளறப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து புகையை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    ஆனால் தொடர்ந்து புகை மண்டலம் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் 2 நாட்களுக்குள் தீ முழுமையாக அணைக்கப் படும் என்றார்.

    ×