என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊரக"
- ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், திருச்சி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
- 4 ஆண்டாக நடத்தி வரும் இயற்கை வேளாண் பண்ணையில், நேற்று பணி அனுபவப் பயிற்சி பெற்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், திருச்சி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இக்குழுவினர், வாழப்பாடி அருகே மத்தூரில் விவசாயிகள் பழனிசாமி, சக்திவேல் மற்றும் குடும்பத்தினர் 4 ஆண்டாக நடத்தி வரும் இயற்கை வேளாண் பண்ணையில், நேற்று பணி அனுபவப் பயிற்சி பெற்றனர்.
இயற்கை முறையில் கரும்பு, பப்பாளி, வாழை, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், வெண்டை, வெங்காயம் போன்ற பயிர் சாகுபடி குறித்து கேட்டறிந்தனர். இயற்கை முறை வேளாண்மை , ஊடுபயிர் மேலாண்மை, பல அடுக்கு முறை விவசாயம், இயற்கை வளர்ச்சியூக்கிகள், பூச்சி விரட்டிகள் குறித்தும் அனுபவ பயிற்சி பெற்றனர்.
- ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் சேலம் மாவட்டத்தில் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
- வருகிற ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில் காலி பதவி இடங்களுக்கு வருகிற ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதில் சேலம் ஒன்றிய 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஊராட்சி பதவிகளில் பூவனூர் 3-வது வார்டுக்கு ஒருவர், நடுப்பட்டி 7-வது வார்டு, கூனாண்டியூர் 7-வது வார்டு, கீரிப்பட்டி 6-வது வார்டு ஆகியவற்றிற்கு தலா 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.புல்லா கவுண்டம்பட்டி 7-வது வார்டு ஒருவர், தேவியாக்குறிச்சி 2-வது வார்டுக்கு ஒருவர், கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டில் ஒருவர், இளவம்பட்டி 5-வது வார்டு ஒருவர், நீர்முள்ளிகுட்டை 6-வது வார்டு ஒருவர் என 12 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
மின்னாம்பள்ளி 3-வது வார்டு பொட்டனேரி, 6-வது வார்டு ஒருவர் கூட இன்னும் மனு தாக்கல் செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.A
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்