search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்"

    • சனிக்கிழமை விஷ்ணுவுக்கு விசேஷ தினமாகக் கருதப்படுகிறது.
    • வெங்கடாஜலபதியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    சனிக்கிழமை விஷ்ணுவுக்கு விசேஷ தினமாகக் கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை இன்னும் சிறப்புடையதாக உள்ளது.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் வெங்கடாஜலபதியை திருப்பதி சென்று முறைப்படி வழிபாடு செய்து அருள் பெற்றவர் நாரத மகரிஷி, தான் பெற்ற பலனை ஒரு ஏழைக் குயவனுக்கு அடைய வழிகாட்டினார்.


    திருமலை அடிவாரத்தில் ஒரு ஏழைக்குயவன் வாழ்ந்து வந்தான். பீமன் என்ற அவன் உடல் ஊனமுற்றவன். அவன் தினமும் மண்பாண்டங்களைச் செய்துவிற்று பிழைப்பு நடத்தி வந்தான். மண்ணினால் மலர்களைச் செய்து அம்மலர்களால் ஸ்ரீவேங்கடேஸ்வரப் பெருமானை அர்ச்சனை செய்து வந்தான்.

    ஒருநாள் அவனது கனவில் நாரத மகரிஷி தோன்றினார். புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து வெங்கடாஜலபதியை வழிபடும் முறையை உபதேசித்தார். மலை மீது ஏற முடியாத பீமய்யா தனது குடிசையிலேயே வழிபாடு நடத்த முடிவு செய்தான்.

    மண்ணால் வெங்கடா ஜலபதியின் உருவத்தை செய்தான். மண்ணாலே மலர்கள் செய்து புரட்டாசி சனிக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபாடு செய்தான். முறைப்படி விரதத்தைக் கடைப்பிடித்தான்.

    அதே சமயத்தில் நாட்டை ஆண்ட அரசர் தொண்டமான் சக்கரவர்த்தி தங்க மலர்களால் சீனிவாசனைப் பூஜை செய்து வந்தான். ஒருநாள் பொன்னாலான மலர்களால் அர்ச்சனை செய்தபோது அவை மண் மலர்களாகி விழுவதைப் பார்த்தான் அதிர்ச்சி அடைந்து பயந்து கண் கலங்கினான்.

    ஒருநாள் நள்ளிரவில் ஏழுமலையான் அரசனின் கனவில் வந்து அரசே! அருகில் வசிக்கும் பீமன் என்ற குயவன் என்னைத் தினமும் பக்தியுடன் மண் மலர்களால் பூஜை செய்கிறான். ஆகையால் நீ பூஜைக்குப் பயன்படுத்தும் பொன்மலர்கள் மண் மலர்களாக மாறி விடுகின்றன என்று கூறி மறைந்தார்.

    மறுநாள் காலை இந்த உண்மையை அறியத் தொண்டமான் புறப்பட்டு சென்றான். ஒரு குடிசையில் மண்ணினால் செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடாஜலபதியின் சிலைக்கு எதிரில் மெய்மறந்த நிலையில் மண் பூக்களால் அர்ச்சனை செய்யும் பீமனை கண்டான்.

    குயவனுக்கு அரசன் உதவி செய்தான். சில காலம் கழிந்த பின்னர் பீமன், புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்ததன் காரணமாக மோட்ச உலகை அடைந்தான்.

    தொண்டமான் இவ்வரலாற்றை அர்ச்சகர்களுக்குச் சொல்லி சீனிவாசனுக்கு நைவேத்தியம் செய்யும் பிரசாதங்களை மண் பாண்டங்களிலேயே தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அந்த பழக்கம் இன்று வரை கோவிலில் நடைபெற்று வருகிறது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5½ ஏக்கர் பரப்பில் ரூ. 22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து 4-வது ஆண்டு வருஷா பிஷேக விழா இன்று நடந்தது. இதையொட்டி கலசா பிஷேக பூஜை, யாக சாலை, அபிஷேக ஆரா தனைகள் போன்றவை நடந்தன.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை அர்ச்சகர் வேணு கோபால் தீட்சிதர் தலைமையில் அர்ச்சகர்கள் முரளி கிருஷ்ணா, கிரண் குமார், ரிக்வித், சசி மற்றும் கன்னியாகுமரி ஸ்ரீவெங்க டேஸ்வரா சுவாமி கோவில் அர்ச்சகர்கள் நடத்தி னார்கள்.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருஷாபிஷேக நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
    • ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்து 133 வசூல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறுவதற்காக வேண்டி கோவிலில் உள்ள உண்டியலில் பணம், காசு தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

    இதற்காக வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும்பணி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா, சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் விஜயகுமார் விஜிலென்ஸ் அதிகாரி நாயுடு மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. இதில் வருமானமாக ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்து 133 வசூல் ஆகி இருந்தது.

    ×