search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி கடை"

    • இதுதொடர்பாக 3 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
    • அதே நேரம் வைரலான இந்த புகைப்படத்தால் பயனர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

    பெங்களூரில் உள்ள காய்கறி கடை ஒன்றில் கோபம் அடைந்த பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிகாரிகா என்ற பயனர் எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக 3 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், காய்கறி கடையில் கோபம் அடைந்த பெண்ணின் புகைப்படம் உள்ளது. அதன் அருகில் ஒரு மரத்திலும் அந்த கோபக்கார பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    இந்த புகைப்படங்கள் எதற்காக அங்கு இடம்பெற்றுள்ளது என்ற விபரங்கள் வெளியாகவில்லை. அதே நேரம் வைரலான இந்த புகைப்படத்தால் பயனர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படத்தின் பின்னால் ஏதேனும் கதை உள்ளதா? என ஒரு பயனரும், இந்த படம் போட்டோஷாப் செய்யப்பட்டதா? என மற்றொரு பயனரும் கேள்வி எழுப்பி உள்ளனர். சில பயனர்கள் கேலியான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

    • காய்கறி கடையின் உள்புறம் மது பாட்டில்கள் வைத்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன
    • சுமார் 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    கன்னியாகுமரி :

    திருவட்டாறு அருகே உள்ள கைலாச விளை சாமியார் மடம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 60).

    இவர் காட்டாத்துறை பேரூராட்சிக்குட்பட்ட சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் முன்பக்கம் காய்கறிகள் குவித்து வைக்கப்பட்டு இருக்கும்.

    இந்த நிலையில் கடையின் உள்புறம் மது பாட்டில்கள் வைத்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இங்கு காலையிலேயே பலரும் வந்து மது பாட்டில்கள் வாங்கு வதாக கூறப்படு கிறது.

    மேலும் மது அருந்துபவர்கள், அந்தப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் வந்து அங்கு நிற்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் அவதூறு பேசுவதாகவும் இதனால் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அதன்பேரில் திருவட்டாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். காய்கறி சந்தைக்குச் சென்று, ஜான்சன் கடையில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு மது பாட்டில்கள் விற்கப்படுவது தெரிய வந்தது. கடைக்குள் இருந்து சுமார் 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், காய்கறி கடைக்குள் வைத்து மது விற்றதாக ஜான்சனை கைது செய்தனர்.

    • ஏற்கனவே 9 மாதங்களுக்கு முன்பும் இதுபோல பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜூ. அரசியல் பிரமுகர்.

    குழித்துறை பகுதியில் இவர் காய்கறி மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு விற்பனை முடிந்த பின்பு 11 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடைக்கு சென்ற போது அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

    மேலும் கடையில் இருந்த மேஜை உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.56 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த கேமிராக்களும் மாயமாகி இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த ராஜூ, அருகில் உள்ள கடைகளில் விசாரித்த போது, காய்கறி கடையின் அருகே உள்ள ஒரு ஓட்டலிலும் கொள்ளை நடந்து இருப்பது தெரியவந்தது. அங்கும் ரூ.6 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டிருந்தது.

    ஓட்டல் மற்றும் காய்கறி கடையில் மொத்தம் ரூ.62 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. இதுபற்றி ராஜ், மற்றும் ஓட்டல் உரிமையாளர் முகமது ரிபாய் ஆகியோர் களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் குழித்துறை தபால் நிலையம் அருகே இருந்து நடந்து வந்து இரண்டு கடைகளையும் நோட்டமிடுவது பதிவாகி இருந்தது.

    இதனை கைப்பற்றிய போலீசார் அந்த காட்சிகளை கொண்டு கொள்ளை அடித்த நபரை தேடிவருகிறார்கள்.

    கொள்ளை நடந்த ஓட்டலில் ஏற்கனவே 9 மாதங்களுக்கு முன்பும் இதுபோல பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக கொள்ளை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×