search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்பாளையம்"

    • கவிதா பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.
    • கவிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

     கோவை

    கோவை கோவில்பாளை யம் அருேக உள்ள செரயாம்பாளை யத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி கவிதா (வயது 42).

    சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். மொபட் வெள்ளானைப்பட்டி - செரயம்பாளையம் ரோட்டில் பாரதி அவென்யூ அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது கவிதாவை மற்றொரு மொபட்டில் பின் தொடர்ந்து சென்ற வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இதில் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்த கவிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு காளப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டில் பின் தொடர்ந்து பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

    • என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை :

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கோடனூரை சேர்ந்தவர் பிரம்மையா. இவரது மகள் சந்திரகலா (வயது 19). இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 5-ந் தேதி திடீரென சந்திர கலாவுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் விடுதியில் இருந்த அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சந்திரகலா விடுதியில் இருந்து வெளியே வந்து 2-வது மாடியில் உள்ள வராண்டாவில் நடை பயிற்சி செய்தார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

    இதில் சந்திரகலாவுக்கு இடுப்பு மற்றும் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் உடனடியாக சந்திரகலாவை மீட்டு பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்தரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, நடுரோட்டில் இருந்த மின் கம்பத்தை, ஓரமாக மாற்றி அமைக்காமல் விட்டு விட்டனர்.
    • இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் செல்லும் போது நடுரோட்டில் மின்கம்பம் என்பது சரிவர தெரிவதில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலுார் கோவில்பாளையத்தில் சமீபத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, நடுரோட்டில் இருந்த மின் கம்பத்தை, ஓரமாக மாற்றி அமைக்காமல் விட்டு விட்டனர்.

    இதனால் மின் கம்பம் நடுரோட்டில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் செல்லும் போது நடுரோட்டில் மின்கம்பம் என்பது சரிவர தெரிவதில்லை. இதனால் சிலர் விபத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே, மின் கம்பத்தை உடனடியாக ரோட்டோரத்தில் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×