என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெல் மூட்டை"
- தமிழ்நாடு முழுவதுமே நெல் மூட்டைகளை பாதுகாக்க இயலாத ஓர் அவல நிலை நிலவுகிறது.
- அரசின் தாமதமான நடவடிக்கை காரணமாக தங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளிடம் இருந்து நெல் மற்றும் இதர தானியங்களை கொள்முதல் செய்து அவற்றை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கும் வகையில், கிடங்குகளை கட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. ஆனால், இதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. கடந்த மூன்று ஆண்டு காலமாக, நெல் மற்றும் இதர தானியங்கள் மழையில் நனைவதும், இதன் விளைவாக விவசாயிகளுக்கு குறைந்த விலை கிடைப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
அண்மையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் செஞ்சியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாகவும், நெல் மூட்டைகள் மழையில் நனைவதன் காரணமாக குறைந்த விலைதான் கிடைக்கிறது என்றும், தார்ப்பாய் கூட வழங்கப்பட வில்லை என்றும் மேல்மருவத்தூர், திண்டிவனம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சுவடு மறைவதற்குள், மறைமலைநகரை அடுத்த கருநீலம் ஊராட்சி யில் செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த நெல்லினை உதிரியாகவும், 5,000-க்கும் மேற்பட்ட மூட்டைகளிலும் கொண்டு வந்ததாகவும், இரு தினங்களுக்கு முன்பு பெய்த திடீர் மழை காரணமாக அனைத்து நெல் மூட்டைகளும் சேதமடைந்ததாகவும், உடனுக்குடன் எடை போட்டு அரவை நிலையத்திற்கு அனுப்பியிருந்தால் நெல் மூட்டைகள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என்றும், அரசின் தாமதமான நடவடிக்கை காரணமாக தங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதுமே நெல் மூட்டைகளை பாதுகாக்க இயலாத ஓர் அவல நிலை நிலவுகிறது. நெல் மூட்டைகளை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென்பதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு மூன்று ஆண்டுகள் கடந்தும் பூர்த்தி செய்யப்படவில்லை. மழையில் நெல் மூட்டைகள் நனைவது என்பது தொடர் கதையாக விளங்குகிறது.
எனவே தானியங்களை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கத் தேவையான கிடங்குகளை கட்டிட முதலமைச்சர் உத்தர விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கடந்த வாரத்தில் அதிக அளவு நெல் மூட்டைகள் வந்தன.
- டோக்கன் முறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
செஞ்சி:
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 30 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு நெல்மூட்டைகளை விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாமென கமிட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது.
செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கடந்த வாரத்தில் அதிக அளவு நெல் மூட்டைகள் வந்தன. தினமும் 15 ஆயிரம் மூட்டை அளவுக்கு நெல் மூட்டைகள் வந்தன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் விடுமுறை என்பதால் இன்றைய விற்பனைக்காக நேற்று மதியத்தில் இருந்து நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வரத்தொடங்கினர். நேற்று இரவு வரை சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இரவு 8.00 மணிக்கு மேல் வந்த நெல் மூட்டைகளை இறக்கி வைக்க இடம் இல்லாததால், விற்பனை கூடத்துக்கு வெளியே டிராக்டர் மற்றும் வாகனங்களில் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். ஏற்கனவே ஆள்பற்றாக்குறையால் திணறும் கமிட்டி நிர்வாகம் என்ன செய்யும் என்று தெரியவில்லை. தற்காலிகமாக கூடுதலான ஆட்களை நியமித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். டோக்கன் முறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள முப்பதாயிரம் மூட்டைகள் விற்பனையாவதற்கு 2 நாட்களுக்கு மேலாகும். இதனால் விவசாயிகள் 2 நாட்களுக்கு நெல்மூட்டைகளை கொண்டு வரவேண்டாம் எனவும், நாளை மறுநாள் புதன்கிழமை அன்று நெல்மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தால் போதும் எனவும் கமிட்டி கண்காணிப்பாளர் வினோத் குமார் விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
- தஞ்சை மாவட்டத்தில்குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும்.
பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.
இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.
இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- சின்னசேலம் ெரயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் உள்ளது.
- கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் 2000 மெட்ரிக் டென் நெல் மூட்டைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து இறங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ெரயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் உள்ளது. எனவே இந்த இறங்கு தளம் மூலம் சரக்கு ெரயிலில் இருந்து வரும் உரங்கள், யூரியா, அரிசி மூட்டை ஆகியவற்றை இறக்கி சேமிப்பு கிடங்களில் வைப்பது வழக்கம். அதேபோல் கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் 2000 மெட்ரிக் டென் நெல் மூட்டைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து இறங்கியது. டெல்டா மாவட்டங்களான நாகை, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் நெல் அறுவடை முன் கூட்டியே நடைபெற்று வருகிறது.
இதனால் அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட ரேசன் கடைகளுக்கு அரிசி வழங்குவதற்காக 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வாங்கி அதை சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் ஏற்றி வந்து லாரிகள் மூலம் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதன் மூலம் அரிசி மூட்டைகளை சேமிப்பு கிடங்கில் வைத்து சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு அனுப்பி மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க உள்ளனர்.
- 13 ஆயிரம் நெல் மூட்டைகள் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டு, மழையில் நனைந்து வீணாகி உள்ளது.
- பல்வேறு காரணங்களை கூறி உண்மையான விவசாயிகள் பலருக்கு நகை கடன் தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல்லடம் :
மதுபானக்கடைகளை காப்பதில் இருக்கும் அக்கறை நெல் மூட்டைகளை காப்பதில் இல்லையே என உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து செய்தியாளரிடம் கூறியதாவது:- தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் டெல்டா மாவட்டங்களில் விளைவிக்கப்படும் நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாகும் அவலம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. மதுராந்தகம், சிலாவட்டம் பகுதியில், 13 ஆயிரம் நெல் மூட்டைகள் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டு, மழையில் நனைந்து வீணாகி உள்ளது. விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெற்பயிர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை.மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசு, விவசாயிகள் விளைவிக்கும் நெற்பயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுக்கிறது. சமீபத்தில், பல்வேறு காரணங்களை கூறி உண்மையான விவசாயிகள் பலருக்கு நகை கடன் தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கான அரசு ஆணையை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சியில் வரும் 27-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியினர் கலந்துகொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்