search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்கலை டி.எஸ்.பி."

    • தக்கலை டி.எஸ்.பி. விசாரணை
    • ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று உடல் பிரேத பரிசோதனை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே பொன்மனை குற்றியான் விளையைச் சேர்ந்தவர் சசிகுமார். ரப்பர் பால்வெட்டித் தொழிலா ளியான இவரது மகன் அஜித் (வயது 23).

    டெம்போ ஓட்டுனரான அஜித் குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே ஒருவருடன் தகராறில் ஈடுபட்ட நிலை யில், குலசேகரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் 60 நாட்கள் இருந்து விட்டு கடந்த 17 -ந் தேதி வீட்டிற்கு வந்துள்ளார்.

    கடந்த 23 -ந் தேதி காலையில் இவர் வீட்டில் தனது தாயார் ஷீலாவிடம், போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமினில் கையொப்பம் இட வேண்டுமென்று கூறிவிட்டு கிளம்பியுள்ளார். இந்நிலையில் நேற்று ஆசாரிபள்ளம் மருத்துக் கல்லூரி ஆஸ்பத்திரியில் விஷம் குடித்த நிலையில், அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழ ந்தார்.

    இது குறித்து அஜித்குமாரின் தந்தை சசிகுமார் மற்றும் தாய் ஷீலா ஆகியோர் கூறுகையில், எங்கள் மகன் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமினில் கையொப்பம் இட வேண்டுமென்றும், தனது செல்போனை வாங்கி வைத்திருக்கும் போலீசாரிடமிருந்து அதனை திரும்ப வாங்க வேண்டுமென்றும் கூறிவிட்டு கடந்த 23- ந் தேதி காலையில் வீட்டிலிருந்து கிளம்பினான்.

    இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் அவனை போலீசார் தாக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். போலீசார் தாக்கியதால் தான் அவன் இறந்துள்ளான். இந்த சம்பவங்கள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டிற்கு புகார் கொடுத்துள்ளோம் என்றனர்.

    சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் தரப்பில் கூறுகையில் 23 -ந் தேதி பகல் 2 மணி அளவில் அஜித், போலீஸ் நிலைய வாசலில் வந்து நின்று போலீசாரை அவதூறு பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வாயிலிருந்து விஷம் குடித்ததைப் போன்று நுரை வந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து ஒரு வாடகை காரை வரவழைத்து அவரை குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழிந்துள் ளார் என்றனர்.

    இச்சம்பவம் குறித்து தக்கலை டி.எஸ்.பி கணேசன் குலசேகரம் காவல் நிலையத்திற்கு நேற்று மாலையில் வந்து விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் அஜித் இறந்த சம்பவம் பொன்மனை மற்றும் குலசேகரம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இவரது உடல் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. டாக்டர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிசார் தெரிவித்தனர்.

    ×