என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2 வீடுகளில் புகுந்து"
- கோபிசெட்டிபாளையம் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து மோட்டார் சைக்கிள், செல்போன் திருடிய வாலிபரை 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த பொதுமக்கள்.
- இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாரிபர் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
கோபி:
கோபிசெட்டி பாளையம் உப்பு கிடங்கு வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் மனைவி மற்றும் மகன் சரவணன் (35) மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த ஒரு வாலிபர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோடடார் சைக்கிளை திருடிக்கொண்டு சென்றார். இதையடுத்து அந்த வாலிபர் பஸ் நிலைய பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு, மீண்டும் நடந்து சென்றார். தொடர்ந்து அவர் அங்கு இருந்த மொபட்டை திருடிக்கொண்டு வாய்க்கால் ரோட்டிற்கு சென்றார்.
மேலும் அந்த வாலிபர் வாய்க்கால் ரோட்டை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் இப்ராகிம் (40) என்பவரது வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த 3 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.
சத்தம் கேட்டு இப்ராகிம் எழுந்து பார்த்தார். அப்போது அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை விரட்டினார்.
தொடர்ந்து அந்த வாலிபரை பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றனர். அந்த வாலிபர் கரட்டூர் அருகே உள்ள எஸ்.பி.நகரில் கரும்பு காட்டிற்குள் புகுந்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் விடிய, விடிய கரும்பு காட்டை சுற்றி வளைத்து தேடினர். இதையடுத்து இன்று காலை அந்த வாலிபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவரை கோபி செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருச்சி மாவட்டம் சத்திரம் சின்னகவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜாமுகமது (27) என தெரிய வந்தது. போலீசாரிடம் சிக்கிய ராஜா முகமது மீது செல்போன், நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு என 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்