என் மலர்
நீங்கள் தேடியது "கடப்பாரையுடன்"
- 4 மளிகை கடைகளில் அடுத்தடுத்து திருட்டு நடந்ததால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 4 ஆயிரம் மதிப்புடைய சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றனர்.
வடவள்ளி:
கோைவ தொண்டாமுத்தூரில் கோவை வடவள்ளி -சிறுவாணி சாலையில் ஏராளமான மளிகை கடைகள், குடியிருப்புகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில 2 நாட்களாக இந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சிறுவாணி சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 4 ஆயிரம் மதிப்புடைய சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றனர்.
மேலும் அதே பகுதியில் உள்ள சுரேஷ், செந்தில்குமார் ஆகியோரின் மளிகை கடைகளில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்களையும் அள்ளி சென்றுள்ளனர். நேற்று காலை கடைக்கு வந்த உரிமையாளர்கள் திருட்டு போன சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே இடையர்பாளையம் ரோட்டில் உதயகுமார் என்பவரின் கடையை உடைத்து ரூ.7 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை பார்வையிட்டார்.
அப்போது, நள்ளிரவு நேரத்தில் 3 நபர்கள் கையில் கத்தி, கடப்பாரையுடன் சுற்றி திரிகின்றனர். பின்னர் ஆட்கள் யாராவது வருகிறார்களா என நோட்டமிடும் அவர்கள், ஆட்கள் வராததை உறுதி செய்து கொண்டு, கடையின் அருகே சென்று கடை பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த காட்சிகளை தனது செல்போனில் ஏற்றிய அவர், வியாபாரிகள் குழுவில் பகிர்ந்தார். தற்போது இந்த காட்சிகள் வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த காட்சிகளை பார்த்த வியாபாரிகள், தொடர்ந்து நடந்து வரும் திருட்டு சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கவும் வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ெதாண்டாமுத்தூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மளிகை கடையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.