என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பேருந்து நிறுத்தம்"
- விழுப்புரத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்ற புகார் எழுந்தது
- இந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசு பணிநீக்கம்
ஏப்ரல் 22 அன்று விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்து, அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் நிறுத்தாமல் சென்றதாக ஊடகங்களில் புகார் எழுந்தது.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து ஓட்டுனர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசுவை பணிநீக்கம் செய்துள்ளனர்.
- ரூ.9.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
- பொங்கலூர் ஒன்றிய குழுதலைவர் வக்கீல்.எஸ். குமார் முன்னிலை வகித்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி, சக்தி நகர் மற்றும் ஐயப்பா நகர் பகுதியில் புதிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவிற்கு பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.பொங்கலூர் ஒன்றிய குழுதலைவர் வக்கீல்.எஸ். குமார் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி நிதியின் மூலம் ரூ.9.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே பணிகள் நிறைவு பெற்ற பொங்கலூர் பஸ் நிறுத்தம் அருகே பொது கழிப்பிடம், அம்மாபாளையம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, நாராயணநாயக்கன் புதூர் பகுதியில் மேல்நிலை தொட்டி ஆகியவையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
- டி.கே.டி. பேருந்து நிறுத்தம் டி.கே.டி. நால்ரோட்டிலிருந்து சிறிது தூரம் மாற்றி அமைக்க வேண்டும்.
- பேருந்துகள் நால்ரோட்டில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
வீரபாண்டி :
பனியன் தொழில் சார்ந்து எண்ணற்ற வாகனங்கள் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினசரி திருப்பூருக்கு வந்து செல்கின்றன.இதனால் திருப்பூர் - பல்லடம் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து பரபரப்பாக இருக்கிறது. அதிலும் டி.கே.டி. மில் நால்ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலை டி.கே.டி.மில் பேருந்து நிறுத்தத்தில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தத்தளிக்கின்றன.பல்லடத்திலிருந்து திருப்பூர் செல்லும் பேருந்து நிற்பதற்கான பேருந்து நிறுத்தம் மாற்றி அமைக்கப்பட்டது. அதே போல் திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் போது டி.கே.டி. பேருந்து நிறுத்தம் டி.கே.டி. நால்ரோட்டிலிருந்து சிறிது தூரம் மாற்றி அமைக்க வேண்டும்.
பேருந்துகள் நால்ரோட்டில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.எனவே பேருந்து நிறுத்தத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்