என் மலர்
நீங்கள் தேடியது "லாக்கப் மரணம்"
- தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- சிபிசிஐடிக்கு இந்த வழக்கை உடனடியாக மாற்றி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல்நிலைத்தில் கையெழுத்திட்டு போடச் சென்ற அஜித் என்ற இளைஞரை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல்நிலையத்தில் கையெழுத்துப் போடச் சென்ற 22 வயது இளைஞர் அஜித் என்பவர் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு மரணித்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இறந்தவர் குடும்பத்திற்கு தமிழக பாஜக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.
இறந்த இளைஞனின் தாயின் வேதனையைப் போக்க இழப்பீடு மட்டும் போதாது. திமுக ஆட்சி அமைத்த நாள் முதல் தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது. கட்டுப்பாடின்றி இருக்கிறதா தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்ற சந்தேகத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் எழுப்புகிறது. சிபிசிஐடிக்கு இந்த வழக்கை உடனடியாக மாற்றி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.