என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பூரி ஜெகநாதர் கோவில்"
- சுவாமிகள் இன்று மதியம் தங்க அங்கிகளை களைந்து மீண்டும் கருவறைக்குள் செல்ல உள்ளனர்.
- சுவாமிகள் 3 பேருக்கும் தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டது.
ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள ஜெகநாதர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்டத்தை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் படையெடுப்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கு புதிய தேர்கள் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வர, தேரோட்டம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும். இந்த ஆண்டு ஜெகநாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பலபத்திரருக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ரா தேவிக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய 3 பிரமாண்டமான தேர்கள் உருவாக்கப்பட்டன.
இந்த புதிய தேர்களில் 10 நாள் நடைபெறும் தேரோட்ட திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த தேரோட்டத்தில் ஒவ்வொரு நாளும் தேர்கள் குறிப்பிட்ட தூரம் இழுத்து செல்லப்படும். அங்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.
ஜெகநாதரின் பிறப்பிடமாக கருதப்படும் ஸ்ரீ குண்டிச்சா கோவிலில் சுவாமி ஓய்வெடுப்பார். பின்னர் அங்கிருந்து தெய்வங்கள் திரும்பிய ஒரு நாளுக்கு பிறகு 'சுனா பெசா' எனப்படும் தங்க அங்கி அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இந்த பகுதியை ஆட்சி செய்த மன்னர், தென்னிந்திய மன்னர்களை தோற்கடித்து கொண்டுவந்த ஏராளமான நகைகளைக் கொண்டு, சுவாமிகளுக்கு தங்க உடைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னர் கபிலேந்திர டெப் காலத்தில் 1460-ம் ஆண்டு முதல் சுனா பெசா விழா கொண்டாடப்பட ஆரம்பித்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
தேர் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று சுவாமிகள் 3 பேருக்கும் தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டது. ஜெகநாதர், பலபத்திரர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் தங்க அங்கிகளில் தேரில் எழுந்தருளினர். இந்த தங்க அங்கிகளின் எடை 208 கிலோவாகும். மாலை 5.20 மணிக்கு தொடங்கிய தங்க அங்கி அலங்காரம் 6.10 வரை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
சுவாமிகளின் தங்க அங்கி அலங்காரத்தை காண 15 லட்சம் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு கூடி நின்று சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.
சுவாமிகள் இன்று மதியம் தங்க அங்கிகளை களைந்து மீண்டும் கருவறைக்குள் செல்ல உள்ளனர். இது வீடு திரும்புதல் (நிலாத்திரி பிஜே) எனப்படுகிறது.
தேரோட்ட திருவிழா சமயம் மட்டுமல்லாது தசரா, கார்த்திக் பூர்ணிமா மற்றும் தோலா பூர்ணிமா உள்ளிட்ட மேலும் 4 விழா காலத்திலும் பூரி ஜெகநாதர் ஆலய தெய்வங்களுக்கு தங்க அலங்காரம் செய்யப்படுகின்றன.
- கோவிலில் உள்ள அறையில் அவர்களை பணியாளர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 18 வயதுக்கு பிறகுதான் கோவிலில் அவர்கள் சேவை செய்ய முடியும்.
பூரி ஜெகநாதர் கோவிலில் 1 வயதுக்குள் உள்ள 3 குழந்தைகள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அங்குள்ள பாரம்பரியத்தின்படி 10 மாத குழந்தையான பலதேப் தாஸ்மொகபத்ரா, 1 வயது குழந்தையான எகான்சு தாஸ்மொகபத்ரா மற்றும் அதே வயதுடைய மற்றொரு குழந்தை ஆகிய 3 குழந்தைகளும் பூரி ஜெகநாதர் கோவிலின் அதிகாரப்பூர்வ அர்ச்சகர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ரத யாத்திரையின்போது முக்கிய சடங்குகளை செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு ஆண்டு ஊதியம் ரூ.1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படும். கோவிலில் உள்ள அறையில் அவர்களை பணியாளர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக பூரி ஜெகநாதர் கோவிலின் நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-
தைதாபதி சேவகரின் குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ரத யாத்திரைக்கு 15 நாட்களுக்கு முன்பு எந்த நாளிலும் அவர்கள் இறைவனின் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பது பாரம்பரியமாக நடைமுறையில் உள்ளது. 21 நாட்கள் நிரம்பிய குழந்தைகள் பணியாளர்களாக சேர தகுதி உடையவர்கள் ஆவர்.
ரத யாத்திரைக்கு 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தைகள் பணியில் நியமிக்கப்பட்டாலும், 18 வயதுக்கு பிறகுதான் கோவிலில் அவர்கள் சேவை செய்ய முடியும். அதுவரை அவர்கள் ரத யாத்திரை சேவையில் மட்டுமே ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருடாந்திர தேரோட்டம், இம்மாதம் 20-ந் தேதி நடக்கிறது.
- ஜூலை 1-ந் தேதிவரை இத்தடை அமலில் இருக்கும்.
புவனேஸ்வர் :
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் வருடாந்திர தேரோட்டம், இம்மாதம் 20-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, ஜெகநாதர் கோவில் அருகே டிரோன்களை பறக்க விடுவதற்கு பூரி போலீசார் தடை விதித்துள்ளனர். ஜூலை 1-ந் தேதிவரை இத்தடை அமலில் இருக்கும்.
கோவில், தேர்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இதுபோல், தடையை மீறி டிரோன் பறக்க விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். டிரோன்கள் மூலம் ஏற்படும் பொருட்சேதம் மற்றும் காயத்துக்கு அதை இயக்கியவர்களே பொறுப்பு என்றும் கூறினார்.
தேரோட்டத்தின்போது, போக்குவரத்தையும், மக்கள் கூட்டத்தையும் கண்காணிக்க பூரி மாவட்ட போலீசார் மட்டும் டிரோன்களை பயன்படுத்துவார்கள் என்று போலீசார் தொிவித்தனர்.
- கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது.
- சிலர் கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குகின்றனர்.
பூரி :
கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. மேலும் சிலர் கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தது. இதனால் தமிழகத்தில் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் பிரசித்திபெற்ற ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலிலும் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம்( ஜனவரி) 1-ந் தேதி முதல் செல்போனுக்கு தடை விதிக்கப்படுவதாக ஜெகநாதர் கோவிலின் தலைமை நிர்வாகி வீர் விக்ரம் யாதவ் தெரிவித்துள்ளார்.
- பக்தர்கள் ஜகந்தாதரின் தேர் இழுப்பதை தங்களின் பாக்கியமாக கருதுகின்றனர்.
- ரத யாத்திரையின் சிறப்பும் மகத்துவமும் உண்மையிலேயே இணையற்றது.
ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்காக ஜகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகிய மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு நேற்று ஸ்ரீமந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தப்பட்டுள்ளன. உரிய சடங்குகளுக்குப் பிறகு யாத்திரை தொடங்குகிறது. விழாவையொட்டி, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஒடிசா காவல்துறை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஒடிசாவின் ரத யாத்திரை, பகவான் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் பகவான் ஜகந்நாதரின் வருடாந்திர பயணத்தை சித்தரிக்கிறது. இறைவனின் கருணை மற்றும் தெய்வீகத்தனமையைக் கொண்டாடும் வகையில் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுசேர்ந்ததைக் காட்டுகிறது.
ரத யாத்திரையில் சேரும் பக்தர்கள் ஜகந்தாதரின் தேர் இழுப்பதை தங்களின் பாக்கியமாக கருதுகின்றனர். ரத யாத்திரையின் சிறப்பும் மகத்துவமும் உண்மையிலேயே இணையற்றது.
- வருகிற ஜூலை 1-ந்தேதி பூரி ரத யாத்திரை நடைபெறுகிறது.
- ரத யாத்திரைக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
புவனேஸ்வர்
ஒடிசாவின் புவனேஸ்வரில் ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை புகழ்பெற்றதாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள நடக்கும் இந்த ரத யாத்திரையில், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் மீண்டும் பக்தர்கள் பங்கேற்புடன் வருகிற ஜூலை 1-ந்தேதி பூரி ரத யாத்திரை நடைபெறுகிறது. இதற்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து 10 லட்சம் பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ரத யாத்திரைக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
மேலும், ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் சுகாதார முகாம்கள் நடத்தப்படும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பூரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என ஒடிசா சுகாதார சேவைகள் இயக்குனர் பிஜாய் மொகபத்ரா நேற்று தெரிவித்தார்.
பூரியில் கொரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்