என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயதான தம்பதி"

    • தனது ஆசையை தனது கணவரிடம் கூற இந்த வயதில் தாலி கட்டி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறினார்.
    • விடாப்பிடியாக மூதாட்டி தனது ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என அடம்பிடித்தார்.

    தெலுங்கானா மாநிலம் மாவட்டம் மகபூபாபாத் தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சமீதா நாயக் (வயது 80). இவரது மனைவி கோகுலத் லாலி (70).

    தம்பதியினர் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    அப்போது காதல் வயப்பட்ட இருவரும் பெற்றோரின் கடும் எதிர்ப்பை தாண்டி திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களது பெற்றோர் அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இருவரும் அந்த காலத்தில் கந்தர்வ முறைப்படி மாலை மாற்றி மட்டும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

    காலப்போக்கில் கடுமையாக உழைத்து மனைவியை காப்பாற்றி வந்த நாயக் அதன் பிறகு மகன்கள், மகள்களுக்கு, திருமணம் செய்து வைத்தார்.

    இப்படியே காலம் உருண்டோட குடும்பம் பேரன், பேத்திகள் என பெரிதாகி விட்டது. 60 ஆண்டுகள் ஆனாலும் தனது கணவர் தனக்கு தாலி கட்டவில்லையே என்ற ஏக்கம் கோகுலத் லாலிக்கு ஏற்பட்டது.

    தனது ஆசையை தனது கணவரிடம் கூற இந்த வயதில் தாலி கட்டி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறினார்.

    ஆனாலும் விடாப்பிடியாக மூதாட்டி தனது ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என அடம்பிடித்தார்.

    இதையடுத்து தனது பிள்ளைகளிடமும் பேரன், பேத்திகளிடமும் கூற அவர்களும் மகிழ்ச்சியுடன் இதனை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து உறவினர்கள் புடை சூழ திருமணம் நடந்தது. 60 ஆண்டுகளாக தன்னுடன் மனைவியாக வாழ்ந்த மூதாட்டிக்கு உற்றார் உறவினர் மட்டுமல்லாது தான் பெற்ற பிள்ளைகள், பேரன், பேத்திகள் முன்னிலையில் கை நடுங்கியபடி முதியவர் தாலி கட்டினார்.

    அப்போது மணப்பெண் அலங்காரத்தில் இருந்த மூதாட்டி வெட்கத்தில் தலை குனிந்தார்.

    தொடர்ந்து அக்கினியை வலம் வந்து தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினர்.

    அவர்களிடம் மகன், மகள்கள், பேரன், பேத்திகள் ஆசிபெற்றனர்.

    • இவர்களின் துணை இறந்த பிறகு பென்சில்வேனியாவுக்கு குடிபெயர்ந்தனர்.
    • பெர்னி என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மார்ஜோரி ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.

    சமீபத்தில் அமெரிக்காவில் 100 வயது ஆணும், 102 வயது பெண்ணும் திருமணம் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தனர். பெர்னி லிட்மேன்- மார்ஜோரி பிடர்மேன் என்ற இந்த தம்பதியினர் தற்போது 202 வயது மற்றும் 271 நாட்களுடன் பிலடெல்பியாவில் உள்ள அவர்களது வீட்டில் கடந்த 3-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த ஜோடி 9 ஆண்டுகளாக உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் தங்கள் இளமை பருவத்தில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்துள்ளனர். பின்னர் இருவரும் குடும்பத்தோடு தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் துணை இறந்த பிறகு பென்சில்வேனியாவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு முதியோர் இல்லத்தில் எதேச்சையாக சந்தித்த பிறகு இருவரும் நெருக்கமாகினர்.

    பெர்னி என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மார்ஜோரி ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இருவரும் மீண்டும் சந்தித்த போது காதல் மலர்ந்துள்ளது. இதையறிந்த குடும்பத்தினர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து பெர்னியின் பேத்தி சாரா சிசர்மென் கூறுகையில், இருவரின் நகைச்சுவை உணர்வும், புத்திசாலித்தனமும் தான் அவர்களின் பிணைப்பின் அடித்தளமாக இருந்தது என்றார்.

    They moved to Pennsylvania after their spouse died.


    • இருவரும் காதலித்து வந்ததை அறிந்த முதியோர் இல்லத்தினர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • மணமக்கள் அசாம் பாரம்பரிய முறைப்படி உடைகள் அணிந்து வந்தனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.

    கோலாகட் மாவட்டத்தில் உள்ள போககாட் பகுதியை சேர்ந்தவர் பத்மேஸ்வர் கோலா (வயது71). வீட்டு வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவரது 2 சகோதரர்களும் காலமான நிலையில் பெல்டோலா பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

    இதே போல சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூரை சேர்ந்தவர் ஜெயபிரபா (வயது65), திருமணமாகாத இவர் கவுகாத்தியில் மத்காரியா பகுதியில் பெண்களுக்கான முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

    இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சந்தித்துள்ளனர். பத்மேஸ்வர் கோலா குரல் வளமிக்கவர். இவர் பிகு மற்றும் இந்தி பாடல்களை பாடுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரது குரலில் மயங்கிய ஜெயபிரபா, பத்மேஸ்வருடன் பேசிய போது மனதை பறிகொடுத்தார்.

    இருவரும் காதலித்து வந்ததை அறிந்த முதியோர் இல்லத்தினர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்தை மோனாலிசா சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி உள்ளது.

    இதையொட்டி மணமக்கள் அசாம் பாரம்பரிய முறைப்படி உடைகள் அணிந்து வந்தனர். அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

    இதுகுறித்து அந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான உத்பால் ஹர்சவர்தன் கூறுகையில், பொது நிதி உதவியுடன் இந்த திருமணம் நடைபெற்றது. சுமார் 4 ஆயிரம் விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் விருந்து பரிமாறினோம் என்றார்.

    • வயதான தம்பதி இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வயதான தம்பதி இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, உணவு, காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.

    இதனால் அங்குள்ள தமிழர்கள் பலர் அகதிகளாக தமிழகத்திற்கு வர தொடங்கினர். கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து தற்போது வரை ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு சுமார் 100 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

    இலங்கையில் இருந்து இரவு நேரத்தில் படகு மூலம் குடும்பம் குடும்பமாக வந்து தனுஷ்கோடி பகுதியில் உள்ள மணல்திட்டுகளில் தவித்தப்படி நின்ற அவர்களை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் எதிரே உள்ள மணல் திட்டில் வயதான தம்பதி இருவர் மயங்கி கிடந்தனர். இலங்கையில் இருந்து அகதியாக வந்த அவர்களை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டனர்.

    விசாரணையில் அவர்கள் இலங்கை மன்னார் மாவட்டம் பிருங்கன்பட்டியை சேர்ந்த சிவன் (வயது 82), அவரது மனைவி பரமேஸ்வரி (75) என்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் கூலி வேலை பார்த்து வந்த அவர்கள், அங்கு நிலவிய விலைவாசி உயர்வால் வாழ முடியாத நிலை ஏற்பட்டு தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

    அவர்களை படகில் அழைத்து வந்தவர்கள் இரவு நேரத்தில் ஆழம் குறைந்த தண்ணீரின் நடுவே இறக்கி விட்டு சென்றதால், வழி தெரியாமல் நடந்து வந்து மணல் திட்டு பகுதிக்கு வந்திருக்கின்றனர். பின்பு வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து செல்ல முடியாமல் மயங்கி விட்டனர்.

    அவர்கள் கிடந்த பகுதிக்கு ஆம்புலன்சு செல்ல முடியாது என்பதால் ஹோவர்கிராப்ட் கப்பல் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்பு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் வயதான தம்பதி இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வயதான தம்பதி இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×