என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஈரோடு ஜவுளி சந்தை"
- ஜவுளி சந்தை ஈரோடு அசோகபுரம், சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும் நடைபெறுகிறது.
- பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜவுளி வியாபாரம் கடந்த சில நாட்களாக மந்த நிலையில் நடந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடை, வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.
இந்த ஜவுளி சந்தை ஈரோடு அசோகபுரம், சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும் நடைபெறுகிறது. ஜவுளி சந்தையில் துணிகளை கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் வந்து துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
இதேப்போல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் சிறுகுறு வியாபாரிகளும் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் சூடு பிடித்தது. பொங்கல் பண்டிகை முடிந்து பிறகு ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்த நிலையில் நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று ஜவுளி வாரச்சந்தை கூடியது. ஆனால் வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவே இல்லை. கேரளாவில் இருந்து மற்றும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று மொத்த வியாபாரம் 15 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இதேபோல் சில்லரை வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது.
பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜவுளி வியாபாரம் கடந்த சில நாட்களாக மந்த நிலையில் நடந்து வருகிறது. இன்று கூடிய ஜவுளி வார சந்தையிலும் வெளி மாநில வியாபாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இனி வரக்கூடிய நாட்களில் தைப்பூசத்தையொட்டி வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
- இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் ஓரளவு வந்திருந்தனர்.
- மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே தினசரி ஜவுளி சந்தை வார ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை வாரச்சந்தை விடிய விடிய நடைபெற்று வருகிறது.
வார ஜவுளி சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்த துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பரவலாக பெய்து வருவதால் ஜவுளி சந்தை வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வந்தது.
கடந்த வாரம் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.
ஆனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா வியாபாரிகள் ஓரளவு வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று வியாபாரிகள் வரவில்லை. இதனால் வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றது.
உள்ளூர் வியாபாரிகளும் வராததால் ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. எனினும் நாளாக நாளாக வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
இதேபோல் சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும், பி.பி. அக்ரஹாரம் பகுதியிலும் ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.
- ஆடி மாதத்தையொட்டி வியாபாரம் ஓரளவு நடை பெற்றது.
- இன்று ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஜவுளி வார சந்தை நடைபெறுவது வழக்கம். ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள்.
சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆடி மாதத்தையொட்டி வியாபாரம் ஓரளவு நடை பெற்றது. தற்போது ஆடி 18 முடிவடைந்ததை ஒட்டி வியாபாரம் மீண்டும் மந்த நிலையில் நடைபெறுகிறது.
இன்று கூடிய வார சந்தையில் வெளி மாநிலத்தில் இருந்து கேரளா வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். தெலுங்கா னா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் இன்று ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
இதனால் மொத்த விற்பனை 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. சில்லரை விற்பனை 15 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. வியாபாரம் மந்தமாக இருந்தது. ஆவணி மாதம் வரை வியாபாரம் சுமாராக இருக்கும் என்றும் அதன் பிறகு வியாபாரம் ஓரளவு விறுவிறுப்பாக இருக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்க அருகே ஈரோடு (கனி மார்க்கெட்) ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது
- சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் அறவே நடைபெறவில்லை
ஈரோடு
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்க அருகே ஈரோடு (கனி மார்க்கெட்) ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடை, வாரச்சந்தை நடைபெறு கிறது. குறிப்பாக ஜவுளி வாரச்சந்தை திங்கட்கிழமை மாலை தொடங்கி விடிய, விடிய நடைபெற்று செவ்வாய்க்கிழமை மாலை முடிவ டைகிறது.
இந்த ஜவுளி சந்தை உலக புகழ் பெற்றது, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் வருவார்கள். மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.
மேலும் ஆன்லைன் மூலமாக வும் ஆர்டர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வருகிறது. மற்ற இடங்களை காட்டிலும் ஜவுளி சந்தையில் துணிகளின் விலை குறைவாக விற்கப்படுவதால் இங்கே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் தற்போது கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை தீவிரம் அடைந்துள்ளதால் வெளி மாநில வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு வரவில்லை. இதனால் கடந்த 2 வாரமாக ஜவுளி சந்தை வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது ஆனி மாதம் பிறந்துள்ளதால் எந்த ஒரு விசேஷமும் இல்லை.
இதனால் ஜவுளி வியா பாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய வார சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் அறவே நடைபெறவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் இன்று அந்த மாநில வியாபாரிகள் வரவில்லை.
ஆனால் இன்று மொத்த வியாபாரம் 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இதைப்போல் உள்ளூர் மாவட்ட வியாபாரிகளும் குறைந்த அளவை வந்திரு ந்தனர். சில்லரை வியாபாரம் 15 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரி வித்தனர். இதனால் இன்று ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
- கோடை காலம் தொடங்கி உள்ளதால் காட்டன் துணிகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
- சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகள் வந்திருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது. அதேப்போல் தினசரி கடைகளும் வாரச்சந்தை கடைகளும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தைகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஜவுளி சந்தை உலக புகழ்பெற்றது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளை மொத்த விலைக்கு வாங்கி செல்வார்கள். இதனால் சந்தை நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற இடங்களை விட இந்த துணிகள் மலிவாக கிடைப்பதால் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் காட்டன் துணிகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காட்டன் வேஷ்டி, சட்டைகள், சேலைகள், துண்டுகள் விற்பனை அதிகரித்துள்ளது.
இன்று கூடிய சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து அதிக அளவில் வெளி மாநில வியாபாரிகள் வந்திருந்தனர். இதுபோக வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான காட்டன் துணி ஆர்டர்கள் வந்துள்ளது.
இதனால் இன்று மொத்த வியாபாரம் 30 சதவீதம் நடைபெற்றது. இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இன்று காட்டன் துண்டுகள் அதிக அளவில் விற்பனையாகின. இதேபோல் சில்லரை விற்பனையும் இன்று சுறுசுறுப்பாக நடைபெற்றது. இன்று 40 சதவீதம் சில்லரை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இனி வரக்கூடிய நாட்களில் வியாபாரம் மேலும் சூடு பிடிக்கும் என ஜவுளி வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- கனி மார்க்கெட்டில் நடைபெறும் வாரச்சந்தை உலகப் புகழ்பெற்றது.
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி)மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 230 தினசரி கடைகளும், 760 வார சந்தை கடைகளும் உள்ளன.
கனி மார்க்கெட்டில் நடைபெறும் வாரச்சந்தை உலகப் புகழ்பெற்றது. திங்கட்கிழமை இரவில் தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை வரச்சந்தை நடைபெறும். இதற்காக மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு வந்து துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள்.
இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம். சாதாரண நாட்களில் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். அதே நேரத்தில் பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். மற்ற இடங்களை விட இங்கு ஜவுளிகளின் விலை குறைவாக இருப்பதால் ஜவுளி சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக கடந்த ஒன்றரை மாதமாக ஜவுளி சந்தை வியாபாரம் மந்தமாக இருந்தது. குறிப்பாக வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் அறவே நடைபெறவில்லை. இதனால் ரூ.150 கோடி மதிப்பிலான துணிகள் குடோனில் தேங்கி இருந்தன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவடைந்ததால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டது. இதனையடுத்து வழக்கம் போல் நேற்று இரவு ஜவுளி சந்தை கூடியது.
இந்த முறை கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகை தந்தனர். இதனால் ஜவுளி சந்தை களை கட்டியது. மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடை பெற்றது.
இதேபோல் தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். தற்போது கோவில்களில் தொடர்ந்து விசேஷம் வருவதால் மஞ்சள், சிகப்பு கலர் துண்டு, வேட்டிகள், சேலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
சில்லரை வியாபாரம் இன்று மட்டும் 30 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தது கோடை காலம் தொடங்கிவிடும் என்பதால் கோடை விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜவுளி சந்தையில் உள்ள தினசரி கடைகள் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது.
- இது குறித்த அறிவிப்பு கடைகளில் வைக்கப்பட்டிருந்தது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ–மனையில் மாரடைப்பால் இறந்தார்.
அவரது திடீர் இறப்பு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திருமகன் ஈவெரா உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பு தலைவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் தினசரி ஜவுளி சந்தையில் 260-க்கும் மேற்பட்ட தினசரி கடைகள் செயல்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கடந்த சில நாட்களாகவே ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜவுளி சந்தையில் உள்ள தினசரி கடைகள் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு கடைகளில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று பன்னீர்செல்வம் பார்கில் ஜவுளி வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மவுன ஊர்வலமாக கச்சேரி வீதியில் உள்ள திருமகன் ஈவெரா வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
- முக்கிய முகூர்த்த நாட்கள் முடி வடைந்ததையடுத்து இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது.
- ஆடி மாதம் தொடக்கம் வரை இதே மந்த நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த சந்தைக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகா ராஷ்டிரா, போன்ற வெளி மாநிலங்கள் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம். இதுபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் ஜவுளி சந்தையில் கடந்த சில நாட்களாக பள்ளி சீருடை, முகூர்த்த ஜவுளிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது. மேலும் உள்ளூர் திருவிழாக்களையொட்டி வேட்டி, சேலை, துண்டு உள்ளிட்டவைகள் விற்பனையானது.
இந்நிலையில் முக்கிய முகூர்த்த நாட்கள் முடி வடைந்ததையடுத்து இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஆடி மாதம் தொடக்கம் வரை இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:-
ஆனி மாதத்தின் முக்கிய முகூர்த்த நாட்கள் நிறை வடைந்து விட்டதால் ஜவுளி சந்தையில் வியா பாரம் மந்த நிலையில் காணப்பட்டது. சில்லரை விற்பனை 30 சதவீதமும், மொத்த வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. வழக்கமாக ஆந்திரா வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு ஆந்திரா வியாபாரிகள் யாரும் வரவில்லை. கேரளா வில் இருந்து வர வேண்டிய ஆர்டர்களும் வரவில்லை. ஆடி மாதம் தொடக்கம் வரை இதே மந்த நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறி னர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்