search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுஸ்வேந்திர சாஹல்"

    • ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் சந்தீப் சர்மா, போல்ட், சாஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
    • ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சாஹல் 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    ஐபிஎல் டி20 தொடரின் 56-வது லீக் போட்டி இன்று டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் சந்தீப் சர்மா, போல்ட், சாஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    சாஹல் இந்த போட்டியில் 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். சர்வதேசம், ஐபிஎல் மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் சேர்த்து சாஹால் 350 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

    அவருக்கு அடுத்தபடியாக பியூஸ் சாவ்லா 310, ரவிச்சந்திரன் அஸ்வின் 306 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.  

    • யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் வீசி 62 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
    • இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது மோசமான சாதனையை சாஹல் படைத்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் தடுமாறினாலும் பின்னர் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

    ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் வீசி 62 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது மோசமான சாதனையை சாஹல் படைத்துள்ளார். இதற்கு முன்னர் கொல்கத்தா அணிக்கு எதிராக 1 விக்கெட் வீழ்த்தி 54 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணிக்காக 80 டி20 போட்டிகள் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
    • நடன ரியாலிட்டி ஷோவின் சீசன் 11-ல் போட்டியாளராக இருந்த மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத், சாஹலை தூக்கி வைத்து பலமுறை சுத்தினார்.

    2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான யுஸ்வேந்திர சாஹல், டோனியின் தலைமையின் கீழ் மிகச்சிறப்பாக செயல்பட்டவர். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 80 டி20 போட்டிகள் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

    இந்நிலையில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடன ரியாலிட்டி ஷோவின் சீசன் 11-ல் போட்டியாளராக இருந்த மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத், சாஹலை தூக்கி வைத்து பலமுறை சுத்தினார். 

    முடியலடா சாமி என்பது போல என்னை இறக்கி விடு என கிறக்கத்துடன் சாஹல் கூறினார். உடனே சிரித்தப்படி அவரை போகத் கீழே இறக்கி விட்டார். இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களில் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவும் ஒருவர்.

    இந்த வீடியோவை பார்க்கும் போது குத்துச்சண்டையில் ப்ராக் லெஸ்னர் எதிரியை தோள்மேல் தூக்கி வைத்து கீழே போட்டு வெற்றி பெறுவார். அதே மாதிரி இருந்தது. குத்துச்சண்டை போட்டியில் ப்ரால் லெஸ்னர் பிரபலமான வீரராவார்.

    2023-24 சீசனுக்கான பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தை இழந்த ஏழு கிரிக்கெட் வீரர்களில் சஹாலும் ஒருவர் ஆவார். 

    • இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.
    • இதற்கான அணியில் சாஹல் இடம் பிடிக்கவில்லை.

    ஆசிய கோப்பைக்கான தொடரிலும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தொடரிலும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. அப்போது யுஸ்வேந்திர சாஹல் சூரியன் மீண்டும் பிரகாசமாக உதிக்கும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது அந்த பதிவு வைரலானது.

    இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான அணியிலும் சாஹல் இடம் பிடிக்கவில்லை.

    இந்த சூழலில் அவர் எக்ஸ் தளத்தில் சிரித்தபடி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் விவரம்:-

    1. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 2. ருதுராஜ் கெய்க்வாட் (துணைக் கேப்டன்), 3. இஷான் கிஷன், 4. ஜெய்ஸ்வால், 5. திலக் வர்மா, 6. ரிங்கு சிங், 7. ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), 8. வாஷிங்டன் சுந்தர், 9. அக்சார் பட்டேல், 10. ஷிவம் டுபே, 11. ரவி பிஷ்னோய், 12. அர்ஷ்தீப்சிங், 13. பிரசித் கிருஷ்ணா, 14. அவேஷ் கான், 15. முகேஷ் குமார்.

    • அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்.
    • இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும்.

    ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த பிறகு தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் நிருபர்களிடம் கூறுகையில், 'லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக செயல்படக்கூடிய வீரர். அவர் ஆசிய கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்துக்கு முன்பே முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என்று நம்புகிறோம். லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். இதில் லோகேஷ் ராகுலுக்கு புதிதாக ஏற்பட்டு இருக்கும் காயம் சிறிய பின்னடைவு தான். காயம் சரியாகி விடும் என்று நம்புகிறோம். அவர் மிகவும் முக்கியமான வீரர். உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 1½ மாதம் இருக்கிறது. அதற்கு முன்பாக ராகுல், ஸ்ரேயாஸ்க்கு போதுமான அளவுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். இதேபோல் இஷான் கிஷனும் நல்ல நிலையில் உள்ளார். இந்த தருணத்தில் இந்த 3 வீரர்களுக்கு தான் தொடக்க வரிசையில் முன்னுரிமை அளிக்க முடியும். அணியின் கலவையை கருத்தில் கொண்டு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் அளிக்க முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களில் சாஹலை விட அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என்பதால் முன்னுரிமை அளிக்கப்பட்டது' என்றார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'இந்த அணியில் உள்ள எல்லோரும் எந்த வரிசையிலும் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும். பேட்டிங் வரிசை நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அது தான் அணிக்கு நல்லது. எனக்கு குறிப்பிட்ட வரிசை தான் சவுகரியமாக இருக்கும் என்று யாரும் சொல்லக்கூடாது. அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும். ஒரே நாள் இரவில் எந்தவொரு பேட்ஸ்மேனின் வரிசையும் மாற்றம் செய்யப்படுவது கிடையாது.

    அணி தேர்வில் ஆப் ஸ்பின்னர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. 17 பேரை மட்டுமே அணிக்கு தேர்வு செய்ய முடியும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம் அளிக்க முடியவில்லை. அவரை சேர்க்க வேண்டும் என்றால் ஒரு வேகப்பந்து வீச்சாளரை நீக்க வேண்டியது வரும். அடுத்த 2 மாதங்களில் நடக்கும் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதால் வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 8-வது அல்லது 9-வது வரிசையில் ஆடும் பவுலரும் கொஞ்சம் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். சில வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தில் இருந்து திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

    அணியில் யாருக்கும் கதவு மூடப்பட்டுவிடவில்லை. யார் வேண்டுமென்றாலும் எப்போதும் அணிக்கு வரலாம். உலகக் கோப்பை போட்டிக்கு யுஸ்வேந்திர சாஹல் தேவைப்பட்டால், அவரை எப்படி சேர்த்து கொள்வது என்பதை பார்ப்போம், அஸ்வின், வாஷிங்டன் விஷயத்திலும் இது பொருந்தும்' என்றார்.

    • இந்திய அணியில் அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை.
    • அணியில் தேர்வாகாதது குறித்து சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவு.

    ஆசிய கோப்பை தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, திலக் வர்மா, இஷான் கிஷன், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், அக்ஷர் படேல், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர். மேலும் சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

    இந்த அணியில் அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை. அணியில் தேர்வாகாதது குறித்து சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதில் மேகமூட்டத்துடன் இருக்கும் சூரியன் மீண்டும் பிரகாசமாக உதிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

    • குல்தீப் யாதவ் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசுகிறார். தற்போது நல்ல நிலையில் உள்ளார்.
    • அதனால் தான் என்னை விட அவருக்கு ஆடும் லெவனில் இடம் வழங்கப்படுகிறது.

    கயானா:

    இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் அனேகமாக மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடிப்பார்கள். இதில் ஜடேஜா, குல்தீப் யாதவுக்கு இடம் உறுதி. மற்றொரு இடத்திற்கு யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல் ஆகியோரில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

    33 வயதான 'லெக் ஸ்பின்னர்' யுஸ்வேந்திர சாஹலை பொறுத்தவரை இந்த ஆண்டில் வெறும் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் பெரும்பாலும் வெளியே உட்கார வைக்கப்படுகிறார்.

    இது குறித்து வெஸ்ட் இண்டீசில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எப்போதும் களம் இறங்கும் 11 பேர் கொண்ட அணி அதாவது சரியான அணிச்சேர்க்கைக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும். இது ஒன்றும் புதிதல்ல. இந்திய ஒரு நாள் போட்டி அணியில் பொதுவாக 7-வது பேட்டிங் வரிசையில் ரவீந்திர ஜடேஜா அல்லது அக்ஷர் பட்டேல் விளையாடுகிறார்கள். ஆடுகளம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உகந்ததாக இருந்தால் மட்டுமே 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறோம். குல்தீப் யாதவ் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசுகிறார். தற்போது நல்ல நிலையில் உள்ளார். அதனால் தான் என்னை விட அவருக்கு ஆடும் லெவனில் இடம் வழங்கப்படுகிறது. ஆனாலும் நான் தொடர்ந்து வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், அதை என்னால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    ஆஸ்திரேலியா (மார்ச் மாதம்) மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தும் களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் அணியினருடனே பயணிக்கிறேன். அணிக்குரிய நீலநிற சீருடையை ஒவ்வொரு நாளும் அணிவது அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஒன்றும் வீட்டில் இருக்கவில்லை. அணியில் நானும் அங்கம் வகிக்கிறேன். கிரிக்கெட் தனிநபர் போட்டி அல்ல. குழு போட்டி. அணியில் இருக்கும் 15 பேரும் வெற்றிக்காக உழைக்கிறோம். அதில் 11 பேர் மட்டுமே களம் இறங்க வாய்ப்பு பெற முடியும். ஆடுகள சூழலுக்கு ஏற்ப லெவன் அணி தேர்வு செய்யப்படுகிறது.

    நான் இதுவரை 4 கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறேன். அவர்கள் எல்லாம் எனது சகோதரர் மாதிரி. ஒரு குடும்பம் போல் நினைக்கிறேன். டோனி தான் மூத்த சகோதரர். அடுத்து விராட் கோலி, அதன் பிறகு ரோகித் சர்மா. இப்போது ஹர்திக் பாண்ட்யா. ஆனால் நோக்கம் ஒன்று தான். மைதானத்திற்குள் வந்து விட்டால் எல்லோரும் வெற்றி பெற விரும்புகிறோம். ஒரு பவுலரான எனக்கு அவர்கள் (சீனியர்) முழு சுதந்திரம் தந்தனர். ஹர்திக் பாண்ட்யாவும் அதே போல் பவுலர்களை வழிநடத்துகிறார்.

    இப்போது நான் ஆசிய கோப்பை அல்லது உலகக் கோப்பை கிரிக்கெட் குறித்து சிந்திக்கவில்லை. முழு கவனமும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை சிறப்பாக நிறைவு செய்வதில் தான் இருக்கிறது.

    இவ்வாறு சாஹல் கூறினார்.

    • பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் விளையாட்டு மைதானம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது.
    • 2022-ம் ஆண்டு என்னை அவர்கள் ஏமாற்றிவிட்டனர்.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 8 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக சாஹல் விளையாடி வந்தார். இந்நிலையில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது சாஹலை, ஆர்சிபி அணி நிர்வாகம் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. 2022-ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக சாஹல் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் 2022 ஏலத்தில் ஆர்சிபி அணி அவரை ஏலத்தில் எடுக்காதது குறித்து சாஹல் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:

    ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகளில் விளையாடியுள்ளேன். பல போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுத்தேன். ஆனால், 2022-ம் ஆண்டு என்னை அவர்கள் ஏமாற்றிவிட்டனர். ஏலம் குறித்து ஆர்சிபி அணியிடமிருந்து எனக்கு ஒழுங்கான தகவல் தெரிவிக்கவில்லை.

    ஆர்சிபி அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடி உள்ளேன். ஆனால் 2022 ஏலத்தில் என்னை எடுக்காததால் நான் மிகவும் கோபமடைந்தேன். அதிக வருத்தம் அடைந்தேன். பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் விளையாட்டு மைதானம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், 145 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகள் எடுத்து பிராவோவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ளார்.

    • நான் கல்லி கிரிக்கெட்டில் இம்பெக் பிளேயர் என இந்த வீடியோவுக்கு தலைப்பிட்டுருந்தார்.
    • இவரது தலைப்புக்கு ரஷித்கான் கிண்டலாக பதில் அளித்தார்.

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் வரிசையில் சாஹல் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிராவோ 183 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், 174 விக்கெட்டுகளுடன் பியூஷ் சாவ்லா மூன்றாம் இடத்திலும், 172 விக்கெட்டுகளுடன் அமித் மிஷ்ரா நான்காம் இடத்திலும் உள்ளனர்.

     

    ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், யுஸ்வேந்திர சாஹல் தெருவில் சில கிரிக்கெட் ஆர்வலர்களுடன் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் சாஹல் பேட்டிங் செய்வது போல இருந்தது. சில அற்புதமான ஷாட்களை விளையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நான் கல்லி கிரிக்கெட்டில் இம்பெக் பிளேயர் என இந்த வீடியோவுக்கு சாஹல் தலைப்பிட்டுருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலரும் சுவாரஸ்யமாக கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

    இந்த தலைப்புக்கு ஆப்கானிஸ்தான் அணியின் சூழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், 'கல்லி கிரிக்கெட்டில் ஒரு சிக்சராவது அடிங்க சகோதரா' என கிண்டலாக கமெண்ட் செய்தார்.

    அதற்கு பதிலளித்த சாஹல், இங்கே சிக்சர் அடித்தால் அவுட் என தெரிவித்தார். 

    • இன்றைய ஆட்டத்தில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • டுவைன் பிராவோ 183 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    இன்றைய போட்டி துவங்குவதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் டுவைன் பிராவோ ஆகிய இருவரும் 183 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருந்தனர். இன்றைய போட்டியின் 11வது ஓவரில் கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவின் விக்கெட்டை சாஹல் கைப்பற்றியதன் மூலம், பிராவோவை முந்தி முதலிடத்தை பிடித்தார். அதன்பின்னர் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் வரிசையில் சாஹல் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிராவோ 183 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், 174 விக்கெட்டுகளுடன் பியூஷ் சாவ்லா மூன்றாம் இடத்திலும், 172 விக்கெட்டுகளுடன் அமித் மிஷ்ரா நான்காம் இடத்திலும் உள்ளனர்.

    • குல்தீப் யாதவ் கையை சுழற்றுவதில் முன்பு மெதுவாக சுழற்றினார். இப்போது கொஞ்சம் வேகமாக சுழற்றுகிறார்.
    • சாஹல் கையை மெதுவாகச் சுழற்றுகிறார் இதனால் பந்தில் ஸ்பின் இல்லாமல் போய் விடுகிறது.

    குல்தீப் யாதவ் வங்காளதேசத்தில் டிசம்பரில் நடந்த தொடரில் அவர் விளையாடிய ஒரே டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அவர் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடர்களில் மேட்ச்-வின்னிங் ஸ்பெல்களுடன் அதைத் தொடர்ந்தார்.

    மேலும் அடுத்த வாரம் நாக்பூரில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.

    இந்நிலையில் இந்திய தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி 2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ்வை நீக்கிய பிறகு உத்தரப்பிரதேச அணியில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். கையை சுழற்றுவதில் முன்பு மெதுவாக சுழற்றினார். இப்போது கொஞ்சம் வேகமாக சுழற்றுகிறார். அவர் வீசும் திசையும் நன்றாக உள்ளது. முன்பை விட இப்போது பந்து அதிகமாக ஸ்பின் ஆகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குல்தீப் யாதவ்வை டெஸ்ட் போட்டிகளில் வைத்துக் கொள்ள வேண்டும். பிட்ச், மைதானம், ஊர் இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. குல்தீப் எப்படி வீசுகிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

    சமீபத்தில் அவர் ஆடிய டெஸ்ட், ஒருநாள், போட்டிகளில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் விதங்களைப் பார்க்க வேண்டும், அவரிடம் ஆட்டமிழந்தவர்கள் 30 யார்டு சர்க்கிளுக்குள் கேட்ச் ஆகி அவுட் ஆகின்றனர். அல்லது பவுல்டு, எல்.பி.என்று வீழ்த்துகிறார். இது பெரிய விஷயம்.

    சாஹல் கையை மெதுவாகச் சுழற்றுகிறார் இதனால் பந்தில் ஸ்பின் இல்லாமல் போய் விடுகிறது. இதனால் பேட்டர்கள் அவர் பந்துகளை எளிதில் அடித்து விட முடிகிறது. இப்போதெல்லாம் உடல் செயற்பாடில்லாமல் வெறுமனே கையால் பந்தை ரிலீஸ் மட்டுமே செய்கிறார். இதனால் பிளாட்டாக விழுகிறது. ஆனால் குல்தீப் அந்த விதத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்.

    ஆகவே உலகக்கோப்பை போட்டிகளில் குல்தீப் யாதவ்வுக்குத்தான் இடமளிக்க வேண்டும்.

    இவ்வாறு சுனில் ஜோஷி கூறினார்.

    • நேற்றைய போட்டியில் சாஹல் 2 ஓவர்கள் பந்துவீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
    • புவனேஸ்வர் குமார் 87 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் இரண்டு ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டன் உட்பட 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய பவுலராக சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.

    இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக புவனேஸ்வர் குமார் முதலிடத்தில் இருந்தார். அவர் 87 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    அந்த சாதனையை யுஸ்வேந்திர சாஹல் முறியடித்துள்ளார். அவர் 75-வது போட்டியில் விளையாடி 91 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    ×