என் மலர்
நீங்கள் தேடியது "யுஸ்வேந்திர சாஹல்"
- இந்திய அணிக்காக 80 டி20 போட்டிகள் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
- நடன ரியாலிட்டி ஷோவின் சீசன் 11-ல் போட்டியாளராக இருந்த மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத், சாஹலை தூக்கி வைத்து பலமுறை சுத்தினார்.
2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான யுஸ்வேந்திர சாஹல், டோனியின் தலைமையின் கீழ் மிகச்சிறப்பாக செயல்பட்டவர். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 80 டி20 போட்டிகள் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடன ரியாலிட்டி ஷோவின் சீசன் 11-ல் போட்டியாளராக இருந்த மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத், சாஹலை தூக்கி வைத்து பலமுறை சுத்தினார்.

முடியலடா சாமி என்பது போல என்னை இறக்கி விடு என கிறக்கத்துடன் சாஹல் கூறினார். உடனே சிரித்தப்படி அவரை போகத் கீழே இறக்கி விட்டார். இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களில் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவும் ஒருவர்.
இந்த வீடியோவை பார்க்கும் போது குத்துச்சண்டையில் ப்ராக் லெஸ்னர் எதிரியை தோள்மேல் தூக்கி வைத்து கீழே போட்டு வெற்றி பெறுவார். அதே மாதிரி இருந்தது. குத்துச்சண்டை போட்டியில் ப்ரால் லெஸ்னர் பிரபலமான வீரராவார்.
2023-24 சீசனுக்கான பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தை இழந்த ஏழு கிரிக்கெட் வீரர்களில் சஹாலும் ஒருவர் ஆவார்.
- யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் வீசி 62 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
- இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது மோசமான சாதனையை சாஹல் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் தடுமாறினாலும் பின்னர் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் வீசி 62 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது மோசமான சாதனையை சாஹல் படைத்துள்ளார். இதற்கு முன்னர் கொல்கத்தா அணிக்கு எதிராக 1 விக்கெட் வீழ்த்தி 54 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் சந்தீப் சர்மா, போல்ட், சாஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
- ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சாஹல் 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல் டி20 தொடரின் 56-வது லீக் போட்டி இன்று டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் சந்தீப் சர்மா, போல்ட், சாஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
சாஹல் இந்த போட்டியில் 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். சர்வதேசம், ஐபிஎல் மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் சேர்த்து சாஹால் 350 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக பியூஸ் சாவ்லா 310, ரவிச்சந்திரன் அஸ்வின் 306 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.
- யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி 18 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
- இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன 4 ஆவது வீரர் என்ற சாதனை சாஹல் படைத்தார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் ஏலத்தில் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி 18 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன 4 ஆவது வீரர் என்ற சாதனை சாஹல் படைத்தார்.
இந்நிலையில் பஞ்சாப் அணியில் சாஹல் இணைந்ததை குறிக்கும் விதமாக முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல் மைதானத்திற்கு வெளியே படுத்திருக்கும் புகைப்படம் மீம் மெட்டிரியலாக வைரலாகியது. அந்த புகைப்படத்தையும் கங்காரு படுத்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்து ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், எனது சாம்பியன் சகோதரர் சாஹலுக்கு 18 கோடி. பஞ்சாபிற்கு வரவேற்கிறோம். பாட்ஷா பந்துவீச்சாளரே கங்காரு உங்களை கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டது.
- 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
- இருப்பினும் விவாகரத்து செய்திகளை இருவரும் மறுத்து வந்தனர்.
மும்பை:
அண்மையில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணிக்காக ஆடிய சாஹல் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் சாஹல் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் சாஹல் வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹல் மருத்துவரான தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது. பின்னர் அவர் மீதான மீடியா வெளிச்சம் அதிகரிக்க, தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதனிடையே சாஹல் - தனஸ்ரீ இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தது. தனஸ்ரீயின் நடவடிக்கைகளில் சாஹலுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.

ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து செய்திகளை இருவரும் மறுத்து வந்தனர். இந்த நிலையில் சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "புதிய வாழ்க்கை லோடிங்" என்று சில மாதங்களுக்கு முன் பதிவிட்டார். தற்போது இன்ஸ்டாகிராமில் இருவரும் பின் தொடர்வதை நிறுத்தியதோடு, தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் அழித்து வருகின்றனர்.
இதனால் சாஹல் - தனஸ்ரீ தம்பதியினர் விவாகரத்து செய்ய உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில், சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவர்களின் விவாகரத்துக்கான காரணம் குறித்து எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
- டான்ஸ் மாஸ்டருக்கும் தனஸ்ரீக்கும் இடையிலான நெருக்கம் விவாகரத்து காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- இது தொடர்பாக புகைப்படம், வீடியோ என பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனை உறுதி செய்யும் விதமாக யுவேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்திருக்கிறார்கள். மேலும் இருவர் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன. இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யக்கூடும் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மும்பையைச் சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் பிரதிக் உடேகர். இவருக்கும் தனஸ்ரீ வர்மாவுக்கும் இடையிலான நெருக்கம் சாஹல் பிரிவிற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக புகைப்படம், வீடியோ என பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாகவே எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிக கடினமாக இருக்கிறது. உண்மையாகவே வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், ஆதாரமில்லாத வதந்திகள், உண்மையை சரிபார்க்காமல் சொல்வது, வெறுப்பை பரப்பும் ட்ரோல்களால் என் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதுதான்.
எனக்கான நல்ல பெயரை கட்டமைக்க நான் பல ஆண்டுகள் கடினமாக உழைத்துள்ளேன். எனது மௌனம் பலவீனத்தின் அடையாளம் அல்ல. வலிமையின் அடையாளம். எனவே, என்னைப் பற்றிய உண்மையின் மீது மட்டுமே கவனம் செலுத்தி முன்னேறி செல்வதை நான் தேர்வு செய்ய விரும்புகிறேன். உண்மை உயர்ந்து நிற்கும்.
என்று தனஸ்ரீ வர்மா கூறினார்.
- இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இப்போட்டியில் பில் சால்ட், பென் டக்கெட் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு துவங்கியது
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட், பென் டக்கெட் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.
இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹலின் சாதனையை அர்ஷ்தீப் சிங் முறியடித்தார்.
61 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 97 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 80 போட்டிகளில் விளையாடிய யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- இந்தியா- இங்கிலாந்து மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகித்துள்ளது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்த சாஹலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து அர்ஷ்தீப் சிங் கூறியதாவது:-
யுஸ்வேந்திர சாஹலின் ஆல் டைம் ரெக்கார்டை உடைத்ததற்காக மன்னிப்பு (காதுகளின் மீது கை வைத்தவாறு மன்னிப்பு கேட்டு சைகை செய்தார்) கேட்டுக் கொள்கிறேன்.
இது உண்மையிலேயே மிகச் சிறப்பான ஒரு தருணம். என்னுடைய கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. நாட்டுக்காக இன்னும் நான் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சித்து என்றும் நன்றி உள்ளனாக இருப்பேன்.
என அர்ஷ்தீப் சிங் கூறினார்.
- 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
- இருவரும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
மும்பை:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ விவகாரத்து செய்யப் போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் சமீப காலங்களில் தனித்தனியே வசிப்பதாகவும், இருவரின் விவாகரத்து தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது.
தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.

ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இருவரும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. நேற்று மாலை நீதிபதி, அவர்களுக்கு அதிகாரபூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தனஸ்ரீ வர்மாவுக்கு யுஸ்வேந்திர சாஹல் குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாக வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ரூ. 60 கோடி வரை ஜீவனாம்சம் செலுத்த வேண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
2025-ம் ஆண்டு நிலவரப்படி தனஸ்ரீ வர்மாவின் நிகர மதிப்பு 24 கோடி. அவர் தனது பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் நல்ல சம்பளம் பெறுகிறார். 6.2 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். சாஹலின் நிகர சொத்து மதிப்பு ரூ.45 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
- யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
- சாஹல் அவரது மனைவி தனுஸ்ரீ வரமாவை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவியது
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 252 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில், துபாய் மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியை ஆர்ஜே மஹ்வாஷ் உடன் இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் கண்டு ரசித்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சாஹலுக்கும் அவரது மனைவி தனுஸ்ரீ வரமாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல் பரவியது
இந்நிலையில், ஆர்ஜே மஹ்வாஷ் உடன் சாஹல் இருக்கும் புகைப்படம் இனியாயத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
- யுஸ்வேந்திர சாஹல் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- லாட்ஸ் மைதானத்தில் இந்திய முன்னாள் வீரர் அமர்நாத் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 10 ஓவர் பந்து வீசி 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சாஹல் புதிய சாதனை படைத்துள்ளார்.
லாட்ஸ் மைதானத்தில் இந்திய முன்னாள் வீரர் அமர்நாத் 1983-ம் ஆண்டு 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இந்திய வீரர்களின் சாதனையாக இருந்தது. அதற்கு அடுத்தப்படியாக ஆஷிஸ் நெக்ரா 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இவர்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
- டெஸ்ட் போட்டிகள் விறு விறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருப்பதால் டெஸ்ட் மீதான ஆர்வம் மீண்டும் எழுகிறது.
- ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் சாஹல் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் 61 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 104 விக்கெட்டும் டி20 போட்டிகளில் 75 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சாஹல் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். ஐபிஎல் 2022 சிறந்த பந்து வீச்சாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்கா தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். தற்போது விளையாடி வரும் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். இந்நிலையில் சாஹல் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்வான் கூறியதாவது:-

ஸ்வான்
சாஹாலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட விருப்பம் என்றால் உடனடியாக சேர்த்துக் கொள்வேன். இதை நான் சாஹலுடன் அமர்ந்து கேட்க வேண்டும். ஏனென்றால் அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் உலகின் சிறந்த ஸ்பின்னர் என்று நான் நம்புகிறேன். கடினமான சூழ்நிலைகளில் லெக்-ஸ்பின் வீசும்போது குறிப்பாக பனி மற்றும் ஈரமாக இருக்கும் போது அவர் சிறப்பாக செயல்படுவார்.
டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.
டெஸ்ட் போட்டிகள் விறு விறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருப்பதால் டெஸ்ட் மீதான ஆர்வம் மீண்டும் எழுகிறது. இங்கிலாந்து பரபரப்பான கிரிக்கெட் விளையாடி வருகிறது. மெக்கலத்தின் நெறிமுறைகள் இந்திய அணியிலும் உலகெங்கிலும் உள்ள மற்ற அணிகளிலும் பரவியிருக்கும் என்று நம்புகிறேன். இது பார்வையாளர்களை மீண்டும் ஈர்க்கும் ஒரு முறையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.