என் மலர்
கிரிக்கெட் (Cricket)

விவாகரத்து பெற்ற யுஸ்வேந்திர சாஹல்- தனஸ்ரீ: ஜீவனாம்சம் இத்தனை கோடியா?

- 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
- இருவரும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
மும்பை:
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ விவகாரத்து செய்யப் போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் சமீப காலங்களில் தனித்தனியே வசிப்பதாகவும், இருவரின் விவாகரத்து தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது.
தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.
ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இருவரும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. நேற்று மாலை நீதிபதி, அவர்களுக்கு அதிகாரபூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தனஸ்ரீ வர்மாவுக்கு யுஸ்வேந்திர சாஹல் குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாக வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ரூ. 60 கோடி வரை ஜீவனாம்சம் செலுத்த வேண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
2025-ம் ஆண்டு நிலவரப்படி தனஸ்ரீ வர்மாவின் நிகர மதிப்பு 24 கோடி. அவர் தனது பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் நல்ல சம்பளம் பெறுகிறார். 6.2 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். சாஹலின் நிகர சொத்து மதிப்பு ரூ.45 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.