என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின் விநியோகம் ரத்து"
- ஃபெங்கல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது.
- திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி நிறுத்தம்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
ஃபெங்கல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கையாக அப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 3 துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
- கரூரில் சில பகுதிகளில் நாளை மின் விநியோகம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது
கரூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் கோட்ட செயற்பொறியாளர் சு.கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஜெகதாபி மற்றும் லந்தக்கோட்டை பீடர்களில் நாளை (29ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் ஜெகதாபி பீடர், ராஜலிங்கபுரம், செல்லாண்டிபுரம், கள்ளபொம்மன்பட்டி, தெற்கு மாணிக்கபுரம், நத்தப்பட்டி, வடக்கு மாணிக்கபுரம், சுக்காம்பட்டிபுதூர், வெள்ளமடைப்பட்டி, அய்யம்பாளையம், பாலப்பட்டி, பொம்மணத்துப்பட்டி. லந்தக்கோட்டை பீடர், நன்னிபாறை, காணிகளத்தூர், மஞ்சநாயக்கன்பட்டி, ராசான்கோவிலூர், லந்தக்கோட்டை, கன்னிமார்பாளையம், கரும்புளிப்பட்டி, முத்தக்காப்பட்டி, ஜெகதாபி தெற்கு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்