search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 வீடுகள்"

    • பழனிச்சாமி ,கண்ணன் ஆகியோரது வீடுகள் மழைக்கு தாங்காமல் இடிந்து விழுந்தன.
    • உடுமலைப்பேட்டையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது .தொடர் மழையால் திருமூர்த்தி மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த பழனிச்சாமி ,கண்ணன் ஆகியோரது வீடுகள் மழைக்கு தாங்காமல் இடிந்து விழுந்தன.

    அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் இவர்கள் குடும்பத்துடன் தப்பித்தனர் .உரிய இழப்பீடு வழங்கவும்புதிய வீடுகள் கட்டித் தரவும் அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • கந்தன் பட்டறை உட்பட பல்வேறு பகுதிகளின் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.
    • ஓட்டு வீடானது வெள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளது. அவர்கள் முகாமில் தங்கி இருந்ததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

    பவானி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அதிக அளவில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் 16 மதகு கண் வழியாக திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் கன அடி வரை காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் காவிரி ஆற்றின் வெள்ளத்தால் பவானி நகர பகுதியில் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் வருவாய் துறையினர் மூலம் தங்க வைக்கப்பட்டனர்.

    இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் தண்ணீரின் அளவு குறை ந்தது. இதனைத்தொடர்ந்து கந்தன் பட்டறை உட்பட பல்வேறு பகுதிகளின் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.

    கந்தன் பட்டறை பகுதியில் காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர் சந்திரன் (31). இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மீனவர் ஆன இவர் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வந்த நிலையில் கோவைக்கு சென்று மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் அவரின் வீடு கடந்த வாரம் இடிந்து விழுந்தது.இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (45). இவரது மனைவி சாந்தி மற்றும் ஒரு மகன் ஒரு மகளுடன் தனது ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.

    அவரின் ஓட்டு வீடானது வெள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளது. அவர்கள் முகாமில் தங்கி இருந்ததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

    கந்தன் பட்டறை உட்பட பல்வேறு பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தாங்கள் தற்பொழுது வீட்டை சுத்தமட்டும் செய்து வைத்துக் கொள்ளவும், ஒரு வாரம் கழித்து தண்ணீர் அளவு எப்படி உள்ளது என பார்த்த பின்னர் தாங்கள் தங்கள் வீட்டுக்கு குடியேற வலியுறுத்தி உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • அந்தியூர் பர்கூர் மலையில் உணவு தேடி வந்த காட்டுயானை 2வீட்டை சேதப்படுத்தி விட்டு சென்றது.
    • இடிந்து வீட்டிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோர்க்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சி மேல் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி மாதம்மாள் (65). இவர்களது மகன் முனியப்பன். மாதம்மாள் தனது மகளுடன் அருகாமையில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் அதிகாலை இவர்களின் வசிப்பி டத்துக்கு காட்டுயானை உணவு தேடி வந்துள்ளது. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு இவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது தெரியவந்தது. உணவு தேடி வந்த காட்டுயானை இவர்களின் வீட்டை சேதப்படுத்தி விட்டு சென்றது.

    இதுகுறித்த தகவலின்பேரில் பர்கூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். உணவு தேடி காட்டுயானை குடியிருப்புக்கு வந்து செல்வது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இடிந்து வீட்டிருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோர்க்கை விடுத்துள்ளனர். இதேபோல் அட்டகாசம் செய்யும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×