என் மலர்
நீங்கள் தேடியது "கோவை சிறுமி கற்பழிப்பு"
- கடந்த 24-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
- பள்ளிக்கு சென்ற காளிமுத்து மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை திருச்சிக்கு கடத்தி சென்றார்.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு கோழிப்பண்ணையில் வசித்து வந்த எலக்ட்ரிசீயன் காளிமுத்து (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த 10-ந் தேதி மாணவிக்கு பிறந்த நாள். இதனையடுத்து காளிமுத்து மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது திருமணம் செய்வதாக உறுதியளித்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
கடந்த 24-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பள்ளிக்கு சென்ற காளிமுத்து மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை திருச்சிக்கு கடத்தி சென்றார்.
பள்ளிக்கு சென்ற தங்களது மகள் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
மாணவியை காளிமுத்து திருச்சியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்குள்ள அறையில் அடைத்து வைத்து 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் மாணவியை காளிமுத்து ஆனைமலை பஸ் நிலையத்தில் தனியாக விட்டு சென்றார்.
வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அவர்கள் இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காளிமுத்தை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.