என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துணைத்தேர்வு"
- துணைத்தேர்வை எழுத விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் வருகிற 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
- தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைத்துள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்வை 11 ஆயிரத்து 594 பேர் எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் 41 ஆயிரத்து 410 பேர் தோல்வியை தழுவி இருந்தனர்.
இந்த நிலையில் தேர்வை எழுதாத, தோல்வியை தழுவிய மாணவ-மாணவிகளுக்கு அடுத்தகட்ட வாய்ப்பாக துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 24-ந்தேதி முதல் வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது.
இந்த துணைத்தேர்வை எழுத விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் வருகிற 16-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரையிலான நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதேபோல் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைத்துள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
- 39,983 மாணவர்களும், 18,013 மாணவிகளும் தோல்வி அடைந்த பாடங்களை எழுத விண்ணப்பித்தனர்.
- தமிழகம் முழுவதும் 194 மையங்களில் துணைத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை:
பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் உடனயாக தேர்வு எழுதி இந்த கல்வியாண்டிலே உயர்கல்வி தொடர வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு பள்ளிகளில் நேரடியாக படித்தவர்களும், தனித்தேர்வர்களும் விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.
அதன்படி 56 ஆயிரம் பேர் துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தனர். 39,983 மாணவர்களும், 18,013 மாணவிகளும் தோல்வி அடைந்த பாடங்களை எழுத விண்ணப்பித்தனர். அவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்வு நடத்த தேர்வுத்துறை திட்டமிட்டது.
தமிழகம் முழுவதும் 194 மையங்களில் துணைத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் துணைத்தேர்வு திட்டமிட்டபடி இன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மழையிலும் இத்தேர்வினை மாணவ-மாணவிகள் எழுதினர்.
- பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது.
- பிளஸ்-1 துணைத்தேர்வுகள் வருகிற ஜூன் 27-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரை நடைபெறும்.
சென்னை:
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. 8 லட்சம் பேர் எழுதிய இத்தேர்வில் 94 சதவீத பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு வருகிற 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும். துணைத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல பிளஸ்-1 துணைத்தேர்வுகள் வருகிற ஜூன் 27-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- வரும் 4ந் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளிக்குச்சென்று விண்ணப்பிக்கலாம்.
- தனித்தேர்வர்களும், அரசு தேர்வுத்துறையின் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
உடுமலை:
கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி பிளஸ் 2 துணைத்தேர்வு வருகிற 25 -ந்ேததி முதல் ஆகஸ்டு 1-ந்தேதி வரையிலும், பிளஸ் 1 தேர்வு, ஆகஸ்டு 2ந்தேதி முதல் 10-ந் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கு ஆகஸ்டு 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலும், துணைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அதில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், வரும் 4ந் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளிக்குச்சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனித்தேர்வர்கள், மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பலரும் ஆர்வமுடன் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்காதவர்கள் வரும் 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை கூடுதல் கட்டணம் செலுத்தி தக்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணை பாதுகாப்பாக வைத்திருந்து அதை வைத்து ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.புதிதாக தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களும், அரசு தேர்வுத்துறையின் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும், பிளஸ் 2வுக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு அட்டவணை மற்றும் விதிமுறைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றனர்.
- தேர்வில் தோல்வியடைந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை 25ந் தேதி முதல் துணைத்தேர்வு நடக்கவுள்ளது.
- 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்டு 2ம் தேதி முதல் துணைத்தேர்வு நடக்கவுள்ளது.
உடுமலை :
பிளஸ் 2 மற்றும்10-ம் வகுப்புகளுக்கு, துணைத்தேர்வு எழுத விரும்புவோர் வரும் 4ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கடந்த 20ந் தேதி 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 395 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர். இவர்களில் 23 ஆயிரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றனர். 10ம் வகுப்பு தேர்வை, 29 ஆயிரத்து, 631 பேர் எழுதினர். இவர்களில் 26 ஆயிரத்து 612 பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்வில் தோல்வியடைந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை, 25ந் தேதி முதல் ,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்டு 2ம் தேதி முதல் துணைத்தேர்வு நடக்கவுள்ளது.
இத்தேர்வு எழுத விரும்புவோர் ஜூலை, 4 ந் தேதிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்