search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகவேந்திரர்"

    • ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராகவேந்திரரை விரதமிருந்து வேண்டிக்கொள்ளுங்கள்.
    • பக்தர்கள் கேட்காததையும் தந்து அருள்பாலிக்கிறார் மகான்.

    கேட்டதும் பக்தர்களுக்கு அருளும் கற்பக விருட்சமாகத் திகழ்பவர் மகான் ஸ்ரீ ராகவேந்திரர். சுவாமிகள் தன் தவ பலத்தால் பல்வேறு அற்புதங்களைச் செய்தார். இதன் மூலம் அநேகர் அவரை நோக்கி வரத் தொடங்கினர். அன்பு ஒன்றையே தன் கொள்கையாகக் கொண்டு உபதேசம் செய்தார். துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்த மாஞ்சாலி கிராமமே இன்று மந்திராலயமாகப் போற்றப்படுகிறது. இங்குதான் மகான் ராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. 700 ஆண்டுகள் அந்த பிருந்தாவனத்தில் சூட்சுமமாய்த் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்வேன் என்ற சுவாமிகள் இன்றும் தன்னை வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார்.

    ராகவேந்திரா சுவாமிகளை விஷ்ணு பக்தரான பிரகலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். ராகவேந்திரா சுவாமிகளை பின்பற்றவர்கள் ராகவேந்திரா சுவாமிகள் தனது பக்தர்களுக்கும் ஆசியும் அருளும் புரிந்து கொண்டே இருக்கின்றார் என்று நம்புகிறார்கள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த ராகவேந்திர மகானை குருவாரத்தில், வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வணங்கித் துதித்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் மகான் ராகவேந்திரரின் பக்தர்கள்.

    மந்திராலய மகான் என்று போற்றப்படுகிறார் ஸ்ரீராகவேந்திரர். அமைதியும் தயாள குணமுமே பக்திக்கான எளிய வழிமுறைகள் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார். அமைதியாக இருக்க இருக்க அதுவே ஆன்மிகம் என்றும் அதுவே இறைவனை அடைவதற்கான வழி என்றும் நமக்குச் சொல்லி வழிகாட்டினார் பகவான் ஸ்ரீராகவேந்திரர்.

    'என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எல்லா வரங்களையும் நான் தருவேன்' என்பது ராகவேந்திரர் வாக்கு. இந்த அருள் நிறைந்த பொருள் நிறைந்த வார்த்தையை ராகவேந்திர மகான் எப்போது சொன்னார் தெரியுமா?

    மந்திராலயத்தில், ஜீவசமாதியில் இறங்கி முக்தி அடைந்தார் ஸ்ரீராகவேந்திரர். அப்படி ஜீவ சமாதியில் இறங்குவதற்கு முன்னதாக, தன் சீடர்களையும் பக்தர்களையும் பார்த்து பகவான் ராகவேந்திரர் அருளிச் சொன்ன வார்த்தைகள் இவை. சத்திய வார்த்தையாக இன்றைக்கும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    ராகவேந்திர மகானை யாரெல்லாம் மனமுருகி வேண்டுகிறார்களோ, எவரெல்லாம் விரதம் மேற்கொண்டு அவரை வேண்டுகிறார்களோ அவர்களுக்கு அவர்கள் கேட்டதையெல்லாம் தந்தருள்கிறார் ராகவேந்திரர். பக்தர்கள் கேட்காததையும் தந்து அருள்பாலிக்கிறார் மகான்.

    பிருந்தாவன நாயகனை, மந்த்ராலய மகானை, குரு ராகவேந்திரரை மனதார வேண்டுவோம். ஆத்மார்த்தமாக பூஜிப்போம். அற்புத மகான் ராகவேந்திரர் நம் வாழ்வில் பல அற்புதங்களையெல்லாம் நிகழ்த்தி அருளுவார்.

    தொடர்ந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராகவேந்திரரை விரதமிருந்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றித் தந்தருள்வார் பூஜ்யஸ்ரீ ராகவேந்திர மகான்!

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • சுசீந்திரம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஜகத்குரு ராகவேந்திரா கோவிலில் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது.
    • நிகழ்ச்சியில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஜகத்குரு ராகவேந்திரா கோவிலில் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ம் நாள் மாலை 4 மணிக்கு அலங்கார ஊர்தியுடன் மந்த்ராலயத்தில் இருந்து சிங்காரி மேளம் முழங்க பல்லக்கில் ராகவேந்திரர் பவனி வந்தார். நிகழ்ச்சியில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், சதீஷ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து சொல்லி வரவேண்டும்.
    • உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும்.

    ஓம் வெங்கட நாதாய வித்மஹே

    ஸச் சித்தானந்தாய தீமஹி

    தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத்

    ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம்.

    காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர்.

    இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

    உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர்.

    • ராகவேந்திரருக்கான விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும்.
    • இதுபோல் விரதம் கடைப்பிடித்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கும்.

    மகான் ஸ்ரீ ராகவேந்திரருக்கான விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். மகான் ஸ்ரீ ராகவேந்திரருக்கான விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும்.

    முதல் வியாழக்கிழமை காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து, தூய ஆடை அணிந்து கொண்டு அவரவர் விருப்பப்படி நெற்றியில் திருநீறு அல்லது சந்தனம், திருநாமம் அணியவேண்டும். பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம், மலர் சூட வேண்டும். நிவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம்.

    பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாத்தவேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும். மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக் கொண்டு எழுந்து நின்று

    பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய

    சத்ய தர்ம ரதாயச பஜதாம்

    கல்பவ்ருக்ஷாய நமதாம்

    ஸ்ரீ காம தேநுவே

    என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும். இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும். ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும்.

    அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை. ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில் திரவ பதார்த்தங்கள் அருந்தலாம். இரவில் சிறிதளவு பால் அன்னம் சாப்பிடலாம். இதுபோல் விரதம் கடைப்பிடித்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கும்.

    ×