என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒன்றியக்குழு கூட்டம்"
- வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு விரைவில் புதிய கட்டிடம் அமைக்க ஆவண செய்ய ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை வைத்தார்.
- மழைக்காலம் வருவதால் யூனியன் உட்பட்ட பகுதிகளில் பள்ளிக் கழிப்பறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும்
வடமதுரை:
வடமதுரை யூனியன் அலுவலகத்தில் தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் தனலட்சுமி கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கீதாராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாடியூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் செந்தில் மணிக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது. பின்னர் வடமதுரை யூனியன் உட்பட்ட பகுதிகளில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களுக்கு விரைவில் புதிய கட்டிடம் அமைக்க ஆவண செய்ய ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் கோரிக்கை வைத்தார். மலை கிராமமான மலைப்பட்டி பகுதியில் உள்ள பள்ளி கட்டிடங்கள் மழைக்காலங்களில் ஒழுகும் நிலையில் உள்ளதால், சீரமைக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் வெள்ளையன் கோரிக்கை வைத்தார்.
மழைக்காலம் வருவதால் யூனியன் உட்பட்ட பகுதிகளில் பள்ளிக் கழிப்பறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும் என்று சுக்காம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி கோரிக்கை வைத்தார். பின்னர் கவுன்சிலர்களுக்கு மாதம் தோறும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
- வாடிப்பட்டி யூனியன் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்தில் யூனியன் கமிஷனர் ரத்தின கலாவதி திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார்.
துணை சேர்மன் தனலட்சுமி கண்ணன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) வனஜா வரவேற்றார். கணக்கர் சங்கர் தீர்மான அறிக்கை வாசித்தார்.
இந்த கூட்டத்தில் யூனியன் கமிஷனர் ரத்தின கலாவதி திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார். 15-வது நிதி குழு வளர்ச்சி திட்ட பணிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மை, தோட்டக்கலை, போக்கு வரத்து உள்ளிட்ட பிறதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொறியாளர் ராதா நன்றி கூறினார்.
- ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
வாணியம்பாடி:
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் சங்கீதாபாரி தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு தீர்மானங்களின் மீது, ஒன்றிய குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கீதாபாரி பதிலளித்தார்.
உறுப்பினர்கள் கூறும்போது ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு ஊராட்சி செயலாளர்கள் உரிய மரியாதை வழங்குவதில்லை, ஊராட்சி செயலாளர்கள் தன்னிச்சையாக செயல்படுவது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது, எனவே ஊராட்சி மன்றத் செயலாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்றனர்.
அனைத்து ஊராட்சிகளிலும் இதே நிலை தொடர்வதாகவும், பல ஆண்டுகள் ஓரே ஊராட்சியில் ஊராட்சி செயலாளர்கள் பணிப்புரிவதால் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இதனால் அவர்களை மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
ஒரே ஊராட்சியில் பல ஆண்டு காலமாக பணி புரியும் ஊராட்சி மன்ற செயலாளர் பட்டியல் திரட்டப்பட்டு மற்ற ஊராட்சிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
- உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
காங்கயம் :
காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ் குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ராகவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் பேசியதாவது:- காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஊராட்சி சாலைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த சாலைகள் ஊராட்சி வசமே இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சாலை மேம்பாட்டு பணிகளுக்கான நிதியை ஊராட்சிகளுக்கு வழங்கி அதன் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களான செல்வம் ராமசாமி, தாபினி மைனர் பழனிசாமி, சுதா ஈஸ்வரமூர்த்தி, ஐயனார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- தீர்மானங்களுக்கு அங் கீகாரம் கோரப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆம்பூர்:
மாதனூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் ப.ச.சுரேஷ்குமார் தலைமையில் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் நடைபெற்றது. துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஒன்றிய பொதுநிதி செலவினங்கள், நிர்வாக மேம்பாடு குறித்த தீர்மானம் மற்றும் செலவினங்கள் குறித்த தீர்மானங்களுக்கு அங் கீகாரம் கோரப்பட்டது.
மேலும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறினார்கள். அதற்கு ஒன்றியக்குழு தலை வர் சுரேஷ்குமார் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், கிருஷ்ணன், அதிகாரிகள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சாலை மறியலிலும் ஈடுபட்டனர்
- அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக புகார்
சோளிங்கர்:
சோளிங்கர் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன் வரவேற்றார்.
கூட்டத்தில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இ-டெண்டர் விடப்பட்டது. இதில் அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி கவுன்சிலர்கள் 17 பேரும் திடீரென்று சோளிங்கர் - சித்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். பின்னர் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இ- டெண்டர் முறையில் அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என கூறி கூட்டத்தில் இருந்து தலைவர் கலைக்குமாரும் வெளிநடப்பு செய்வதாக கூறி விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
- காங்கயம் ஊராட்சி ஒன்றியப்பொறியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
காங்கயம் :
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக்குழுவின் சாதாரணக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர் முன்னிலை வகித்தார்.
இதில் ஊராட்சிப்பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைப்பது, குடிநீர்ப்பணிகளுக்காக மின்மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள், காங்கயம் நகர மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுதல் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ராகவேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காங்கயம் ஊராட்சி ஒன்றியப்பொறியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
- கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் தலைமை யில் நடந்தது. துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன் முன் னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இல.சீனிவாசன் புதிய வட்டார வளர்ச்சி லர் பாண்டியனை அறிமுகம் செய்து வரவேற்றார்.
அலுவக கூட்டத்தில் உறுப்பினர் கவிதாபாபு பேசுகையில், சுபான் ராவ்பேட்டையில் பக்க கால்வாய்களில் கழிவுநீர் முறையாக செல்லாததால் சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடும் அவல நிலை உள்ளது என்றார்.
ஜெயபிரகாஷ் பேசுகையில், கிராமப்பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்பு வழங்கப்படுவதாக கூறி பொக்லைன் எந்திரம் வைத்து பள்ளம் எடுக்கப்பட்டது. நன்றாக இருந்த சாலைகளை உடைத்து பள்ளம் எடுக்கப்பட்டதால் அங்கு மழை நீர் தேங்கிகுளம் போல காட்சியளிக்கிறது என்றார்.
துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன் பேசுகையில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூறும் புகார்களுக்கு உடனடியாக அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்ராபாளையம் ஒன்றியக்குழு உறுப்பினர் பகுதியான ஸ்ரீராம் நகர் பகுதியில் நாற்று நடும் போராட்டம் நடத்த தயாராக இருந்தார்கள் அவர்களை அழைத்து சமாதானம் பேசினேன். இது போன்ற நிலைகளை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது பகுதிக்கு தேவைகள் குறித்து பேசினார். அதைத்தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் படித்து நிறைவேற்றப்பட்டது.
- காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
- மேலாளர் ராஜேந்திரகுமார் நன்றி கூறினார்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.ஆணையாளர் ஹேமலதா வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கேசவன் முன்னி லை வகித்தார்.
கூட்டத்தில் 6-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் சொக்கலிங்கம், கடந்த மாதம் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் முகாமில் நரம்பியல் மருத்துவர் கலந்து கொள்ளாததால் சிவகங்கைக்கு செல்லு மாறு கூறியதால் மாற்றுத் திறனாளிகள் சிரமத்திற்குள் ளாயினர்.அனைத்து முன் னேற்பாடுகளுடன் முகாமை நடத்த வேண்டும் என்றார்.
10-வது வார்டு உறுப்பினர் தேவிமீனால் பேசுகையில்,ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவர்க ளிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற இருப்பதால் வீடு களை காலி செய்ய சொல் கிறார்கள். வறுமையில் வாடும் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.சங்கரா புரம் பகுதிகளில் மின்கம்ப ங்கள் பல பழுதாகி உள்ளன. அவற்றை மாற்ற வேண்டும் என்றார்.
இதற்கு பி.டி.ஓ கேசவன் பதிலளிக்கையில், ஆக்கிர மிப்புகளை அகற்றுவது அவசியம். புதிதாக கட்ட ப்பட்டு வரும் அரசு அடுக்குமாடி குடியிருப்பு களில் முன்னுரிமை வழங்க வழி செய்யப்படும் என்றார்.
அ.தி.மு.க. கவுன்சிலர் சுப்பிரமணியன் பேசு கையில், மழைக்காலத்திற்கு முன்பாக பழுதடைந்து உள்ள சாலைகளை புதிதாக அமைக்க வேண்டும் என்றார்.
தலைவர் சரண்யா செந்தில் நாதன் பேசுகையில், உறுப்பினர்கள் தங்கள் பகுதி களில் குளம், கண்மாய் கரைகளை பலப்படுத்தவும், தகுந்த முன்னேற்பாடுகள் உள்ளனவா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மின்கம்பங்கள் சரி செய்யப்பட வேண்டும். மழைக்காலம் தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து ரூ.ஒரு கோடி மதிப்பில் சாலை களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்ற ப்பட்டன.
இதில் துணைத்தலைவர் கார்த்திக்,உறுப்பினர்கள் ஜெயந்தி,திவ்யா, தமிழ்செல்வி,தேவிமீனாள்,சுப்பிரமணியம்,ராமச் சந்திரன், சொக்கலிங்கம் உள்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.மேலா ளர் ராஜேந்திரகுமார் நன்றி கூறினார்.
- சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பிலான திட்டங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழுத்தலைவர் திவ்யா பிரபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமணராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரத்து 657 மதிப்பிலான திட்டங்கள் செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது, 6-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் உதயசூரியன் பேசும்போது, ஒன்றிய குழு கூட்டத்திற்கு ஏனைய துறை சார்ந்த அதிகாரிகள் வருவதில்லை. எனவே அந்த துறை சார்ந்த நலத்திட்டங்கள் என்ன? அரசு அறிவித்த திட்டங்கள் எவை? என்று எங்களுக்கு தெரியாததால் எங்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரிவிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவரின் கேள்விக்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணிய ராஜா, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை இனிவரும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என கூறினார்.
முடிவில் மேலாளர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.
- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
- முக்கிய பிரச்சனைகள் உள்ள கிராமமாக தேர்ந்தெடுத்து அதனுடைய முக்கிய அடிப்படைகளை நிறைவேற்றி வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய வளாக கூட்டரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ஆண்டிமடம் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது.
ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேன்மொழி வைத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்ற தீர்மான நகலை கணக்கர் பாக்யராஜ் வாசித்தார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வரவு, செலவு கணக்கு குறித்தும், எங்களுடைய ஊராட்சிகளில் வரும்பணிகளை எங்களுக்கு தராமல் அவர்களுக்கு தேவையான பஞ்சாயத்துகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எங்களிடம் தகவல் தெரிவிக்காமல் அவர்களே முடிவு செய்து வருவதாக கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இது மாவட்ட ஆட்சியர் உடைய தலைமையில் கிராமத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகள் உள்ள கிராமமாக தேர்ந்தெடுத்து அதனுடைய முக்கிய அடிப்படைகளை நிறைவேற்றி வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதனால் கூட்டத்தில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதம் நடத்தினர். கூட்டத்தில் அனைத்து கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) அழகானந்தம் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்