search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது கடைகள் மூடல்"

    • வழக்கமாக மது வாங்க வரும் மது பிரியர்கள் கடை அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்‌.
    • கடந்த தேர்தலின் போது மதுக்கடைகள் தனியார் வசம் இருந்தது.

    திருப்பதி:

    ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு மது பாட்டில்கள் வழங்கி வருகின்றனர்.

    தொண்டர்கள் மது பாட்டில் வழங்கினால் மட்டுமே பிரசாரத்திற்கு வர முடியும் என கராராக கூறி விடுகின்றனர்.

    பிரசாரத்திற்காக மதுபானங்களை வாங்கி அள்ளி சென்று விடுகின்றனர். இதனால் மதியத்திற்குள் மதுபாட்டில்கள் விற்று தீர்ந்து விடுகின்றன.

    குறிப்பிட்ட அளவு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படுவதால் விற்பனை இலக்கை எட்டியவுடன் மதியத்திற்கு மேல் கடை ஊழியர்கள் மது கடையை அடைத்து விட்டு செல்கின்றனர்.

    வழக்கமாக மது வாங்க வரும் மது பிரியர்கள் கடை அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    ஆந்திராவில் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.70 கோடிக்கு மது விற்பனை ஆகிறது.

    கடந்த தேர்தலின் போது மதுக்கடைகள் தனியார் வசம் இருந்தது. இதனால் மது கடை நடத்துபவர்கள் முன்கூட்டியே மதுபாட்டில்களை ஸ்கேன் செய்து இரவு வரை விற்பனை செய்தனர்.

    தற்போது மது கடைகள் அரசு வசம் உள்ளதால் தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகளுடன் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

    • காமராஜர் பிறந்தநாளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என - தமிழ்நாடு நாடார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
    • தேனி மாவட்ட கலேக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் அரசு அலுவலகங்களில் காமராஜர் படம் வைத்து விழா நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழ்நாடு நாடார் சங்க மாவட்ட தலைவர் ஜெய்முருகேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.

    மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    அவருடைய பிறந்தநாளை தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. தேனி பங்களாமேட்டில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும். காமராஜர் பிறந்தநாளில் அரசு மதுபான கடைகள், தனியார் மதுபான பார்களை மூட வேண்டும். அரசு அலுவலகங்களில் காமராஜர் உருவப்படம் வைத்து விழா நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.


    ×