search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி அலுவலகம்"

    • விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் பொன்னுச்சாமி புகார் அளித்தார்.
    • ராஜ்குமாரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எத்திலோடு ஊராட்சி மன்ற அலுவலகம் எத்திலோடு கிராமத்தில் உள்ளது. இந்த ஊராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கருத்தாண்டி பட்டியைச் சேர்ந்த ஷகிலா.

    இவரது கணவர் ராஜ்குமார் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊராட்சி செயலாளர் பொன்னுச்சாமியை வெளியே வரும்படி கூறினார். அவர் எதற்காக தன்னை வெளியே வரச்சொல்கிறீர்கள் என கேட்டதற்கு தான் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட போகிறேன் என்றார்.

    இதற்கு பொன்னுச்சாமி, ராஜகுமாரிடம் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் என கூறினார். இருந்தபோதும் ராஜ்குமார் ஊராட்சி செயலாளரை அலுவலகத்தை விட்டு வெளியே வரச் சொல்லி அனுப்பிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பூட்டினார்.

    இது குறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் பொன்னுச்சாமி புகார் அளித்தார். அதன்பேரில் ராஜ்குமாரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    • மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நீல நிறத்திலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • 1,509 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் ஓர் முன்னோடி முயற்சியாகும். இந்த திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேகமாக நீல நிறத்திலான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மாநில அளவில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 767 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1,509 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகளை தீர்க்கும் விதமாக மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், இருமாதங்களுக்கு ஒருமுறை 2-வது செவ்வாய்க்கிழமை ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் முன்னிலையில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன்தொடர்ச்சியாக நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு நீலநிற வேலை அட்டையை பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • அலுவலர் ஒருவர் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு இருந்ததை பார்த்துள்ளார்.
    • சாரை பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு படையினர் பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் கரூர் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. அருகிலேயே வேளாண்மை துறை அலுவலகம்,கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நில வருவாய் அலுவலர் அலுவலகம், சட்டமன்றத் தொகுதி அலுவலகம்,பயணியர் விடுதி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளன.

    நேற்று காலை 10 மணி அளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் அருகே 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று இருந்தது. அந்த வழியாக சென்ற அலுவலர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    ×