search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏஞ்சலோ மேத்யூஸ்"

    • டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது.

    ஆண்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

    நடப்பு உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பிடித்த இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்திடம் தோல்வியை தழுவியது.

    நேபாளத்திற்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ள இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. நாளை நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் அந்த அணி நெதர்லாந்துடன் மோதுகிறது.

    இந்நிலையில், லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து இலங்கை சீனியர் வீரரும், முன்னாள் கேப்டனுமான ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியதாவது:

    டி20 உலகக் கோப்பை தொடரில் நாங்கள் தோல்வியடைந்தது மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் கீழே தள்ளிவிட்டோம்.

    எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்காக எங்களால் மகிழ்ச்சியை தரமுடியாதது வருத்தம் அளிக்கிறது. அதற்காக ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இப்படி நடக்கும் என கொஞ்சம்கூட நினைக்கவில்லை.

    சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாதது சற்றும் எதிர்பார்க்காதது. ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் சுற்றுப் பயணத்திலும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதேபோல் உலகக் கோப்பையைப் பொறுத்தவரை எந்த அணியையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது.

    இதற்கு முன் நாங்கள் விளையாடிய பிட்சுகளுக்கும், டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பிட்சிற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. ஆனால் இலங்கை அணியின் தரத்திற்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. நேபாளம் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது எதிர்பாராதது என கூறினார்.

    • அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸிற்கும் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • ரிஸர்வ் வீரர்கள் பட்டியலில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம் பெற்றுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் 20 அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

    இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை இன்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது,

    அதன்படி 15 பேர் அடங்கிய இந்த அணியின் கேப்டனாக ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளார். சரித் அசலங்கா துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளர். மேலும் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸிற்கும் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை அணிக்காக 6-வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ளார்.

     

    டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி:

    வனிந்து ஹசரங்க (கேப்டன்), சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்செயா டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துனித் வெல்லலாகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷா பதிரானா, மற்றும் தில்ஷன் மதுஷங்க.

    ரிஸர்வ் வீரர்கள்: அஷித ஃபெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியானகே.

     

    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் மேத்யூஸ் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் 7000 ரன்களை எடுத்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற இலங்கையின் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் முறியடித்துள்ளார்.

    இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் இடம் பெற்றிருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்நிலையில் இலங்கை அணியின் ஜாம்பவானான சனத் ஜெயசூர்யாவின் சாதனையை மேத்யூஸ் முறியடித்துள்ளார்.


    ஜெயசூர்யா 110 டெஸ்டில் 6973 ரன்கள் எடுத்த நிலையில், மேத்யூஸ் 101 டெஸ்டில் 7000 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ஏஞ்சலோ மேத்யூஸ் 13 சதம், 38 அரைசதங்களை அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் குமார் சங்ககரா (12,400) முதலிடத்திலும், ஜெயவர்த்தனே (11,814) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

    • இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் 100 டெஸ்ட் போட்டிக்கான பட்டியலில் இணைந்தார்.
    • இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேத்யூஸ் 6.876 ரன்கள் எடுத்துள்ளார்.

    கல்லே:

    பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேத்யூஸ் 6.876 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதையடுத்து, போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ஏஞ்சலோ மேத்யூசுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    மஹேலா ஜெயவர்த்தனே (149), குமார் சங்கக்கரா (134), முத்தையா முரளீதரன் (132), சமிந்தா வாஸ் (111), சனத் ஜெயசூர்யா (110) ஆகியோர் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ளனர்.

    • முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

    இலங்கை அணி ஆஸ்திரேலியாவுடன் மூன்று வடிவிலான தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடிய இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பதிலாக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார். இரண்டாவது இன்னிங்சில் பெர்னாண்டோ 12 மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×